பிளிப்கார்ட்டின் புதிய வரவு 2குட் – உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான தளம்..!

Olx மற்றும் Quickr நிறுவனங்களுக்குப் போட்டியாகக் களமிறங்குகிறது பிளிப்கார்ட்.


211
31 shares, 211 points

இந்தியாவின் இணைய வர்த்தகத் துறையின்  ஜாம்பவானான  பிளிப்கார்ட் (Flipkart), வெற்றிகரமாக  உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களின் விற்பனையில் இறங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி, பிளிப்கார்ட் நிறுவனம் 2குட் (2GUD) எனப்படும் நாட்டின் மிகப்பெரிய உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களின் விற்பனைக்கான தளத்தை துவங்கியுள்ளது.

eBay முதல் 2GUD வரை

பெங்களூரூவைத் தலைமையிடமாகக் கொண்ட,  உள்நாட்டு நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த ஜூலை 24-ம் தேதி தான் தனது eBay India என்னும் தளத்திற்கு மூடுவிழா நடத்தியது. கையகப்படுத்திய ஒரே வருடத்தில் அந்தத் தளத்தை பிளிப்கார்ட் கைவிடுவதாக அறிவித்தது.

ஆனால், இப்போது ஒரே மாதத்தில் புதிய பொருட்கள் மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களின் விற்பனைச் சந்தையில் களமிறங்கியுள்ளது.  2குட், இ-பே யிடமிருந்து சற்றே வித்தியாசப்பட்டதாகும். தொடக்கத்தில் மின்னணுச் சாதனங்களை மட்டுமே விற்பனைக்கு இறங்கியுள்ளது.

Credit : Resizer

மின்னணுச் சாதனங்கள்

2குட் முதலில் கைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் மின்னணுச் சாதனங்களை மட்டுமே விற்பனை செய்யும். மற்ற வகைப் பொருட்கள் விரைவில் விற்பனைக்கு வரத் தொடங்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

“2குட் முதலில் அலைபேசி விற்பனையில் தான் கவனம் செலுத்தும். சாதாரண கைபேசிகள், அடிப்படை ரக ஆன்ட்ராய்ட் கைப்பேசிகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இங்கு உபயோகப்படுத்தப்பட்ட புதிய ரக ஆண்ட்ராய்ட் அலைபேசிகளை வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.” என நிறுவனத்தின் அதிகாரி சதிஷ் மீனா தெரிவித்துள்ளார்.

உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான சந்தை

க்ரீன்டஸ்ட் (Greendust) போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்கி வரும் போதிலும், OLX மற்றும் Quikr ஆகிய இரண்டு நிறுவனங்களும் தான், இந்தியாவின் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் சந்தையில் கோலோச்சி வருகின்றன.

2018-ல் இந்நிறுவனம், சராசரியாக ஒரு மாதத்திற்கு 5,780 கைப்பேசிகளை விற்பனை செய்திருக்கிறது.

ஜனவரி 2017-ல், அமேசான் நிறுவனம் தனிநபர் விற்பனையைத் தங்கள் தளத்தில் அனுமதித்தது . இதில் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் விற்பனையும் அடங்கும். விற்பவர்களிடம் நிறுவனம் பொருட்களைப் பெற்று, அதனை வாங்க விரும்புபவர்களுக்கு அனுப்பி வைக்கும்.

ShopClues நிறுவனமும் பிரிக்கப்படாத பொருட்களையும், உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களையும் விற்பனை செய்கிறது. 2018-ல் இந்நிறுவனம், சராசரியாக ஒரு மாதத்திற்கு 5,780 கைபேசிகளை விற்பனை செய்திருக்கிறது. இது 2017-ம் ஆண்டை விட 35% அதிகம்.

இத்தனை போட்டியாளர்கள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பொழுதே, பிளிப்கார்ட் தைரியமாக இறங்குகிறது என்றால் சந்தையில் கடை விரிக்க இன்னும் இடம் இருக்கிறது என்று தானே அர்த்தம் ?

கள்ளச்சந்தையாக இருந்தாலும், நல்ல சந்தையாக இருந்தாலும் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு இந்தியாவில் பெரிய வரவேற்பு இருக்கின்றது என்கிறார் எவரெஸ்ட் நிறுவன அதிகாரி ஒருவர்.

பாதுகாப்பான முதல் அடி

மின்னணுச் சாதனங்களின் விற்பனையை மட்டும் முதலில் கையிலெடுத்திருப்பது உண்மையிலேயே பிளிப்கார்ட்டின் நல்ல முயற்சி தான். ஏனெனில், இன்றைய நிலையில் அவர்கள் தான் இந்தியாவின் முன்னணி கைபேசி விற்பன்னர்கள். ஒவ்வொரு வருடமும் அவர்களின் கைபேசி விற்பனை 400% அதிகரிக்கிறது. அசாத்திய வேகம்.

மேற்கத்திய நாடுகளில் இருப்பது போல, நம் நாட்டில் கைபேசிகளை எளிதில் பழுது பார்ப்பதற்கான முகமைகள் இருப்பதில்லை. இந்தியாவில் கைபேசி பழுது நீக்கும் தொழில் இன்னும் முறைப்படுத்தப் படாமலே தான் இருக்கிறது. சென்ற வருடம் தான் பிளிப்கார்ட் கைபேசி பழுது நீக்கும் நிறுவனமான F1 இன்ஃபோ சொல்யூஷன்ஸ் (F1 info solutions) நிறுவனத்தைக் கையகப் படுத்தியது. எனவே, பிளிப்கார்ட் வைத்திருக்கும் முதல் அடி பாதுகாப்பானதே.

400 பிரிவுகளில் பொருட்கள்

கைபேசியோடு நின்று விடாமல், 400 பிரிவுகளில் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு வருவதே 2குட் – இன் திட்டம். உடைகள், புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றோடு சேர்ந்து பிளிப்கார்ட் சில புதியத் திட்டங்களையும் வைத்துள்ளது. உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்களும் 2குட்-ல் விற்பனைக்கு வருகிறதாம்.

அதுமட்டுமன்றி, இதுநாள் வரையில் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருட்களை விற்பனை செய்து வந்த பிளிப்கார்ட் இனி இரண்டு வெவ்வேறு இணைய நிறுவனங்கள் தங்களுக்குள் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளவும் உதவப் போகிறதாம்.

சவாலைச் சமாளிக்குமா பிளிப்கார்ட் ?

ஆனால், உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களின் சந்தை சவால் மிகுந்தது. நிறையவே தொடக்க கால முதலீடுகள் தேவைப்படும். அதுவும் பிளிப்கார்ட் போன்ற பிரபலமான நிறுவனம் தங்கள் மூலமாக விற்பனையாகும் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். அது எளிதான விஷயம் அல்ல.

செய்த முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்குள், நாம் நிறையவே செலவு செய்ய வேண்டியிருக்கும். அது தான் இந்தத் துறையில் இருக்கும் சவால். இதற்காக பிளிப்கார்ட் தனது விநியோக முறையை சிறிது மாற்றி அமைக்க இருக்கிறது.

மின்னணுப் பொருட்கள் இப்போதெல்லாம் வாங்குவதற்கு எளிதாகி விட்டன. அடுத்தடுத்து புதிது புதிதாக ரகங்கள் விற்பனைக்கு வருகின்றன. மக்களின் ஆசை மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் இந்தத் துறை இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறது பிளிப்கார்ட்.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

211
31 shares, 211 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.