இந்த வார ஆளுமை : இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை – எம்.எஸ்.சுவாமிநாதன் – ஆகஸ்ட் 06, 2018

ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டுமானால் முதலில் அங்கு பசிக்கொடுமை இல்லாதிருக்க வேண்டும். அதற்கு உணவு உற்பதியில் நாடு தன்னிறைவு அடைந்தாக வேண்டும். இந்த இலக்கை நோக்கி பயணப்பட உதவிய எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் பிறந்த தினம் நாளை (07-08-2018).


218
32 shares, 218 points

இந்தியாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடிய காலம் ஒன்று உண்டு. பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் 1943-ல் வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் மட்டும், சுமார் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். 1960-களிலும் அத்தகைய சூழல் உருவானது. அதைத் தடுக்க இந்திய அரசு பல தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. அதில் முக்கியமானது பசுமைப்புரட்சி.

உணவு தானிய உற்பத்திப் பெருக்கத்துக்கான திட்டங்கள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது (1966) தீட்டப்பட்டன. அப்போதைய மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சி.சுப்பிரமணியமும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனும் அத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினர்.

M.S.Swaminathanஉயர் விளைச்சல் தரும் வீரிய ரகங்கள், மேம்பட்ட உரப்பயன்பாடு, முறையான நீர்ப்பாசனம், இயந்திரமயமாக்கல், பூச்சிக்கொல்லி மருந்து நிர்வாகம் ஆகிவற்றின் கலவையான இத்திட்டத்தால், 1970-களில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, தேவையைவிட அதிகரித்தது. உணவுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலைமை அப்போது மாறியது.

அறிந்து தெளிக!
பசுமைப் புரட்சிக்கு அடித்தளமிட்டவர், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான பெஞ்சமின் பியாரி பால் (1906- 1989). கோதுமை சாகுபடியில் உயர் விளைச்சல் தரும் ரகங்களை உருவாக்கியவர் அவர்.

இத்திட்டத்தின் நாயகராக தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருதப்படுகிறார். ‘இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை’ என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

தமிழகத்தின் கும்பகோணத்தில் மருத்துவர் சாம்பசிவன்- பார்வதி தங்கம்மாள் தம்பதியின் இரண்டாவது மகனாக 1925, ஆகஸ்ட் 7- ல் பிறந்தார் சுவாமிநாதன். கும்பகோணம் கத்தோலிக் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் அவர் படித்தார். பிறகு திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் விலங்கியலில் பி.எஸ்சி. முடித்தார்.

அவரது குடும்பம், சுவாமிநாதன் மருத்துவராக வேண்டும் என்று விரும்பியது. ஆனால், 1943 வங்கப் பஞ்சத்தின் கொடுமைகளை அறிந்த சுவாமிநாதன், நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், விவசாய ஆராய்ச்சியை தனது துறையாகத் தேர்ந்தெடுத்தார்.

M.S.Swaminathan

1966-ல் பசுமைப்புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டபோது எம்எஸ்.சுவாமிநாதன் அதில் இடம்பெற்று, திட்டத்தின் வெற்றிக்கு வேளாண் ஆராய்ச்சியைப் பயன்படுத்தினார். அதன் விளைவாக, 1971 முதல் 1977 வரை தேசிய வேளாண் ஆணைய உறுப்பினராகவும், 1972 முதல் 1979 வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கூட்டமைப்பின் (ICAR) தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்தார்.

சுவாமிநாதனின் நிர்வாகத் திறமை அவருக்கு பொறுப்பான அரசுப் பதவிகளை வகிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது. 1979-80 காலகட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்தார் சுவாமிநாதன். 1980-82 காலகட்டத்தில்  மத்திய திட்டக்குழு உறுப்பினராகவும் அவர் பொறுப்பு வகித்தார். 1981-82 காலகட்டத்தில்  தேசிய உயிரித் தொழில்நுட்ப வாரியத்தின் தலைவராகவும் அவர் இருந்தார்.

சென்னையில் அவர் நிறுவிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனம், நீடித்த வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

உலக அளவிலும் சுவாமிநாதனின் திறமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1981-85 ல்  அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைவராகவும், 1982 முதல் 1988 வரை பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்தின் (IRRI) தலைமை இயக்குநராகவும் அவர் பொறுப்பேற்றிருந்தார். 1984-90-இல் சர்வதேச இயற்கைவளப் பாதுகாப்பு சங்கத்தின் தலைவராக அவர் செயல்பட்டார்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகவும் (2007-13), தேசிய விவசாயிகள் நல ஆணையத்தின் தலைவராகவும் (2004-06) அவர் இருந்துள்ளார்.

சென்னையில் அவர் நிறுவிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனம், நீடித்த வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனை இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.


Like it? Share with your friends!

218
32 shares, 218 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.