கலைஞருக்காகவே பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!!

திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் திரைப்படத்தின் வெற்றியை ஒவ்வொன்று தீர்மானிக்கும். அப்படி ஒரு காலத்தில் கலைஞரின் வசனங்களுக்காக மகத்தான வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஏராளம். இந்த நடிகர் நடித்தால் நான் படம் தயாரிக்கிறேன் என்று கூறும் தயாரிப்பாளர்கள், கலைஞரின் வசனம் என்றால் நான் தயாரிக்கிறேன் என்று கூறிய காலமும் உண்டு.


128
24 shares, 128 points

கலைஞர் கருணாநிதியின் அனல் பறக்கும் சினிமா வசனங்கள் காலத்தால் அழியாதது. கருணாநிதி எனும் இளைஞர் திரை உலகில் அடி எடுத்து வைத்த காலம் முதல் அத்தனையும் தலைகீழாய் போனது. அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்? எனத் தொடங்கி, எத்தனை எத்தனை அனல் பறக்கும் வசனங்கள்? இதோ கலைஞரின் வசனங்களுக்காகவே பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்.

1. மந்திரி குமாரி

மந்திரி குமாரியின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகாவும் மந்திரியின் மகள் அமுதாவும் ஆருயிர் தோழிகள்.

தளபதியை (எம்.ஜி.ஆர்) ராஜகுமாரி காதலிக்கிறாள். மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன்.

mandhiri kumariகொள்ளையடிப்பது ஒரு கலை‘ என்பது அவன் கொள்கை. மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத் துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி தளபதி மீது விழுகிறது.

தன் கணவன் கொடியவன், கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான். வாராய் நீ வாராய்… என்று பாட்டுப்பாடியபடியே, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, ‘சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா. அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

கரவொலிகளையும், சர்ச்சைகளையும் ஒரு சேரப் பெற்றன கலைஞரின் வசனங்கள்.

இந்தத் திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிக்கத் தக்கவை. ஒரு பெண் தன் கணவனைக் கொல்வது போன்ற காட்சியை வைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். படம் தோல்வியடையும் என்று தணிக்கைத் துறையினர் எச்சரித்த போதும், வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது மந்திரி குமாரி திரைப்படம்.  கரவொலிகளையும், சர்ச்சைகளையும் ஒரு சேரப் பெற்றன கலைஞரின் வசனங்கள்.

2. பராசக்தி

ஓடினாள்…. ஓடினாள்…. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்ற கலைஞரின் பராசக்தி வசனம் மிகவும் புகழ்பெற்ற வசனமாகும்.

முதல் படமான பராசக்தியில் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் சிவாஜி கணேசன் தூள் கிளப்பியிருப்பார். இப்படத்தில் பணத்தையெல்லாம் இழந்த சிவாஜி கணேசன் சாலையோரமாய் படுத்துத் தூங்கும்போது ஒரு போலீஸ்காரர் தட்டி எழுப்புவார்.

“டேய்.. நீ பிக்பாக்கெட்டா?”

“இல்லை.. எம்ப்ட்டி பாக்கெட்”

“ஏண்டா.. முழிக்கிறே?”

“தூங்குறவனை எழுப்பினால் முழிக்காம என்ன பண்ணுவான்?” என்பது போன்ற ரசிக்க வைக்கும் வசனங்கள் இப்படத்தில் ஏராளம்.

கதாபாத்திரங்களுக்கு பெயர் வைப்பதிலிருந்து வசனங்கள் வரை அனைத்திலும் தனது உணர்வுகளை கருணாநிதி வெளிப்படுத்தியிருப்பார். “கோவில் கூடாது என்று சொல்லவில்லை. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது” என்ற வசனமும், “அடேய் பூசாரி.. அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்ற கேள்வியும் இந்த திரைப்படம் வந்து 65 ஆண்டுகள் கடந்த பிறகும் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.

barasakthiஒரு வீட்டின் திண்ணையில் படுத்திருந்த சிவாஜி மீது, அந்த வீட்டுக்காரர் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டுவார். அதற்கு சிவாஜி, ‘அப்படியே சோப்பு இருந்தா கொடுங்க. குளிச்சி நாலு நாளாச்சி’‘ என்பார். நகைச்சுவை கலந்த உடனடி பதிலடியை சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கடைப்பிடித்தவர் கலைஞர் மு.கருணாநிதி. தமிழின் அழகை, வீச்சை, ஆளுமையைத் திரை உரையாடல்களால் வெளிப்படுத்தியவர்களில் முதன்மை இடம் அவருக்கே உரியது.

கிட்டத்தட்ட 62 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி, யாராலும் எட்டவியலாத சாதனைகள் புரிந்திருக்கும் கலைஞருக்கு, தான் எழுதியதில் பிடித்த வசனம் பராசக்தி திரைப்படத்தில் வரும், ” மனசாட்சி உறங்கும் நேரத்தில், மனக்குரங்கு ஊர் சுற்ற சென்று விடுகிறது.” என்பது தானாம்.

