இந்த வார ஆளுமை – ஜஸ்டின் ட்ருடோ – கனடா பிரதமர் – மார்ச்-04, 2018


191 shares
Justin_Trudeau_Canadian-PM-Political-Timeline-Tamil

ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவின் 23வது பிரதமர், 46 வயதான இவர் நவம்பர் 4, 2015 அன்று கனடா நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார். குத்துச்சண்டை வீரரான இவர் சில காலம் ஆசிரியராகவும் இருந்தார். தந்தையின் மறைவுக்குப்  பின் அரசியலுக்கு வந்தார்.

மனைவி சோஃபி யை காதலித்து 2004 -ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பட்டப்படிப்பு படித்துள்ள ட்ருடோ, கனடாவின் இரண்டாவது இளம் பிரதமராக 43 -ம் வயதில் பதவி ஏற்றார். Common Ground– என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். The Great War – தொலைக்காட்சி படத்திலும் நடித்திருக்கிறார்.

2008 – ல் நாடாளுமன்ற உறுப்பினர்  ஆனார்.

2013 – கனடா லிபரல் கட்சி- யின் தலைவரானார்.

2015 – கனடா தேர்தலில் பெரும் வெற்றி பெற்று கனடாவின் 23 வது பிரதமராக பதவியேற்று இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் இந்தியா வந்த இவரை பிரதமர் மோடி வரவேற்கவில்லை. கனடாவில் பஞ்சாபியர்களுக்கும், தமிழர்களுக்கும் ட்ருடோ ஆதரவாக இருப்பதால் தான் மோடி சந்திக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து சில தினங்களுக்கு பின் மோடி சந்தித்தார். மிக எளிமையாக, தனது குடும்பத்துடன், இந்தியாவில் பல இடங்களையும் சுற்றிப்பார்த்து விட்டு கனடா திரும்பினார் ட்ரூடோ.

கனடாவில் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள ட்ரூடோ-வை வரவேற்று தமிழக இளைஞர்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு ட்ரூடோ தமிழகம் வராமலே கனடா திரும்பிச்சென்றார்.

ஜஸ்டின் ட்ரூடோ – வை இந்த வார ஆளுமையாக எழுத்தாணி கொண்டாடி மகிழ்கிறது.

Justin-Trudeau-Canadian-Prime-Minister-min2


Like it? Share with your friends!

191 shares
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.