விமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்

0
19
Jet_airways_
Credit: Times Now

ஜெட் ஏர் வேய்ஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே லாபம் ஈட்ட முடியாமல் தவித்துவந்தது. இந்நிலையில் சமீப காலமாக இந்த நிறுவனத்தில் நஷ்டம் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த புதன் கிழமை அன்று நஷ்டம் காரணமாக தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்தது. ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் விமானங்கள் சிலவற்றை குத்தகைக்கு எடுக்க ஏர் இந்தியா நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

Jet_airways_
Credit: Times Now

நஷ்டம்

ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் நஷ்டமானது அதிகரித்ததால் விமானிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாமை, எரிபொருள் செலவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் சமாளிக்க முடியாமல் அந்த நிறுவனம் திணறியது. மொத்தத்தில் அந்நிறுவனத்திற்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமை இருப்பதாகத் தெரிகிறது. பராமரிப்பு செலவுகளை கட்டுப்படுத்த அந்த நிறுவனத்தில் உள்ள 44 விமானங்களில் 7 மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. கடந்த புதன் கிழமையோடு அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

Jet Airways India5
Credit: thestar.com.my

குத்தகை

ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் நிர்வாக சீரமைப்பு குழுவான SBI தன்னிடம் இருக்கும் விமானங்களை குத்தகைக்கு விட இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸின் பெரிய அகலமான அளவு கொண்ட விமானங்களைக் குத்தகைக்கு எடுக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 16 பெரிய அகலமான விமானங்கள் உள்ளன. அவற்றில் பத்து போயிங் 777 – 300 ERs ரக விமானங்களும், ஆறு ஏர்பஸ் A330s ரக விமானங்களும் அடங்கும். இதில் ஐந்து போயிங் ரக விமானங்களை குத்தகை எடுக்க விரும்புவதாக ஏர் இந்தியா தலைவர் அஷ்வானி லொஹானி எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விமானங்களை சர்வதேச பயண வழித்தடங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

jet_airways_2
Credit: India.com

ஒரே நிறுவனம்

ஜெட் ஏர்வேய்ஸின் இயக்கம் நிறுத்தப்பட்டதால் சர்வதேச பயணங்களுக்கு ஏற்ற உள்நாட்டு நிறுவனம் ஏர் இந்தியா மட்டுமே. மேலும் தங்களது சர்வதேச சேவைகளை ஏர்இந்தியா நிறுவனம் அதிகரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே கூடிய விரைவில் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் ஏர் இந்தியா சார்பில் விண்ணில் பறக்கும் என நம்பலாம்.