இந்தியாவின் முதல் பிட் காயின் ATM திறப்பு

பெங்களூரில் உள்ள வணிக வளாகத்தில் இந்தியாவின் முதல் பிட்காயின் ATM திறக்கப்பட்டுள்ளது.


108
30 shares, 108 points

பெங்களூரில் உள்ள வணிக வளாகத்தில் இந்தியாவின் முதல் பிட்காயின் ATM திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிட் காயின் (Bit Coin) உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு (Crypto Currency) தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களுருவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கிரிப்ட்டோ கரன்சி ATM துவங்கப்பட்டுள்ளது.

விர்ச்சுவல் கரன்சி எனப்படும் பிட் காயின் புழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த முறையின் மூலம் பணம் யாரால் யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். மேலும், கிரிப்டோ காயின் புழக்கத்தால் 10 சதவீத விலை வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது முதன்முதலாக கிரிப்டோ கரன்சிகளுக்காகத் தனியாக ATM துவங்கப்பட்டுள்ளது. இந்த ATM-ல் டெபிட்/கிரெடிட் கார்டு ஸ்லாட் செயல்படாது. யூனோகாயின்,  யூனோடாக்ஸ் (Unodax) வாடிக்கையாளர்கள், 500 ரூபாய் நோட்டுகளாக ரொக்கமாக நாள் ஒன்றுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் போடலாம் அல்லது எடுக்கலாம். கணக்கில் உள்ள தொகை மூலம் கிரிப்டோ கரன்சிகளை வாங்கலாம்.

இந்த ATM மையம் யூனோகாயின் (Uno Coin) என்ற நிறுவனம் மூலம் நிறுவப்பட்டுள்ளது. தங்களிடம் 13 லட்சம் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், அவர்களது வசதிக்காக ATM திறக்கப்பட்டுள்ளதாக  யூனோகாயின் நிறுவனர் சாத்விக் விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற ATM மையங்கள் டெல்லி, மும்பையிலும் திறக்கப்படும் என்றும், இது வழக்கமான ATM எந்திரம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகக் கூடியவை அல்ல என்று மத்திய நிதியமைச்சகம் கூறியிருந்தாலும், அவை சட்டவிரோதமானவை என்றும் கூறவில்லை என சாத்விக் விஸ்வநாத் குறிப்பிட்டுள்ளார்.

முதலீடு செய்பவரே அதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளுக்கு பொறுப்பு என்பதோடு, பிட்காயின் தொழில் ஒழுங்குபடுத்தப்பட்டது அல்ல என்பதே அதன் பொருள் என்றும் சாத்விக் விஸ்வநாத் கூறியுள்ளார்.

 

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

108
30 shares, 108 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.