குழந்தைகளை அதிகம் கவரும் ஹேட்சிபேபி பொம்மை – காரணம் இதுதான்!

முற்றிலும் வித்தியாசமான ஹேட்சிமல்ஸ், ஹேட்சிபேபி போன்ற பொம்மைகள் குழந்தைகளை அதிகம் கவருகின்றன. மேலும் அவை அதிகமாக விற்பனையும் ஆகின்றன.


164
27 shares, 164 points
 குழந்தை வளர்ப்பு என்பது சவாலான ஒன்று தான். ஏனெனில் இளம் வயதில் குழந்தைகள் மனதில் பதியும் விஷயங்கள் தான் அவர்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கின்றன. சிறு வயதில் அவர்கள் பார்க்கும் எல்லாவற்றையும் அப்படியே செய்ய முயற்சிப்பார்கள். அதிலும் அவர்கள் அதிகம் பார்க்கும் அவர்களின் பெற்றோர்களைப் போல் நடந்து கொள்ள ஆசைப்படுவார்கள். இதை அவர்கள் பொம்மைகளுடன் விளையாடும் போது கவனிக்கலாம். பெரும்பாலான குழந்தைகள் அவர்களின் பொம்மைகளை ஒரு குழந்தையை போல கவனித்து அக்கறை காட்டுவார்கள். இதை தெளிவாகப் புரிந்து கொண்ட ஸ்பின் மாஸ்டர் (Spin Master) நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடு தான் ஹேட்சிபேபி (Hatchibaby)
hatchimales
Credit: Wallmart

ஹேட்சிபேபி பொம்மை 

ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு அக்டோபரில் ஸ்பின் மாஸ்டர் நிறுவனம் வெளிட்ட தயாரிப்பான ஹேட்சிமல்ஸ் (Hatchimals) மிகுந்த வரவேற்பைப் பெற்று அதிகம் விற்பனையாகியது. இந்த வருடம் வெளியான ஹேட்சிபேபியில் பல சிறப்பம்சங்கள் உள்ளது. முதலில் இவை 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கானது. இவை பேட்டரி மூலம் தான்  வேலை செய்கின்றன.  இதன் அட்டையைப் பிரித்தவுடன் பொம்மையானது பெரிய பிளாஸ்டிக் முட்டை வடிவில் இருக்கும். குழந்தைகள் அந்த முட்டையை கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த முட்டை தானாக குஞ்சு பொரிக்காது. அதனால் அந்த முட்டைக்கு சரியான அரவணைப்பை அதன் ஓட்டில் தேய்ப்பது மூலம் கொடுக்கும் போது முட்டை உடைந்து உள்ளிருக்கும் பொம்மை(baby) வெளிவரும். நாம் காட்டும் கவனிப்பிற்கு ஏற்ப முட்டை சீக்கிரம் உடையுமாம். ஆம்.. அதை தட்டி கொடுத்தல், தேய்த்தல் மூலம் சீக்கிரம் குஞ்சு பொரிக்க வைக்க முடியும். அப்படி நம் தட்டிக் கொடுக்கும் போதும், தேய்க்கும் போதும் உள்ளிருக்கும் குட்டி அதை கவனித்து அதற்கு ஏற்ப சில வண்ணங்களில் ஒளிரும். எடுத்துக்காட்டாக வெள்ளை நிறம் தூக்கத்தையும் சிவப்பு நிறம் அதன் மன வருத்தத்தையும் குறிக்கிறது.
முட்டையிலிருந்து  வெளிவந்த பின் அது ஆணா (blue) பெண்ணா(Pink) என அறியும் அம்சம் இப்போதைய ஹேட்சிபேபி பொம்மையில் உள்ளது.
இதற்கான கையேடும் பொம்மையுடன் தரப்படும். முட்டை பொரிவதற்கான காலம் அதற்கு கிடைக்கும் அரவணைப்பைப் பொறுத்தது. அதன் கண்கள் வானவில் நிறத்தில் இருந்தால் அது வெளிவரப் போகிறது என்று அர்த்தம். முட்டையில் அதிக கீறல் விழுந்தவுடன் அதை பிரிக்க வேண்டும். ஹேட்சிமல்ஸ் போல அல்லாமல் முட்டையிலிருந்து  வெளிவந்த பின் அது ஆணா (blue) பெண்ணா(Pink) என அறியும் அம்சம் இப்போதைய ஹேட்சிபேபி பொம்மையில் உள்ளது. அதோடு ஹேட்சிபேபி எப்பொழுதும்  குழந்தையாகவே இருக்கும். ஹேட்சிபேபியில் பொம்மை குடிக்க ஒரு பாட்டில், கிளுகிளுப்பை, சீப்பு மேலும் ஒரு குட்டி பொம்மையும்  இருக்கும். நாம் சொல்வதை அது அப்படியே சொல்லும். மேலும் சிறு குழந்தை போல சத்தம் போடும். அழவும் செய்யும். இதற்குப் பசிக்கும் அப்போது அதன் வாயில் பாட்டிலை வைக்கலாம். மேலும் இது சிறு குழந்தைகள் போல ஈரமாக்குவதும் உண்டு. அப்போதெல்லாம் ஹேட்சிபேபியை கவனித்துக் கொள்ளவேண்டும். இவற்றை எல்லாம் செய்ய குழந்தைகளும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

