விற்பனைக்கு வரும் 26 கார்கள் – பண்டிகைக் கால அதிரடி!!

இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்க இருக்கிறது. இதனால் பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றன. அடுத்த மூன்று மாதங்களில் 26 மாடல் கார்கள் விற்பனைக்கு வரும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.


137
24 shares, 137 points

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, தசரா, நவராத்திரி என வரிசையாகப் பண்டிகைகள் வரவிருக்கின்றன. இந்த பண்டிகைக் காலத்தை ஒட்டி சந்தையில் புதிய கார்களை விற்பனைக்கு இறக்க பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அடுத்த மூன்று மாதத்திற்குள் இந்தியாவில் 26 மாடல் கார்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தான் அதிகக் கார்கள் இந்தியாவில் விற்பனையாகின்றன. இதற்கு முக்கியக் காரணம் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளே. இதன் மூலம் பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கார்களை சந்தைப்படுத்தத்  தொடங்கியிருக்கின்றன.

cars
Credit: Livemint

அதிக விற்பனை!

2017 – ஆம் ஆண்டு செப்டம்பர்-டிசம்பர் மாத காலத்தில் இந்தியாவில் கார் விற்பனை வளர்ச்சி 7.29% ஆக இருந்தது. ஆனால் இந்த வருடம் வளர்ச்சி 13.32% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், வருடா வருடம் இந்தியாவில் மொத்த கார் விற்பனை வளர்ச்சி பெரிய அளவில் உயர்ந்து வருகிறது.

அறிந்து தெளிக !!
கார், பைக் மட்டுமல்லாமல் வீட்டு உபயோகப் பொருட்கள், ஆபரணங்கள், ஜவுளி எனப் பல துறைகளும் செப்டம்பர் – டிசம்பர் மாத காலங்களில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைப் பெறுகின்றன.

சென்ற வருடம் இதே மாதங்களில் வெளியான புதிய கார்களின் எண்ணிக்கை 17 மட்டுமே. ஆனால், இவ்வருடம் அந்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்திருக்கிறது. சுஸுகி நிறுவனம் தங்களது வேகன் ஆர் ஐ (Suzuki- Wagon R) ஸ்பெஷல் எடிஷனாக வெளியிடுகிறது. ஜெர்மெனியச் சேர்ந்த Porsche தங்களது சொகுசுக் காரான Cayenne யை விற்பனைக்கு கொண்டுவர இருக்கிறது.

map
Credit: Atlas
அறிந்து தெளிக !!
இந்தியாவின் மொத்த கார் விற்பனையில் 30% பண்டிகைக் காலங்களின் போதுதான் நடைபெறுகின்றன.

இந்தியாவில் அடுத்த மூன்று மாதங்களில் வெளியாக இருக்கும் சில முக்கியக் கார்களின் பட்டியலைக் கீழே காணலாம்.

மாதம்நிறுவனம்மாடல்விலை
(லட்சங்களில் )
ஆகஸ்ட்Maruti Suzuki2018 Maruti Suzuki Ciaz Facelift8-12
செப்டம்பர்FordFord Figo4.8-7.8
செப்டம்பர்FordFord Figo Aspire5-9
செப்டம்பர்NissanDatsun Go4.8
செப்டம்பர்NissanDatsun Go+5.3
செப்டம்பர்MahindraMahindra Marazzo10-11
செப்டம்பர்MahindraMahindra S 2019.99
செப்டம்பர்MahindraMahindra G4 Rexton20
செப்டம்பர்Mercedes-BenzMercedes-Benz E-Class All Terrain60-65
செப்டம்பர்PorschePorsche Cayenne235
அக்டோபர்HyundaiSantro3-5
அக்டோபர்Maruti SuzukiMaruti Suzuki Ertiga7-11
அக்டோபர்MahindraMahindra S2017-11
அக்டோபர்TataTata Tiago JTP5.99
அக்டோபர்TataTata Tiagor JTP6.99
நவம்பர்Maruti SuzukiMaruti Suzuki Wagon R4-6

இந்த வருடமும் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி இருக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்குப் பல கார்களில் இருந்து தங்களுக்குத் தேவையான காரினைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகமாகும். இந்த ஆண்டு விற்பனையில் முதலிடத்தைப்போகும் நிறுவனம் எது? மற்றும் எந்தக் கார் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

137
24 shares, 137 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.