இளையராஜா 75: இசையுலக பிரம்மாவின் கலைநிகழ்ச்சி மற்றும் 25 சுவாரசிய தகவல்கள்

இளையராஜா பற்றி நீங்கள் அறிந்திராத 25 விஷயங்கள்!!


197
31 shares, 197 points

கர்நாடக சங்கீதத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை கரம் பிடித்து செம்மண்ணிற்கு இழுத்து வந்தவர் இளையராஜா. கிராமப்புற பாடல்களுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்களுள் மிகமுக்கிய அங்கம் வகிக்கும் இசைஞானியின் சாதனைகளை நினைவுகூரும்   விதமாக வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதி தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராகதேவனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது. இதற்காக ஹங்கேரியிலிருந்து இசைக்குழு ஒன்று சென்னை வந்துள்ளது.

ilayaraja-t-nagar-chennai-music-directors-43gll1f
Credit: samayam

இசையின் ராஜா

பழைய இசையின் தழுவல்கள் வந்த காலம் போய் பழைய இசையை அப்படியே புதுப்பிக்கும் இதே காலத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் இசை மடையைத் திறந்துவிட்டவர் இளையராஜா.

 1. கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார மேடைகளில் பாடும் தனது அண்ணன் பாவலருடன் தனது இசைப் பயணத்தைத் துவங்கினார் இளையராஜா. துவக்கத்தில் பெண்குரலில் தான் பாடியிருக்கிறார்.
 2. அவரது சொந்த ஊரான பண்ணைபுரத்தில் தன் தாய்க்காக கோவில் ஒன்றை கட்டியிருக்கிறார் இளையராஜா. அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று.
 3. யாருக்காகவும் சிபாரிசு செய்யாத, ஏற்றுக்கொள்ளாத இளையராஜா சங்கிலி முருகனுக்கு சிபாரிசின் பெயரில் வாய்ப்பளித்தார். ஏனெனில் சிபாரிசு செய்திருந்தது இளையராஜாவின் தாயார் சின்னத்தாய்.
 4. வறுமையின் தீரா அன்பில் இருந்த இளையராஜா கோவையில் 85 ரூபாய் விலைகொடுத்து, தான் வாங்கிய ஆர்மோனியத்தைத்தான் இன்றும் வைத்திருக்கறார். பல மேடைகளில் அவரே அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
 5. இந்திய வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் 56 படங்களுக்கு இசையமைத்த சாதனை இளையராஜாவையே சேரும்.
 6. இதுவரை சுமார் 6000 பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசையை வடிவமைத்திருக்கிறார். ஹே ராம், விருமாண்டி போன்ற படங்களுக்கு ஹங்கேரி குழுவினை வைத்தே மொத்த இசையும் பதிவு செய்யப்பட்டது.
 7. இசைக்கு இளையராஜா கொடுத்த முக்கியத்துவம் தான் இத்தனை புகழுக்கும் பின்னால் பிரம்மாண்டமாக நிற்கிறது.  இளையராஜா ‘காதலின் தீபம் ஒன்று’ பாடலுக்கான மெட்டை விசில் அடித்து அதைப்பதிவு செய்து குழுவினருக்கு அனுப்பிவைத்தார். மேலும் ஒரே நாளில் 20 பாடல்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு இசையின்மீது தீராக்காதல் கொண்டவர் இளையராஜா.
 8. உலகப்புகழ்பெற்ற லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் க்ளாசிகல் கிதார் பிரிவில் தங்கப் பதக்கம் வாங்கியவர் ராஜா சார்.
 9. சிம்பொனி இசையை உருவாக்க சராசரியாக ஆறுமாத காலம் ஆகும். ஆனால் இளையராஜா 13  நாட்களில் உருவாக்கி உலக இசை மேதைகளை வியப்பில் ஆழ்த்தினார். மேலும் ஆசியாவிலேயே முதன்முதலில் சிம்பொனியை இசைத்தவரும் இவரே.
 10. வெயில் காலத்தின் நாள் ஒன்றில் மழைபெய்ய வைக்கும் அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்து மழையை கொண்டுவந்த நாளில் இளையராஜா சாதாரண இசையமைப்பாளர் இல்லை என அவரது எதிர்ப்பாளர்களும் ஒப்புக்கொண்டார்கள். அப்படி உருவான பாடல்தான் அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள தூங்காத விழிகள் ரெண்டு.
 11. இசை உலகில் மிகவும் சிக்கலான கவுன்டர் பாய்ன்ட் நுட்பத்தை சிட்டுக்குருவி என்னும் படத்தில் வரும் என் கண்மணி உன் காதலன்  புகுத்தினார் இளையராஜா.
