வளங்களை இப்படியே சுரண்டினால் 2030-ல் இரண்டு பூமி தேவை – புவி வள மிகைச்சுரண்டல் நாள் !!

வாரி வாரி வழங்கும் இயற்கைக்கும், வரம்பு இருக்கிறது என்று உரக்கச் சொல்கிறது புவி வள மிகைச்சுரண்டல் தேதி.


219
32 shares, 219 points

நாம் வாழும் பூமி என்பது தீர்க்கமாக வரையறுக்கப்பட்டது. ஆனால் எப்படிப்பட்ட நாகரீக சமூகத்திலும் பசி என்பது எல்லையற்றது என்றே தோன்றுகிறது. உலகளாவிய சுவடுகள் வலைதளம் (Global Footprint Network), நாம், தண்ணீர் முதல் சுத்தமான காற்று வரையிலும் நமது பூமியின் இயற்கை வளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு வருடமும் இயற்கையின் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் திறன் பற்றிய ஆய்வின் அடிப்படையில் ‘புவி வள மிகைச்சுரண்டல்’  நாளாக  ஒரு தேதியை அறிவிக்கிறது .

அறிந்து தெளிக !
ஒரு ஆண்டு முழுவதும் மக்களால் சுரண்டப்படும் புவியின் இயற்கை வளங்களைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கி வருகிறது பூமி. ஒரு வருடத்தில் புவியின் புதுப்பித்துக் கொள்ளும் திறனுக்கு மேலதிகமாக வளங்களை மக்கள்  சுரண்டத் தொடங்கும் தினமே  “புவி வள மிகைச்சுரண்டல் நாள்.”

இந்த வழக்கம் முதன்முதலில் 1970-ம் ஆண்டின் தொடக்கத்தில் உண்டானது. அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது. இந்த வருடம் ஆகஸ்ட் 1, அதாவது நேற்று புவி வள மிகைச்சுரண்டல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படிப் பார்த்தாலும், மனிதனால் எடுத்துக் கொள்ளப்பட்ட வருடாந்திரத் தேவையை, மீண்டும் புதுப்பித்துக்கொள்ள பூமிக்கு ஒரு வருடம் என்பது போதுமானதாக இல்லை என்று GFN கூறுகிறது.

இதை இன்னும் தெளிவாகக் கணக்கிட, பூமியின் புதுப்பித்தல் திறனை, அதன் சுற்றுசூழல் வளங்கள் மற்றும் மனிதத் தேவைகளின் அடிப்படையில் பிரிக்கிறது GFN. ஐ.நா சபையிலிருந்து ஒவ்வொரு நாட்டிற்கும் 15,000 தரவுப்புள்ளிகள் பெறப்பட்டு அதன் மூலம் வகைப்படுத்தப் படுகிறது.

பூமியின் புதுப்பித்தல் திறன் நான்கு முக்கியக் காரணிகளைக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றது. அவை;

  • மக்களால் நுகரப்படும் இயற்கை வளங்களின் அளவு
  • குறிப்பிட்ட பிராந்தியத்தின் மக்கள் தொகை
  • புவிசார் செயல்பாடுகளில் மக்களின் திறன்
  • இயற்கையின் உற்பத்தித் திறன்

2030-ம் ஆண்டில் மனித சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய நமக்கு இன்னொரு பூமி தேவைப்படும் என்கிறது இந்த ஆய்வறிக்கை. இப்போது 2018-ல் மொத்த புவியின் புதுப்பித்தல் திறனை கணக்கில் கொண்டு பார்த்தால், நாம் ஒரு பூமியிலிருந்து , 1.7 பூமிக்கான வளங்களை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

காடுகளை அழித்தல், மீன்பிடித்தலின் வீழ்ச்சி, வறட்சி, பசுமை இல்ல விளைவு ஆகியவற்றால் பூமி விரைவாக சீரழிந்து வருவதால் பேரிடர்கள், பொருளாதார சேதம் மற்றும் இன அழிவுகள் ஏற்படலாம் என இதன் மூலம் அவதானிக்கப்படுகிறது.

உலக மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 86% மக்கள் தங்கள் இயற்கை வளங்களின் இருப்பை மிகையாகச் சுரண்டி வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய செயல்பாடு தான் ‘ சுற்றுசூழல் பற்றாக்குறை’ என்ற வார்த்தை உருவாகக் காரணமாகிறது. சில நாடுகள் ஏனையவர்களை விட மோசமாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்கர்கள் அளவுக்கு உலக மக்கள் அனைவரும் இயற்கை வளங்களை சுரண்டினால், அப்போது புவி வள மிகைசுரண்டல் தினம் மார்ச் 15-ம் தேதியாக கீழிறங்கி இருக்கும். இதில் அமெரிக்காவை விட மோசமாக மேலும் 5 நாடுகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால், பல நாடுகள் ஆற்றல் பயன்பாடு மற்றும் மனித நுகர்வு காரணாமாக பெரும் பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள், சமீப ஆண்டுகளில் குறைவான ஆற்றலைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியில் வளரத்  தொடங்கியுள்ளன. வளர்ந்த நாடுகளின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் ஆரோக்கியமானதாகும். இப்போது நாம் உற்பத்தித் திறனை மேம்படுத்திக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது நிலக்கரி எரிபொருட்களை விடவும் மலிவானது.. வளர்ந்து வரும் நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறுமைக்கு கோட்டின் கீழ் வாழ்வோர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்மூலம் மக்கள் தொகையும் நிலையாக இருக்கலாம் அல்லது குறையலாம்.

