வலிமை வாய்ந்த பணத்தினைக் கொண்ட பட்டியலில் இருந்து இந்தியா வெளியேறுகிறது!!

0
10

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தை மையமாக வைத்து இயங்கி வருகிறது சர்வதேச நிதி ஆணையமான IMF (International Monetary Fund). இது அமெரிக்காவின் கருவூல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. உலகமெங்கிலும் 188 நாடுகள் இந்த அமைப்புடன் இணைந்துள்ளன. 1945 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் பெரும்பான்மையான பங்குகளை அமெரிக்கா தன் வசம் வைத்துள்ளது. உறுப்பு நாடுகளில் நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மை, பணவீக்கம் ஆகியவற்றைக் கண்காணித்து வருகிறது இந்த ஆணையம். இதன் கரன்ஸி மானிட்டரிங் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்க இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

IMF
Credit: VOA

வலிமை வாய்ந்த பணங்களைக் கொண்ட நாடுகள்

உலக நாடுகளின் பொருளாதாரத்தை அதிக அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும் நாடுகளின் பணங்களை இந்த அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தற்போது அந்தப் பட்டியலில் சீனா, தென்கொரியா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளின் நாணயங்கள் வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ருபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்த வண்ணம் இருப்பதால் இந்தப் பட்டியலிலிருந்து இந்தியா வெளியேற்றப்படும் நிலைமை உருவாகியுள்ளது.

rupee
Credit: Jagran

மதிப்பினை இழந்த இந்தியாவின் ருபாய்

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் பண மதிப்பு அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய வீழ்ச்சி இதுதான். இதன் காரணமாகத்தான் இந்தியாவின் ரூபாயை அமெரிக்க அரசு வலிமை வாய்ந்த பணங்களைக் கொண்ட பட்டியலில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அது நிகழும் பட்சத்தில் இன்னும் மோசமான பொருளாதாரப் பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

currency
Credit: The Statesman

இப்பிரச்சனை இந்தியா போன்று வளர்ந்துவரும் நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக அமையும். கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் இந்திய ரூபாயின் மதிப்பினைக் கடுமையாக பாதித்து வருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் தங்கம் இருக்கிறது.