சிக்கனமும் சேமிப்பும் தான் மகிழ்ச்சிக்கு வழிகள் – உலக சிக்கன தின சிறப்புப் பகிர்வு

இந்தப் பழக்கம் உங்களிடம் இருந்தால், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் உங்களுக்குக் கவலையே ஏற்படாது. அது தான் சேமிப்புப் பழக்கம். 


225
52 shares, 225 points

1924 அக்டோபர் 31 – ல், இத்தாலியின் மிலன் நகரில், சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் அக்டோபர் 31 – ஆம் தேதி ‘உலக சிக்கன தினம்’ கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அங்கு தான் முடிவு செய்யப்பட்டது.

எது சிக்கனம்?

சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். வளங்களை வீணடிக்காமல், திறமையாகக் கையாள்வதை இது குறிக்கும். அதாவது அவசியத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது. சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனாலேயே வங்கிகள், சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி அளித்து ஊக்கப்படுத்துகின்றன. சிக்கனமாக சேமிக்கப்பட்ட பணம் தான், எல்லா தொழில்களுக்கும் மூலதனம்.

world savings dayசெலவின் வகைகள்

பொதுவாக, செலவு செய்வதை கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம் என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

கஞ்சத்தனம் என்பது, அவசிய தேவைகளைக் கூட நிறைவேற்ற மனம் இல்லாதவர்களைக் குறிக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

சிக்கனம் என்பது தகுதியறிந்து செலவு செய்வது. இது சுமூகமான வாழ்க்கைக்கு சிறந்த வழி.

மூன்றாவதாக ஆடம்பரம் என்பது, மற்றவர்களிடம் வசதியானவன் எனக் காட்டுவதற்காக தகுதிக்கு மீறி செலவு செய்வது.

நான்காவதாக உள்ள ஊதாரித்தனம் என்பது, கண்மூடித்தனமாக தேவையில்லாத செலவுகளை செய்வது. இது அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

சேமிக்கும் பழக்கம்

சேமிப்பு பழக்கத்தை எறும்பு, தேனீக்கள் ஆகியவற்றிலிருந்து கற்றுக் கொள்ளலாம். நமது முன்னோர்கள்  இப்பழக்கத்தைச் சரியாகச் செய்தனர். அவர்கள் பணத்தை மட்டுமல்லாமல், பண்டங்களையும் சேமித்தனர். இன்றைய காலகட்டத்திலும் நம் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, இருக்கும் போதே சேமித்துக் கொள்ளும் பழக்கத்தை, சிறு வயது முதல் குழந்தைகளுக்கு  ஏற்படுத்த வேண்டும். நாமும் பழக வேண்டும்.

world savings day

குடும்பத்தில் அனைவரும் சிக்கனமாக இருந்தால் தான் சேமிப்பு உருவாகும். இன்று வரை சிக்கனம் என்றால் என்ன என்று கேட்பவராக இருந்தாலும் பரவாயில்லை. இனியாவது சேமிக்கத் தொடங்குங்கள். மகிழ்ச்சியாக வாழலாம்.

சிக்கனத்தைக் கடைபிடிக்க எளிய வழிகள்

  1. எதற்காக சேமிக்கிறோம், அதன் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்ந்து சேமிக்கத் தொடங்க வேண்டும். அப்போது தான் இடையில் பின்வாங்காமல் இருக்க முடியும்.
  2. எப்போதேனும் சேமிப்பதால் பெரிதாக எந்த உபயோகமும் இருக்காது. எனவே, ஒவ்வொரு மாதமும் தவறாமல் சேமிக்கத் தொடங்குங்கள்.
  3. உங்கள் வருமானம், செலவுகள் மற்றும் சேமிப்பைப் பற்றித் திட்டமிட பட்ஜெட் மிக முக்கியம். எனவே, பட்ஜெட் போட்டு செலவு செய்யத் தொடங்குங்கள்.
  4. கையில் பணம் இருக்கிறது என்பதற்காக இஷ்டத்திற்குச் செலவழிக்காமல், செலவுகளை குறித்து வைத்துப் பழகுங்கள். அப்போது தான் தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். ஒருநாள் ஆட்டோவில் சென்றால், பானி பூரி சாப்பிட்டால் கூட அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  5. சேமிக்கும் தொகையை எதிலேனும் முதலீடு செய்ய முயலுங்கள். குறைந்த பட்சம் அஞ்சலகங்களிலேனும் சேமிக்கலாம். வட்டி கிடைக்கும்.

சிக்கனமும், சிறு சேமிப்பும் தான் மகிழ்வான வாழ்விற்கு வழி வகுக்கும். நீடூழி வாழ்க.


Like it? Share with your friends!

225
52 shares, 225 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.