நாளை குரூப் 2 தேர்வு : TNPSC யின் விதிமுறைகள் என்ன ?

0
36
group 2 exam

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்களுக்கு நாளை தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்தத் தேர்வை 6,26,726 பேர் நாளை எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 2268 மையங்களில் தேர்வு நடைபெற இருக்கிறது. நாளைய தேர்வில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை TNPSC வெளியிட்டுள்ளது. அதனைக் கீழே காணலாம்.

 1. Group 2
  Credit: Samayam

  தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும்.

 2. தேர்வு எழுதுபவர் அதற்கான அனுமதிச் சீட்டுடன் (Hall Ticket) வரவேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் Hall Ticket இல்லாமல் வருவோர் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
 3.  ஹால் டிக்கெட்டில் புகைப்படமோ அல்லது கையொப்பமோ சரியாக இல்லை என்றால் அதற்குப் பதிலாக வேற ஒரு அத்தாட்சியை அலுவலரின் சான்றிதழ் பெற்றுக் கொண்டு வரவேண்டும்.
 4. தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்பட்ட பதிவு எண்கள் உள்ள தேர்வு அறை/ இருக்கையில் தான் அமர வேண்டும்.
 5. தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே எடுத்து வரவேண்டும்.
 6. கருப்பு அல்லது நீல நிற பால் பாயிண்ட் பேனாவால் மட்டுமே ஓ.எம்.ஆர். விடைத்தாளை நிரப்ப வேண்டும். பென்சிலில் எழுதக்கூடாது.
 7. தேர்வறைக்குள் செல்போன்கள் மின்னணு சாதனப் பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
 8. தேர்வு எழுதுபவர்களுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், புகைப்படம், பதிவு எண், உள்ளிட்டவை சரியாக உள்ளதா? என்று சரிபார்த்த பின்னரே விடையளிக்க வேண்டும்.
 9. தேர்வு எழுதும் முன் தங்களது வினாத்தாளில் பதிவு எண்ணை எழுத வேண்டும்.
 10. தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு கேள்வித்தாள் வழங்கப்படும்.
 11. கேள்வித்தாள்களில் அனைத்துப் பக்கங்களும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
 12. ஓஎம்ஆர் விடைத்தாளில் கேள்விகளுக்குரிய பதிவு எண்ணைத் தவறாகப் பதிவு செய்தாலும் ஓஎம்ஆர் விடைத்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.
 13. தேர்வு எழுதுபவர்கள் பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அதற்கான வினாத்தாள் தரப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
 14. தேர்வு விடைகளை அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
 15. 10 மணிக்கு மேல் கேள்வித்தாள் மாற்றித் தரப்படமாட்டாது
 16. காலை 10.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் எந்த தேர்வரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
 17.  விடைத்தாள்களில் எதுவும் எழுதக்கூடாது. அப்படி ஏதாவது எழுதப்பட்டிருந்தால் அந்த விடைத்தாள் செல்லாததாகிவிடும்.
 18.  ஒரு கேள்விக்கு ஒரு விடையை மட்டுமே எழுத வேண்டும்.
 19. வினாத்தாளில் தேர்வர்கள் விடைகளை குறிக்கக் கூடாது.
 20.  தேர்வறைக்குள் தேர்வு எழுதச் செல்லும் தேர்வர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு முடியும் முன்பு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
 21.  தேர்வறையில் காப்பி அடிப்பது, விதிமீறிய செயல்களில் ஈடுபடுவது, தவறான மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பதட்டமே அனைவரையும் தவறு செய்ய வைக்கிறது. எனவே முடிவெடுப்பதற்கு முன்னர் ஒரு தடவைக்கு இரண்டு முறை யோசிப்பது சிறந்தது. பல மாதங்களாக கடின உழைப்பை அளித்து சிறிய தவறின் மூலம் கனவுகளைக் கலைக்க வேண்டாம். தன்னம்பிக்கையுடன் தேர்வினை எதிர்கொள்ளவும். தேர்வு எழுதும் அனைவருக்கும் எழுத்தாணியின் சார்பில் வாழ்த்துக்கள்.