3. மனோகரா

மனோகரா திரைப்படத்தில், “பொறுத்தது போதும் பொங்கி எழு..” என்று தாய் கண்ணாம்பாவும், என் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்கிற மகன் சிவாஜியும் கலைஞரின் வசனத்தை போட்டிக் கொண்டு பேசியிருப்பர். இந்த வசனத்தை கேட்கும் ரசிகர்களுக்கு தனி வீரம் வரும் அளவுக்கு அதில் உயிரோட்டம் இருக்கும்.

manogaraகலைஞர் வசனம் எழுதிய திரைப் படங்களில், மனோகரா தான் உச்சகட்டம் என்றால் மிகையாகாது. தீ பறக்கும் வசனங்கள், அதை உணர்ச்சி பொங்க பேசும் சிவாஜி இவை இரண்டே போதும். ஆனால் அதற்கும் மேலாக சிவாஜிக்கே சவால் விட்ட கண்ணாம்பா, பிய்த்து உதறிய டி.ஆர். ராஜகுமாரி என்று கலைஞரின் வசனத்திற்கு உயிரூட்டியிருப்பார்கள் கதாபாத்திரங்கள். வசனங்களுக்காக மட்டுமன்றி கதாபாத்திரங்களின் உணர்ச்சி பொங்கும் உச்சரிப்புகளை ரசிக்கவும் தவற விடக் கூடாத திரைப்படம் மனோகரா.

முதன்முதலில் ஒரு சினிமா கதை வசனம் புத்தகமாக வெளி வந்தது என்றால் அது மனோகரா படத்திற்கு தான்.

மனோகரா மகத்தான வெற்றி பெற்ற படம். திரையில் மட்டுமல்ல. வேறு ஒரு சாதனையும் படைத்தது. முதன்முதலில் ஒரு சினிமா கதை வசனம், புத்தகமாக வெளி வந்தது என்றால் அது மனோகரா படத்திற்கு தான். அந்தப் புத்தகமும் விற்பனையில் சக்கைப் போடு போட்டது.

4. பூம்புகார்

சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகியின் வரலாறு பூம்புகார் என்ற திரைப்படமாக வெளியானது. எஸ்.எஸ்.ராஜேந்திரன் கோவலனாகவும் விஜயகுமாரி கண்ணகியாகவும் நடித்திருந்த இந்தப் படத்தில் தன் வசனங்களால் ஒரு புதிய புரட்சியையே உண்டு பண்ணியிருப்பார் கலைஞர். படத்தின் சிறப்பே கலைஞரின் தூய தமிழ் வசனங்கள் தான் .

படத்தின் முன்பகுதியில் சிலப்பதிகாரம் உருவான வரலாற்றையும், பூம்புகாரின் பழங்கால சிறப்பையும் கூறி படத்தை துவக்கி வைப்பார் கருணாநிதி. அவரது தூய தமிழ் வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்தியது. பராசக்தி படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற காட்சி போன்று பாண்டியன் நெடுஞ்செழியன் அரசவையில் கண்ணகி நீதி கேட்டு சிலம்பு வீசிய காட்சி அன்று மட்டுமல்ல இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது.

“யார் கள்வன் என் கணவன் கள்வனா? அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர்.”

“நல்லான் வகுத்ததா நீதி? இந்த வல்லான் வகுத்ததே நீதி.”

“இது கோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை. இது கோவலன்தேவியின் சிலம்பு.”

“நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே! உனக்கு செங்கோல் எதற்கு? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு?” இப்படிப்பட்ட அனல் தெறிக்கும் வசனங்கள் காலத்தை வென்று நிற்கின்றன.

5. மறக்க முடியுமா ?

அரும்பு முதல் கருகிய மலராகும் வரை அல்லல்பட்டு அழிகின்ற பெண் ஒருத்தியின் கண்ணீரால் தீட்டப்பட்டதே இந்த சித்திரம் என்கிறார் கலைஞர்

ஒரு சகோதரி, இரு சகோதரர்கள் சிறு வயதிலேயே அனாதை ஆகின்றனர். விதி வசத்தால் அவர்கள் பிரிய நேரிடுகிறது. அந்தப் பெண் வளர்கிறாள். அவள் வாழ்வில், அடி மேல் அடி விழுகிறது.

ஒரு கட்டத்தில், வேறு ஒரு வீட்டில் வசிக்கும் அவளது சகோதரன் குடிபோதையில், அவள் தன் சகோதரி எனத் தெரியாமல் அணுகுகிறான்.அவளுக்கோ அவன் சகோதரன் எனத் தெரியும். அதை அவனுக்கு அவள் எப்படி புரிய வைக்கிறாள்? இது போன்ற பல உணர்ச்சிகரமான காட்சிகளும், வசனங்களும் படத்தை வெற்றி படமாக்கின.

இந்தப் படத்தைப் பார்த்துத் தான் “யாதோன் கி பாரத்” படம் எடுத்தார்களா என்ன? சிறு வயதில் பிரியும் சகோதர சகோதரிகள், குடும்பப் பாட்டு, ரயில் வண்டியில் பிரியும் குழந்தைகள், அக்கா தம்பிகள் சந்திக்கும்போது காகித ஓடம் பாட்டு பின்னணி இசை என்று பல முறை பார்த்திருக்கும் க்ளிசே காட்சிகள் எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

ஒரு சமூகப் படமாக, கலைஞரின் கதை, வசனத்தில் வெளியாகி அந்தக் காலத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மறக்க முடியுமா? தவற விடாமல் பாருங்கள் உங்களால் கண்டிப்பாக மறக்க முடியாது.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

128
24 shares, 128 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.