இந்த வருடத்தின் மிக நீண்ட இரவு இன்றுதான் – கூகுள் டூடுல் வெளியீடு

இந்த வருடத்தின் மிகக்குறைவான பகல் பொழுது இன்றுதான்!!


176
28 shares, 176 points

பூமியின் சாய்வின் காரணமாக துருவப்பகுதிகளின் மீது விழும் சூரிய ஒளிக்கதிர்களின் அளவானது குறைவதாலேயே பகல் பொழுதின் நேரம் குறைகிறது. அதாவது சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு இந்த ஆண்டில் மிக அதிகமாக இருப்பது இன்றுதான். இதனால் இன்று இரவு வழக்கத்தினை விட நீண்ட இரவாக இருக்கும். ஆங்கிலத்தில் இதனை Solstice என்று அழைக்கிறார்கள். உண்மையில் இந்த வார்த்தை வந்தது solstitium என்ற லத்தின் வார்த்தையில் இருந்துதான்.

google-doodle
Credit: Google

இந்த நிகழ்வானது வருடத்திற்கு இரண்டுமுறை நடைபெறும். வட அரைக்கோளத்தில் டிசம்பர் மாதத்திலும், தெற்கு அரைக்கோளத்தில் ஜூன் மாதத்திலும் இதனைக் காணலாம்.

எப்படி இது நிகழ்கிறது?

ஆண்டின் இந்த மாதத்தில் பூமத்திய ரேகைக்குக் கீழே அதாவது தென்னரைக் கோளத்தில் அதிகமாகவும் வட அரைக்கோளத்தில் குறைவாகவும் சூரிய ஒளியானது படும். இதற்குக்காரணம் மகர ரேகை சூரியனுக்கு எதிர்த்திசையில் அமைந்திருப்பது தான். இதனாலேயே சூரிய ஒளியின் அளவு குறைகிறது.

மேலும் பூமி 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதன் காரணமாக பூமியின் பரப்பில் எங்கும் பரவலான சூரிய ஒளி கிடைக்காமல் போகிறது. வட அரைக் கோளத்தில் இதே நிகழ்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.

கொண்டாட்டங்கள்

உலகம் முழுவதும் பல நாடுகள் இந்த நாளினை வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றன. சீனாவில் இந்த நாளானது டாங்ழி திருவிழா என்று அழைக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரிசியால் செய்யப்பட உருண்டைகளை உண்டு மகிழ்வார்கள்.

winter-solstice
Credit: Old Farmers Almanac

அயர்லாந்து நாட்டில் உள்ள Newgrange என்னும் 5000 வருட பழைமையான கல்லறையில் இந்த நாளின் சூரிய உதயத்தின் போது மக்கள் கூடி இனிப்புகளை பரிமாறிக்கொள்வர்கள். குளிர்காலத்தை வரவேற்பதன் அறிகுறியாகவே பல இடங்களிலும் இந்த கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன.

 

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

176
28 shares, 176 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.