நீட் என்னும் அரக்கன்


79 shares
Pradeepa Commits Suicide After Neet Results 2018

வருடத்திற்கு ஒருமுறை குறைந்தது ஒரு உயிரையாவது பலி கேட்கும் நீட்தேர்வு இந்த வருடம் தேர்வுக்கு முன்பே வேறு ஒரு பிரச்சினையை கொண்டுவந்தது.

ஆம்! தேர்வை நடத்தும் CBSE தமிழகத்தை மட்டும் வஞ்சித்து புறக்கணித்து ஒரு திட்டத்தை செயல்படுத்தியது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத இராஜஸ்தான்,கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ராஜஸ்தானும் நமக்கு அண்டை மாநிலம் ஆகிவிட்டது மக்களே!

இவ்வளவு நாட்களாய் சமச்சீர் கல்வி என்றொரு அட்டகத்தி கொண்டு தாக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் இந்தமுறை தேர்வு மையம் ஒதுக்குவதில் கூட ஒடுக்கப்பட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

தேர்வு முடிந்த அன்றே இரண்டு உயிர்களை எடுத்துக் கொண்ட நீட், இப்போது தேர்வு முடிவுக்குப் பின் மீண்டும் ஒரு உயிரை பலி கொண்டிருக்கிறது. பிரதீபா என்றொரு மாணவி தற்கொலை செய்துகொண்டார். பிரதீபா 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி செய்துள்ளதும் நமக்கு வேதனையை தருகிறது.

நீட் – சில புள்ளி விவரங்கள் 

தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகளைக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டில் மொத்தம் நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர். அதில் 45, 336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி தர வரிசையில் தமிழ் நாட்டின் இடம் 35. அதாவது கடைசியில் இருந்து 3 வது இடம்.

நீட் தேர்வில் தேர்வாக என்ன தான் செய்ய வேண்டும்?

ஒரே வரியில் பதில். பணக்கார வீட்டு பிள்ளையாய் பிறக்க வேண்டும்.

எந்த ஒரு ஏழையும் இலட்ச ரூபாய் செலவிட்டு தேர்வை சந்திக்க முடியாது. பணக்கார வீட்டில் பிறக்க வேண்டும் அல்லது மேல்தட்டுக்கு தற்போது நகர்ந்த, நகருகின்ற நடுத்தர குடும்பத்தில் பிறக்க வேண்டும். அவர்களுக்கே அதிக பசி இருக்கும்.

இதைத்தாண்டி மத்திய அரசானது, கீழ்த்தட்டு மற்றும் தமிழக மாணவர்கள் வளரக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறது என்பதனை அனைவரும் அறிவோம்.

 

உளவியல் ரீதியான தாக்குதல்கள் சில

  • மாணவர்கள் பரிசோதனை என்னும் பெயரில் மன உளைச்சலுக்கும் பயத்திற்கும் உட்படுத்தபடுகிறார்கள்.
  • Objective type என்று சொல்லக்கூடிய சரியான விடையை தேர்ந்தெடுத்தலுக்கு Metal Detector கொண்டு சோதனை.
  • முழுக்கைச்சட்டை கூடாது, இருந்தாலும் வெட்டிவிடுகிறார்கள்.
  • கம்மல், மூக்குத்தி, கைக்கயிறு என அனைத்தையும் உருவி அம்மணமாக தேர்வு எழுதுகிறார்கள்.
  • சேலை அணியக்கூடாது, சுடிதார்க்கு துப்பட்டா அணியக்கூடாது, உள்ளாடையும் பரிசோதிக்கப்படுகிறது.

இப்படியாக சைக்கோ கணவரிடம் மாட்டிய புதுப்பெண்கள் போல் சித்ரவதை செய்யப்படுகிறார்கள்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயரிய பதவிக்குக்கூட இப்படியொரு கொடூரமில்லை. தனியார் கல்வி நிறுவனங்களை எந்த வகையிலும் ஏமாற்றி விடக்கூடாது என்ற அரசாங்கத்தின் பயமே இப்படியொரு செயலை செய்யச்சொல்கிறது.

நீட் அவசியம் தேவையா?

அனைவருக்கும் ஒரேக்கல்வி இல்லாத இவ்வளவு பெரிய நாட்டில் ஒரே தேர்வென்று சொல்லுவது நிலைப்படுத்த முடியாத சமன்பாடு. இது ஒரு சாமானிய மனிதருக்குக்கூட மூளையில் எட்டும். ஆனால் உலகம் சுற்றும் பிரதமருக்கு தெரியாமல் இருக்கிறது என்பதே நம் வருத்தம்.

தனியார் மையத்திற்கு கல்வியை தாரை வார்த்து கொடுத்தது மட்டுமில்லாமல் முந்திக்கொண்டு சீர்வரிசை கட்டிக்கொடுக்கிறது நீட் தேர்வு முறை.

இதுவரை படித்து வந்த மருத்துவர்கள் திறமையாய் இல்லையா?

நீட்தேர்வு மட்டும் எப்படி கல்வி தரத்தை உயர்த்தும். 11ம் வகுப்பிலையே 12ம் படிக்கின்ற பள்ளியில் நீட் பயிற்சி கொடுக்கிறோம் என்று மேலும் ஒரு இரண்டு இலட்சங்கள் வாங்குகிறார்கள்.

இன்னமுமே வட இந்தியாவில் கல்வியென்றால் காதில்கூட கேட்காத கிராமங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் பற்றி கவலைக்கொள்ளாமல்,வளர்ந்து வரும் தென்இந்தியாவை குறிப்பாய் தமிழகத்தை வேறோடு அழிப்பதில் மத்திய அரசாங்கம் துணிந்தே இறங்குகிறது.

மேலும் இந்த வீணாய்போன நீட்தேர்வென்பது இந்த ஆண்டு முதல் ஆயுஷ் என்று சொல்லப்படும் ஆயுர்வேதம், சித்தா போன்ற படிப்புகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

திராவிட ஆட்சியில் கொண்டு வந்த சலுகையின் காரணமாகவே கிராமப்புறங்களில் 2010 க்கு பிறகு பொறியியல் பட்டதாரிகள் முளைக்கத்தொடங்கினர். இது போன்று மருத்துவப்படிப்பும் வரவேண்டும் என்று தமிழகத்தில் பெரும்பாலானோர் எண்ணிணோம். ஆனால் அது கனவாகவே போனது.

வரும்காலங்களில் இந்த கொடுமை அனைத்து கல்விப்படிப்பிற்கும் வருமென்று கல்வியாளர்களும் அரசியல் பார்வையாளர்களும் சொல்கிறார்கள். இது நம்மீது தெரிந்தே தொடுக்கப்படுகின்ற போர்.

ஆக கடைசியில் நீட்தேர்வு என்பது நாட்டில் பெரும்பான்மையாய் வசிக்கும் சாமானியனுக்கில்லாமல், இலட்ச ரூபாய் ஆனாலும் தயங்காமல் செலவு செய்கின்ற குடும்பங்களுக்கே உண்டானது.

நீட் என்னும் அரக்கனிடம் போரிட்டு நம் கல்வி உரிமையை மீட்டெடுப்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.

Written by Selvakumar Duraipandian. Originally Published in Medium.com. Republished in Ezhuthaani with few modifications.


Like it? Share with your friends!

79 shares
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.