இதற்கு முன்னர் தமிழகத்தை உலுக்கிய 6 புயல்கள்

தமிழகத்தைப் புரட்டிப் போட்ட புயல்களின் பட்டியல்.


121
22 shares, 121 points
கஜா புயல் இன்று மாலை கடலூர் மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலைப் பற்றி அறிவித்த போது மக்கள் கலக்கமடைந்தாலும், ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டதும் ஓரளவு பயமின்றி இருக்கின்றனர். சரி கஜா இருக்கட்டும், அதைப் போலவே தமிழகத்தைத் தாக்கிய பிற புயல்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாமா?

அதி தீவிரப் புயல்

இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில்தான் உருவானது. அப்படி இருக்க 1994-ஆம் ஆண்டில் பெயர் வைக்கவில்லையே தவிர, சென்னையைத் தாக்கிய வர்தாவைப் போன்ற அதிதீவிரப் புயல் ஒன்று சென்னையைத் தாக்கியது.
1994- அக்டோபர் இறுதியில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த அந்தப் புயல், சென்னை – கடலூர் இடையே 115 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழைக்கு, தமிழகத்தில் 26 பேர் உயிரிழந்தனர். புயல் கரையைக் கடந்த பிறகும், 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

ஜல் புயல்

கடந்த 2010-ஆம் ஆண்டில் உருவான ஜல் புயல், சென்னை அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்ற போதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப் பட்டது.

தானே புயல்

ஆனால், அடுத்த ஆண்டு தமிழகத்தைத் தாக்கிய தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக சீரடைய வெகு காலம் எடுத்துக் கொண்டது.
2011-ல் டிசம்பர் 30-ல் புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே அந்த தானே புயல் கரையைக் கடந்தது. அதிகபட்சமாக மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது. இதில் தமிழகத்தில் 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். எண்ணற்ற வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வீணாகின.
கடந்த 2012 – ஆம் ஆண்டு, அக்டோபர் 28 – ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி, அக்டோபர் 31-ம் தேதி புயலாக மாறியது. நீலம் என பெயரிடப்பட்ட இந்த புயல், மணிக்கு சுமார் 83 கிலோமீட்டர் வேகத்தில் மகாபலிபுரத்தில் கரையைக் கடந்தது. இதனால், கடல் நீர் 100 மீட்டர் அளவுக்கு நகருக்குள் புகுந்தது. 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்த புயலால், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர். சுமார் 450 மின் கம்பங்கள் சாய்ந்தன.

வர்தா புயல்

22 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 -ஆம் ஆண்டு சென்னையை அதி தீவிரப் புயலான வர்தா புயல் தாக்கியது. இந்தப் புயலுக்கு “வர்தா’ என பாகிஸ்தான் பெயரைச் சூட்டியது. உருதுச் செல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்று பொருளாகும். சென்னையையே புரட்டிப் போட்டு தாண்டவமாடிய இந்தப் புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வர்தா புயலுக்கு ஏறத்தாழ 20 பேர் உயிரிழந்தனர்.

ஓகி புயல்

சென்ற வருட இறுதியில் கன்னியாகுமாரியைத் தாக்கிய ஓகி புயலை யாரும் மறந்து விட முடியாது. கடுமையான சேதத்தை விளைவித்த இந்தப் புயலின் போது பெய்த கன மழை காரணமாக மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் 11 பேர் பலி ஆயினர். அத்தோடு  தென்னை, ரப்பார், வாழை மற்றும் தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், ஏராளமான நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்தன.

தமிழகத்திற்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்திய இந்தப் புயல்களின் பட்டியலில் கஜா புயலும் சேருமா என்பது இன்று மாலை தெரிந்து விடும்.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

121
22 shares, 121 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.