உலகிலேயே மிகச்சிறந்த கல்வி அமைப்பைக் கொண்ட நாடு எது தெரியுமா?

உலகிலேயே மிக வெற்றிகரமான கல்வி முறையை ஃபின்லாந்து நாடு பின்பற்றுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அங்கு மாணவர்கள் மிகக் குறைந்த நேரமே பள்ளியில் செலவிடுகிறார்கள்.


168
28 shares, 168 points

சர்வதேச மாணவர் மதிப்பீட்டின் படி, ஃபின்லாந்து நாட்டு மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, மற்ற நாடுகளை விட அதிக நேரம் படிப்பதில் செலவிடுகிறார்கள்.

ஆனால், 1960 களின் இறுதி வரை, 10 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்கள்.

புதுமையான சீர்த்திருத்தங்கள்

பெருஸ்கூலு (peruskoulu) – ஃபின்லாந்தின் கட்டாயக் கல்வித்திட்டத்தின் வெற்றிக் கதை இது தான். 1970 களின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், 1990 களில் பல புதுமையான சீர்திருத்தங்களால் மேம்படுத்தப்பட்டது.

ஃபின்லாந்தின் இந்த அற்புதமான கல்விமுறையைக் குறித்துத் தெரிந்து கொள்ள பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் அங்கு செல்கின்றனர். கல்விக் கொள்கைகள் மட்டும் அல்லாது பயனுள்ள சமூக கொள்கைகளும், இந்த உயர்தர கல்விமுறைக்குக் காரணமாகும் என்று அவர்களுக்கு கூறப்படுகிறது.

“ஃபின்லாந்தின் இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு, கல்வி சார்ந்த காரணிகள் மட்டுமே அடிப்படை என்று கூற முடியாது” என்கிறார் அந்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர், ஆய்வாளர் மற்றும் கொள்கை ஆலோசகரான பசி சல்பர்க் (Pasi  Sahlberg).

“மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதில் ஃபின்லாந்து அரசின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகள் 7 வயதில் பள்ளிக்குச்  செல்ல, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஏற்ற சூழலை அரசு உருவாக்கி தருகிறது.”

கல்வி மற்றும் சமத்துவம்

சமத்துவமின்மை மக்களின் எதிர்பார்ப்பைத் தடுத்து, அவர்களின் வாங்கும் திறனைக் குறைக்கிறது – சமநிலை உள்ள சமூகங்களில், கல்வி அமைப்பு நன்றாக இருக்கிறது என தான் எழுதிய Finnish Lessons 2.0 புத்தகத்தில் பசி சல்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

சமத்துவம் நிறைந்த சமூகங்களில், பள்ளிகளில் மாணவர்கள் நன்றாகப் பயில்கிறார்கள் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமத்துவம் மற்றும் சமூக நீதி

தலைநகர் ஹெல்சின்கியில் (Helsinki) இருக்கிறது விக்கி பள்ளி. இங்கு பணக்காரர்கள் மற்றும் பணிபுரியும் வர்கத்தின் குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக அமர்கின்றனர். பள்ளிக்கட்டணம் என்று எதுவும் கிடையாது. மேலும், பள்ளிக்குத் தேவையான அனைத்தும் இலவசம்.

முதல்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 940 மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ உதவிகளும் உண்டு. இவை உளவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவோடு நடக்கிறது.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்குப் பிறகு ஏற்கப்பட்ட சமத்துவம் மற்றும் சமூக நீதியை வளர்ப்பதற்கானப் பொருளாதார மாதிரி, ஃபின்லாந்தின் கல்விமுறை வெற்றிக்கு முக்கிய காரணம் என்கிறார் பசி.

இலவசக் கல்வி மற்றும் மருத்துவம், குறைந்த விலையில் வீட்டுவசதி, குழந்தைகளுக்கான பொறுப்பை ஆண்கள் ஏற்க ஊக்குவிக்க அவர்களுக்கு விடுமுறை மற்றும் பல நலத் திட்டங்களை இந்தப் பொருளாதார மாதிரி வழங்குகிறது.

