IMF தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியப் பெண்


117
38 shares, 117 points

சர்வதேசச் செலவாணி நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் (Gita Gopinath) நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்குப் பின்,  ஐஎம்எப்-க்கு நியமிக்கப்படும் 2-வது இந்தியப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத். மேலும் அந்த நிதியத்தின் முதல் பெண் தலைமைப் பொருளாதார வல்லுநர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீதா கோபிநாத், தனது இளநிலைப் படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்பு கடந்த 2001 – ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலையில் (Princeton University) பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும், வாஷிங்டன் பல்கலையில் எம்.ஏ பொருளாதாரப் பட்டமும் பெற்றார். அதன் பின் கடந்த 2001 – ஆம் ஆண்டு சிகாகோ பல்கலையில் துணை பேராசிரியராகச் சேர்ந்த கீதா கோபிநாத், 2005 – ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கு (Harvard University) மாறினார். தற்போது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேசக் கல்வி மற்றும் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக கீதா கோபிநாத் பணியாற்றி வருகிறார்.

இது குறித்து ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டைன் லகார்டே (Christine Lagarde) வெளியிட்ட அறிக்கையில், கீதா கோபிநாத் சர்வதேச அளவில் மிகச் சிறந்த பொருளாதார வல்லுநர். சிறந்த கல்வியாளர், ஆய்வாளர். தன்னுடைய திறமையையும், புத்திசாலித்தனத்தையும் பல்வேறு தளங்களில் நிரூபித்துள்ளார். பொருளாதார அணுகுமுறையில் சர்வதேச அனுபவம் கொண்டவர் கீதா கோபிநாத். அவரை தலைமைப் பொருளாதார வல்லுநராக ஐஎம்எப்-க்கு நியமிப்பதில் பெருமை கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். .

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

117
38 shares, 117 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.