ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் – ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி புதிய அதிரடி

0
14

ஏர்டெல் பயனர்கள், ஏ.டி.எம் கார்டு இல்லாமல் அனைத்து ஏ.டி.எம்-களிலும் பணம் எடுத்துக் கொள்ளும் வசதியை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் இனி கைபேசி மூலம் கார்டு இல்லா பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இந்த புதிய கார்டு  இல்லாப் பரிவர்த்தனை முறை “இன்ஸ்டன்ட் மனி ட்ரான்ஸ்பர் (Instant Money Transfer)” என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சேவையைப் பணம் எடுப்பதற்கும் மற்றும் பணம் அனுப்புவதற்கும் பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டன்ட் மனி ட்ரான்ஸ்பர் என்றால் என்ன?

இன்ஸ்டன்ட் மனி ட்ரான்ஸ்பர் (IMT) என்பதற்கு கார்டு இல்லாமல் உடனுக்குடன் பணப் பரிவர்த்தனை செய்யும் முறை என்பது பொருள்.  இந்தச் சேவைக்கான தளம் மற்றும் பயன்பாடு செயல்முறையைத் தனியார் நிறுவனம் ஒன்று  உருவாக்கியுள்ளது. இந்தச் சேவை இந்தியாவில் உள்ள 20,000 ஏ.டி.எம் களில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது, இந்த ஆண்டின் இறுதிக்குள் நிச்சயம் 1,00,000 ஏ.டி.எம்-களுக்கு மேல் ஏர்டெல் பேமெண்ட் வங்கி சேவை அமல்படுத்தப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

வாடிக்கையாளர்கள் எப்படி ஐஎம்டி மூலம் பணம் பெறுவது?

ஐஎம்டி சேவை அனைத்து ஏர்டெல் பேமெண்ட் வங்கி வாடிக்கையாளர்கள் உங்கள் கைபேசியில்  *400# என்று டைப் செய்து அல்லது உங்களுடைய மை ஏர்டெல் ஆப் (My Airtel App) மூலம் ஐஎம்டி சேவையை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

ஐஎம்டி சேவை வழங்கப்பட்டிருக்கும் ஏ.டி.எம்-களில் இருந்து உங்களின் பண பரிவர்த்தனைகளைச் செய்து கொள்ளலாம். ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி உங்களின் முதல் இரண்டு பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் தள்ளுபடி வழங்கியுள்ளது.

 

இந்தியாவின் முதல் ஐஎம்டி சேவை

SBI , ஆக்ஸிஸ் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற அனைத்துப் பெரிய வங்கிகளுடன் இணைந்து, ஐஎம்டி சேவையை இந்தியா முழுதும் ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்தச் சேவைக்கான உரிமம் இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவே முதல் ஐஎம்டி சேவை வழங்கும் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

5,00,000 பேங்கிங் மையங்கள்

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி தற்பொழுது ஐஎம்டி சேவையை, இந்தியாவின் 29 மாநிலங்களிலும் 5,00,000 பேங்கிங் மையங்களில் அமல்படுத்தவுள்ளது. இந்த வங்கி மையங்கள் கணக்குத் தொடங்குதல், பண வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல், பணம் பரிமாற்ற வசதி ஆகியவற்றை வழங்குகின்றது.

சமீபத்தில் தான் இந்திய அரசு, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கித் திட்டத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.