ஜன்னல்களில் நீர் கசிவதைத் தடுக்கலாம்!

மழைக்காலங்களில் உங்கள் வீட்டு ஜன்னல் வழியே நீர் கசிகிறதா? சுவரும், தரையும் ஈரக்கசிவால் பாழாகிறதா? இதோ அவற்றிற்குத் தீர்வு !!


104
21 shares, 104 points

மழைக்காலம் என்றால் வெளியே சென்றால் மட்டுமல்ல வீட்டுக்குள் இருந்தாலும் பிரச்சனைகள் தேடி வரும். அவற்றுள் ஒன்று தான் வீட்டின் சில இடங்களில் நீர் கசிவது. குறிப்பாக ஜன்னல் இடுக்குகளில்.மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வீட்டைத் தயார் படுத்தி விட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்க முடியும். மழைக்காலம் ஆரம்பித்த பிறகு, அடித்துப்பிடித்து அனைத்தையும் சீர் செய்வதற்குப் பதிலாக இப்போதே சீர் செய்வது நல்லது.

இது உங்கள் வீட்டு ஜன்னல்களில் நீர்க் கசிவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் கட்டுரை.

கல்கு துப்பாக்கி

‘கல்கு துப்பாக்கி’களைப் (Caulk guns) பயன்படுத்தி ஜன்னல்களின் சட்டகத்தில் இருக்கும் இடைவெளிகளை அடைக்கலாம். சிலிக்கோன், சிலிக்கோன் லேட்டக்ஸ், ரப்பர் போன்ற பொதுவான கலவைகளைப் பயன்படுத்தியும் ஜன்னல்களில் நீர்க் கசிவதைத் தடுக்கலாம்.

கல்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது எளிமை தான், நாமே பயன்படுத்தலாம் என்றாலும் தொழில்முறை வல்லுநர்கள் இந்தப் பணியைச் சிறப்புடன் மேற்கொள்ள முடியும். இந்த கல்கு கலவைகள் சரியாக ஜன்னல்களில் பொருந்துவதற்கு 24 மணி நேர கால அவகாசம் தேவைப்படும்.

அதனால், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே இவற்றை உபயோகிப்பது சிறந்தது. கல்கு கலவைகளைப் பொருத்துவதற்கு முன் ஜன்னல்களின் சட்டங்களை நன்றாகத் தண்ணீரில் சுத்தப்படுத்தி உலர்ந்த பிறகு பயன்படுத்த வேண்டும் .

‘வெதர்ஸ்ட்ரிப் டேப்’

‘கல்கு’ துப்பாக்கியைப் போல ‘வெதர்ஸ்ட்ரிப் டேப்’பைப் (Weatherstrip Tape) பயன்படுத்தியும் ஜன்னல்களில் நீர்க் கசிவதைத் தடுக்கலாம். ஜன்னல்களின் பலகைகள், சட்டகங்கள், கதவுகள் என நீர்க் கசியும் இடங்களில் இந்த ‘வெதர்ஸ்ட்ரிப் டேப்’பைப் பொருத்தலாம். இந்த டேப்பை ஜன்னல்களின் உட்புறத்தில் பொருத்தினாலும் தோற்றம் பாதிக்கப்படாது.
ரப்பர், ‘ஃபோம்’, ‘ வினைல்’ போன்ற பொருட்களில் இந்த ‘வெதர்ஸ்ட்ரிப்ஸ்’ தயாரிக்கப்படுகின்றன. உங்களுடைய ஜன்னலுக்குப் பொருந்தும் ‘வெதர்ஸ்ட்ரிப்’பைத் தேர்ந்தெடுக்கவும். சாதாரண டேப்பை ஒட்டுவதைப் போல, இந்த டேப்பை ஜன்னல்களில் எளிமையாக ஒட்டி விடலாம். இந்த ‘வெதர்ஸ்ட்ரிப் டேப்ஸ்’ ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

சட்டகத்தை மாற்றலாம்

பழைய ஜன்னல்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள், இப்போது மழை நீர் கசியாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும் யுபிவிசி, உலோக ஜன்னல்களைப் பயன்படுத்தலாம். இந்த ஜன்னல்களில் சட்டகப் பகுதிகள் உட்புறப் பிரிவுகளுடன் வடிவமைக்கப்படுகின்றன. இந்தப் பிரிவுகளில் தேங்கும் மழை நீர், வீட்டுக்குள் வராமல் வெளியேறும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஃபோம் அடைப்புகள்

ஜன்னல்களில் இருக்கும் ஓட்டைகளை அடைப்பதற்கு ‘ஃபோம் ஸ்ப்ரே’யைப் (Foam Spray)’ பயன்படுத்தலாம். ‘கல்கு’ கலவைகளைப் போல ‘ஃபோம்’ துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஜன்னல்களின் ஓட்டைகளை அடைக்கலாம். கல்கு கலவை, வெதர்ஸ்ட்ரிப் ஆகியவற்றை விட இந்த ‘ஃபோம்’ கலவை சிறப்பானது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், பயிற்சி இல்லாமல் ‘ஃபோம்’ துப்பாக்கியைப் பயன்படுத்துவது நல்லதல்ல. தொழில்முறை வல்லுநர்களைப் பயன்படுத்துவது தான் பாதுகாப்பானது.

ஜன்னல் பாம்புகள்

உடனடியாக ஒழுகும் ஜன்னல்களைச் சரி செய்ய நினைப்பவர்கள் ஜன்னல் பாம்புகளைப் பயன்படுத்தலாம். இந்த ஜன்னல் பாம்புகளை எளிமையான முறையிலேயே தயாரிக்கலாம். நீளமான குஷன் போன்ற டியூப்களைத் துணியால் தயாரிக்க வேண்டும். தண்ணீரை உறியும் தன்மையுடைய பருத்தித் துணிகளைப் பயன்படுத்துவது தான் ஏற்றதாக இருக்கும். அந்தத் துணிக்குள் நீரை உறிஞ்சும் தன்மையுடைய பொருட்களான மணல், அரிசி போன்றவற்றைப் போடலாம். ஜன்னல் பாம்புகள் தயார். இவற்றை ஜன்னல்களின் கீழே தண்ணீர் வழியும் இடங்களில் போட்டு வைக்கலாம்.

Image Credits : homele.ru

 

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

104
21 shares, 104 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.