GFN இன் அமண்டா டைப் ( Amanda Diep) அவர்களின் கூற்றுப்படி, இயற்கை வளங்களை குறைவாகப் பயன்படுத்துவது என்பது வாழ்க்கைத் தரத்தை குறைப்பது என்று ஆகாது. “எல்லோரும் நம் கிரகத்தின் மூலம் நன்றாக வாழ முடியும்,”

“தீர்க்கதரிசிகளுக்கும் வழிகாட்டிகளுக்கும் இடையில் நடக்கும் போரில், இங்கிருந்து நாம் எங்கு செல்கிறோமோ..”ஒரு புத்தகத்தில், விஞ்ஞான எழுத்தாளர் சார்லஸ் சி. மன்ன் (Charles C. Mann), எதிர்காலத்தின் தோற்ற தரிசனங்களை விவரிப்பதற்கு இந்தக் கூற்றை பயன்படுத்துகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (வழிகாட்டிகள்) மூலம் இயற்கையான வரம்புகளுக்கு அப்பாற்பட்ட நமது வழியை புதிதாக உருவாக்க முடியும் என்று நம்புபவர்கள் ஒருபுறம் மற்றும் அந்த எல்லைகளை மீறுவதால் பேரழிவுகள் உருவாகும் என்று நம்புபவர்கள் (தீர்க்கதரிசிகள்) மறுபுறம்.

“இரு சாரரும் உண்மையில் வலுவான விவாதங்களைக் கொண்டுள்ளனர்” என்று ஒரு பேட்டியில் மன்ன் கூறுகிறார். இருப்பினும், மற்றவர்களின் இழப்பில் இருக்கும் ஒரு கோணத்தை நிராகரிக்கும் ஒரு விவாதத்தில் நாம் சிக்கிக் கொண்டோம். இரண்டு தரப்பு வாதங்களும் தர்க்கரீதியாக சரியானதாகத் தான் தோன்றுகிறது. ஆனால் அது நடக்கப்போவதில்லை காரணம் அது மதிப்புகளின் விவாதமாகும் என்றும் கூறுகிறார்.

சமுதாயத்திற்கும் சுதந்திரத்திற்கும் இடையிலான பதட்டத்தை மன்ன் விலக்கி விடுகிறார். உதாரணமாக, நாம் காலநிலை மாற்றத்தைச் சரிசெய்யப் போகிறோம் என்றால், நாம் புதுப்பித்தல்களை ஆதரிப்போமா? , அணு சக்தியை கைவிடுவோமா? , அல்லது கார்பன்-டை-ஆக்சைடு அகற்றுதல் மற்றும் புவி-பொறியியல் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப திருத்தங்களைத் தேர்வு செய்வோமா?

இது இயற்கை வரம்புகளை புறக்கணித்துவிட்டாலும், தனிநபர் சுதந்திரத்தை அதிகரிக்கும் வழிகளில் பருவநிலை சிக்கலை எதிர்கொள்ள முயற்சிக்கிறது.

தீர்க்கதரிசிகளின் முதல் தேர்வு, இயற்கை மற்றும் சமூகங்களுடன் இணக்கமாகப் பணிபுரியும் தீர்வு. இது பூகோள-பொறியியலின் தொழில்நுட்ப வலிமையைப் பொறுத்தது

இரண்டாவது தேர்வு , இது உலக கண்ணோட்டத்தோடு பொருந்துகிறது, இது இயற்கை வரம்புகளை புறக்கணித்துவிட்டாலும், தனிநபர் சுதந்திரத்தை அதிகரிக்கும் வழிகளில் பருவநிலை சிக்கலை எதிர்கொள்ள முயற்சிக்கிறது.

இயற்பியல் விதிகளின் படி இந்த இரண்டுமே சாத்தியப்படாத ஒன்று அல்ல. ஆனால் இந்த கேள்விகள் இயற்கை மதிப்புகளின் கீழ் வைக்கப்படுகின்றன என்பது தான் இதைக் கடினமாக்குகிறது என்கிறார் மன்ன்.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

219
32 shares, 219 points
Web Desk

Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.