 12. ஹேராம் படத்திற்கு இன்னொருவர் போட்டிருந்த இசையை அப்படியே நீக்கிவிட்டு வாய் அசைவுகளுக்கு ஏற்றபடி புது இசையினை அமைத்து அனைவரையும் திக்குமுக்காடச் செய்தவர் இளையராஜா.
 13. கர்நாடக சங்கீதத்தில் கடினமான ரீதி கெளளை என்னும் ராகத்தை கவிக்குயில் படத்தில் சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடலில் அறிமுகப்படுத்தினார். இசை உலகின் ஜாம்பவானான பால முரளி கிருஷ்ணா அந்த ராகத்தை முதலில் கேட்டவுடன் பிரம்மித்துப்போனதாக பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
 14. இந்தியாவில் முதன்முறை எலெக்ட்ரிக் கிதாரை அறிமுகப்படுத்தியது ராகதேவன் தான். படம் காயத்ரி.
 15. 16 வயதினிலே படத்தில் இடம்பெற்றிருந்த ஆட்டுக்குட்டி முட்டையிட்டு  பாடல் செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்துள்ளதாகும். இளையராஜா அந்த ராகத்தில் அமைத்த முதல் மற்றும் கடைசிப் பாடலும் அதுதான்.
 16. பின்னணி இசைக்காக தேசியவிருது வாங்கிய முதல் இயமைப்பாளர் இளையராஜா தான்.
 17. செவ்வியல் ராகமான பஞ்சமுகியை உருவாக்கி இசை உலக ஜாம்பவான்களை திகைப்பில் ஆழ்த்தினார் இளையராஜா.
 18. தமிழ் திரைப்படத்துறையில் மிக முக்கிய இயக்குனரான மணிரத்னத்தின் தளபதி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ராக்கம்மா கையத்தட்டு  75 ஆண்டுகளில் அதிகமுறை அதிக மக்களால் கேட்கப்பட்ட பாடல் என பி.பிசி. செய்தி நிறுவனம் அறிவித்தது. மேலும் இதே படத்தில் உள்ள சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலில் 134 இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
 19. நூறாவது நாள் திரைப்படத்தின் ரீரெக்கார்டிங்கிற்கு இளையராஜா எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 12 மணிநேரம் தான்.
 20. இளையராஜா பின்னணி இசையமைக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது சிறைச்சாலை படத்திற்குத்தான். எத்தனை நாட்கள் தெரியுமா? 24 நாட்கள்.
 21. இளையராஜா இதுவரை 12 புத்தகங்களை எழுதியுள்ளார்.
 22. இந்திய அரசின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இளையராஜாவிற்கு அளிக்கப்பட்டது.
 23. 2018 ஆம் ஆண்டு இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
 24. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1994 ஆம் ஆண்டிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1996  ஆண்டும் இளையராஜாவிற்கு டாக்டர் பட்டம் அளித்து கவுரவப்படுத்தியது.
 25. இளையராஜாவின் ஆயிரமாவது படம் தாரை தப்பட்டை ஆகும். அந்தப்படத்திகு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெற்றார் இளையராஜா.
maestro ilayaraja
Credit: Samayam

இசையில் சின்ன அபஸ்வரம் வந்தாலும் அதைவிடாமல் திருத்திய பின்னரே சமாதானமடைவார். தன் கலையுலக வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பற்றி இந்த கலை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளப்போகிறார் இசைராஜா.

எங்கே? எப்போது?

இடம் : Y.M.C.A உடற்கல்வி மைதானம், நந்தனம்.

நாள் : பிப்ரவரி 2 & 3

நேரம்: மாலை 6 மணி

முதல் நாள் நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசையில் நடித்த நடிக, நடிகையர்கள் பங்கேற்கிறார்கள். இளையராஜாவின் இசைப்பயணம் குறித்து திரைப்பட ஆளுமைகள் பேச உள்ளனர். இரண்டாம் நாள் நிகழ்வில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கான முன்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது. சமீப காலமாக பல்வேறு கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவந்த இளையராஜா மிகப்பெரிய மேடையில் இசைவிருந்து தர இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

197
31 shares, 197 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.