  • வழக்கமான ஃபின்லாந்து பள்ளிகளில் ஆசிரியர்கள் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் பாடம் நடத்துவார்கள்.
  • அமெரிக்கா மற்றும் கொலம்பியாவில் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் ஆண்டு ஒன்றுக்கு 1000 மணி நேரங்கள் செலவிடுகின்றனர்.
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் கூற்றுப்படி, ஃபின்லாந்தில் 15 வயதிலான மாணவர்கள் பள்ளிக்குப் பிறகு வாரத்திற்கு சுமார் 2.8 மணி நேரங்கள் பணி புரிகின்றனர். தென் கொரியாவில் இது 2.9 மணி நேரங்களாகும்.
  • சில நாடுகளில் வீட்டுப்பாடத்திற்கான சராசரி நேரம் வாரத்திற்கு 4.9 மணி நேரங்கள். ஆனால், சீனாவில் இது 13.8 நேரமாக இருக்கிறது.

“மாணவர்கள் என்ன கற்க வேண்டுமோ அதனை வகுப்பறையில் கற்கிறார்கள். பள்ளிக்கு வெளியே நண்பர்கள், பிற வேலைகள் என மற்ற முக்கியமான விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க முடியும்” என்கிறார் மற்றொரு ஆசிரியரான மார்ட்டி மெரி.

நல்ல சூழல்

விக்கி பள்ளியின் சூழல் அமைதியானதாக உள்ளது. இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பள்ளிச் சீருடைகள் எல்லாம் கிடையாது. மாணவர்கள் அவர்களது சாக்சுகளோடு கூட சுற்றலாம்.

ஃபின்லாந்து மாணவர்கள் தேர்வுகள் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை. கல்வியில் சேரும் முதல் 5 ஆண்டுகளில் தேர்வுகளே கிடையாது. பின்னர், வகுப்பறையில் மாணவர்கள் அவர்களின் திறனை வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறார்கள்.

போதிய ஆதரவும், வாய்ப்பும் அளித்தால், எதையும் கற்றுக் கொள்வதற்கான ஆற்றல் குழந்தைகளுக்கு இருக்கிறது. பதற்றம் இல்லாமல் மாணவர்கள் படிக்க உதவ வேண்டும் என்பதையே ஆசிரியர்கள் நம்புகிறார்கள். ஒன்றைக் கற்றுக் கொள்ள இயற்கையாகவே ஆர்வத்தை வர வைக்க வேண்டும். தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மட்டும் கல்வி கிடையாது என்பது தான் இந்த அமைப்பின் நடைமுறை.

ஆய்வு முடிவுகளின்படி, 7 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே கணிதம் பயில்வது குறித்து பதற்றமடைகிறார்கள். ஜப்பானின் கண்டிப்பான அமைப்பில் இது 52 சதவீதமாக உள்ளது.

மக்கள் நலன்

ஃபின்லாந்து அரசின் பெரியளவிலான சமூகத் திட்டங்களும், அந்நாட்டுக் கல்விக் கொள்கைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகின்றன. 51.6 சதவீதம் என்ற விகிதத்தில், உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடு ஃபின்லாந்து. அதனால் இத்திட்டங்கள் சாத்தியாமாகின்றன.

2018-ஆம் ஆண்டின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை ஐ.நா வெளியிட்டதில், ஃபின்லாந்து முதலிடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது .

பசி சல்பர்க் கூறுகையில், “சிறிய மற்றும் குறைந்த மக்கள் தொகை (5.5 மில்லியன் மக்கள்) கொண்ட நாடான ஃபின்லாந்தில், கல்விக் கொள்கைகள் வகுத்து, சமூகத் திட்டங்களை செயல்படுத்துவது என்பது சற்று எளிதாக இருக்கும். பெரிய மற்றும் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் இது கடினமானது” என்கிறார்.

“நேர்மை, நியாயம் மற்றும் சமூகநீதி ஆகியவை ஃபின்லாந்து மக்களின் வாழ்வில் ஆழமாகக்  கலந்துள்ளது. மக்களிடத்தில் மிக அதிகமான பொறுப்பு உள்ளது. அப்பொறுப்பு தங்கள் வாழ்க்கைக்கானது மட்டுமல்ல, பிறர் வாழ்க்கைக்கானதும்”.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

168
28 shares, 168 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.