காரணங்கள் 

இது குறித்து மினசோட்டா பல்கலைக்கழகத்தில் உள்ள குழந்தைகள் நிபுணர் Ayuko Uezu Boomer “இது போன்ற பொம்மைகளால் குழந்தைகள் சரியாக நடக்கும் முன்பே, இலக்கணத்தோடு பேசும் முன்பே அவர்கள் மனதில் கருணை உருவாகிறது. இது அவர்களின் தினசரி நடத்தையில் அதாவது வீட்டு செடிகள், வளர்ப்புப் பிராணிகளை கவனித்துக் கொள்வது போன்றவற்றில் வெளிப்படும்” என்கிறார்.
hatchimals-surprise-peacat-random-color-descimage
Credit: Robot Shop
டெலாவேர் பல்கலைக்கழகத்தில் பள்ளிக்கு கல்வி அலுவலராகவும், Universities’s Child Play, Learning and Development Lab ஐ நடத்துபவராகவும் உள்ள  Roberta Michnick Golinkoff இது குறித்து “நாம் செய்வதை குழந்தைகளை செய்ய பெரும்பாலும் நாம் ஒத்துக்கொள்வது இல்லை. அதை செய்யாதே! இதை செய்யாதே! நீ இன்னும் வளரல! உன்னால் அதை செய்ய முடியாது என்கிறோம். அவர்கள் பெரிய அறிவார்ந்த வேலைகள் செய்ய வேண்டும் என நாம் எதிர்பாக்க முடியாது. ஏனெனில் அது போன்ற வேலைகளை அருகில் இருந்து அவர்கள் பார்ப்பதில்லை. ஆனால் இது போன்ற அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் விஷயங்களை அவர்களால் செய்ய முடியும். இது போன்ற பொம்மை வேண்டும் எனக் கேட்டு கவனத்துடன் பாதுகாக்கும் குழந்தை உண்மையில் நல்ல கவனிப்போடு வளர்க்கப்பட்டிருக்கும்” என்கிறார்.
குழந்தைகள் தாங்கள் அதிகம் பார்ப்பதை செய்ய விரும்புவதால் தான், பெற்றோர்கள் அவர்களை கவனித்தது போல் அவர்களுடைய பொம்மைகளைக் கவனிக்க விரும்புகிறார்கள். குழந்தைகளின் இந்த மனநிலையால் தான் ஹேட்சிபேபி போன்ற பொம்மைகள் நல்ல வரவேற்பு பெற்று அதிகம் விற்கப்படுகின்றன.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

164
27 shares, 164 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.