இந்த வார ஆளுமை – மாணிக் சர்க்கார் – திரிபுரா முன்னாள் முதல்வர் – மார்ச்-11, 2018


240 shares
Manik-Sarkar-Ex-Tripura-Chief-Minister-Person-of-the-week

மாணிக் சர்க்கார் ,திரிபுராவின் முன்னாள் முதல்வர், 69 வயதான இவர், 1980 -ல் தனது 31 வயதில் திரிபுராவின் அகர்தலா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1983 -லும் அவரே தேர்தலில் வென்றார். 1998 முதல் தொடர்ந்து 20 ஆண்டுகள் திரிபுராவின் முதல்வராக இருந்தார் .இந்திய பொதுவுடமை கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் ஆவார்.

இவர் 1992 ஆம் ஆண்டு பாஞ்சாலி பட்டாச்சார்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை .இவரது மனைவி மத்திய சமூக நலத்துறையில் பணியாற்றுகிறார் .

1971 இல் இளங்கலை வணிகவியல் படித்த இவர் தனது சிறு வயது முதலே அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

முதல்வராக இருந்த போது, இந்தியாவிலேயே நேர்மையான, எளிமையான, ஏழ்மையான முதல்வரக இருந்தார். தனது மாத ஊதியமான ரூ.26,315/- ஐ கட்சிக்கே தந்திருக்கிறார் . கட்சி தந்த ரூ.9700/- ல் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இவரின் கட்சியையும் ,பொதுமக்களையும் தாண்டி  எதிர்கட்சியினரும் புகழ்ந்து பேசுகின்றனர்.

மாணிக் சர்க்கார் சுதந்திரமான அரசை உருவாக்கியவர் .திரிபுராவை மிக அமைதியான, வளரும் மாநிலமாக மாற்றியவர்.

திரிபுராவில் நடந்த தேர்தலில், பிப்ரவரி 18 இல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இவரது தொகுதியில் இவர் வெற்றி பெற்று இருந்தாலும், இவரது கட்சி தோல்வியுற்றதால் பா.ஜ.க வசம் முதல்வர் பதவி சென்றது.

தமிழக மக்கள் இவரை காமராஜருடன் ஒப்பிட்டு பேசிவருகின்றனர். 2018 தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலின் போது, 5 முறை முதல்வராக இருந்த இவர் வங்கிக்கணக்கில் வைத்திருந்தது ரூ.2410/- மட்டுமே. 2013 தேர்தலின் போது இவர் வங்கிக்கணக்கில் இருந்தது ரூ.9720/-.

Manik-Sarkar-Ex-Tiripura-CM-Person-of-the-week-Mar2018


Like it? Share with your friends!

240 shares
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.