நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய 10 அரசாங்க செயலிகள்

ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டிய, தெரிந்து வைத்திருக்க வேண்டிய  அரசாங்கச் செயலிகளின் பட்டியலை உங்களுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.


172 shares

அரசாங்கத்தின் பல விதமான சலுகைகள் மற்றும் சேவை தகவல்கள் மக்களிடம் இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமாய் தேவைப்படும் அரசாங்கம் சார்ந்த உதவிகளுக்கு இந்தப் பயன்பட்டு செயலிகள் நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும்.

1. ஸ்டார்ட் அப் இந்தியா செயலி (Startup India App)

தொழில் முனைவோருக்காக பிரத்தியேகமாக இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது தான் இந்த ஸ்டார்ட் அப் இந்தியா செயலி. இந்தியாவில் தொழில் தொடங்க முனைவோருக்கான தொடக்க பயன்பாட்டு வழிமுறைகள், தகவல்கள் மற்றும் அரசாங்கத்தின் முனைப்புகள் என அனைத்துத் தகவல்களும் இந்தச் செயலியில் கிடைக்கிறது.

2. இந்தியப் காவல்துறை அழைப்பு செயலி (Indian Police on Call App):

இந்தச் செயலி அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் அங்கு செல்வதற்கான தூரத்தைக் கணக்கிட்டுத் துல்லியமாகத் தருகிறது. அருகிலுள்ள காவல் நிலையத்தை அடைய வழி மற்றும் தூரம் போன்ற அனைத்துத் தகவல்களும் இந்த செயலியில் உள்ளது. அதுமட்டுமில்லாமல், உங்கள் மாவட்டத்தில் எத்தனை மாவட்டக் கட்டுப்பாட்டு அறை மற்றும் எஸ்.பி அலுவலகங்கள் இருக்கின்றன என்று துல்லியமாகக் காட்டுகிறது. அவசர உதவிக்கு இந்தச் செயலியைப் பயன்படுத்தி அருகில் உள்ள காவல் நிலையத்தை போன் கால் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியையும் பயனருக்கு வழங்குகிறது.

 

3. இ-பாதஷால செயலி (ePathshala App):

இந்தச் செயலியை மனித வள மேலாண்மை அமைச்சகம் மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்தச் செயலி மூலம் மொபைல் போன், டேப்லெட் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்கள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுக்குத் தேவையான இ-புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

அவர்களின் சாதன சேமிப்பகத்தின் படி தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்ளலாம். இந்தச் செயலி பிஞ்ச், செலக்ட், ஹைலைட் சிறப்பம்சம் மற்றும் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் பயன்படுத்தி புத்தகங்களை ஒலி வடிவில் கேட்கும் அம்சத்தையும் பயனர்களுக்கு வழங்குகிறது.

 

4. எம்பரிவஹான் செயலி (mParivahan App):

இந்தச் செயலி மூலம், பயனர்கள் தங்கள் ஓட்டுனர் உரிமத்தின் டிஜிட்டல் நகலை உருவாக்க முடியும் மற்றும் பயனரின் நான்கு சக்கரம் / இரு சக்கர வாகனத்தின் பதிவுச்  சான்றிதழைப் பதிவு செய்து கொள்ளலாம். பயனரிடம் ஏற்கனவே இருக்கும் வாகனத்தின் பதிவு விவரங்கள் மற்றும் பழைய செகண்ட் ஹாண்ட் வாகனத்தின் சான்றிதழ் விவரங்களைச் சரி பார்க்க முடியும். செகண்ட் ஹாண்ட் கார் வாங்க விரும்புவோர், இந்தச் செயலி மூலம் அந்த வாகனத்தின் வயது மற்றும் பதிவு விவரங்கள் என அனைத்துத் தகவலையும் சரிபார்க்க முடியும்.

 

5. டிஜிசேவாக் செயலி (DigiSevak App):

சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கு, தன்னார்வலராகத் தொண்டு செய்ய விரும்புகிறீர்களா? இந்தச் செயலி உங்களுக்கானது தான். உங்களின் திறமை மற்றும் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆர்வமுள்ள பயனர்கள் பல்வேறு அரசாங்கத்  துறைகளின் பல்வேறு பணிகளுக்குத் தன்னார்வலராக தொண்டு செய்யப் பதிவு செய்வதற்கான செயலி தான் இந்த டிஜிசேவாக் செயலி.

 

6. உமாங் செயலி (UMANG-Unified Mobile Application for New-age Governance):

மின்னணு / தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தேசிய மின் ஆளுமைப் பிரிவு ஆகிய அமைச்சகங்களினால் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி அனைத்து அரசாங்கத் துறைகள் மற்றும் அவற்றின் சேவைகளை ஒன்றாக ஒரே இடத்தில் பயனர்களுக்குக் கொண்டு வந்திருக்கிறது. இது ஒரு பரிணாம வளர்ச்சித் திட்ட செயலி என்றே கூறலாம். இந்த செயலியில் ஒரே இடத்தில் ஆதார் போன்ற டிஜிட்டல் இந்தியா சேவைகள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன.

 

7. எம் பாஸ்ப்போர்ட் செயலி (mPassport)

இந்தச் செயலியின் பெயர் குறிப்பிடுவது போல, இந்தச் செயலி பாஸ்போர்ட் பயன்பாட்டு நிலை கண்காணித்தல், பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) இருக்கும் இடம் மற்றும் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் தகவல்கள் போன்ற அனைத்துத் தகவலையும் பயனர்களுக்கு ஸ்மார்ட்போனில் வழங்குகிறது.

 

8. கிசான் சுவிதா செயலி (Kisan Suvidha App)

விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக செயலி தான் கிசான் சுவிதா. விவசாயிகளுக்கான பல பயனுள்ள தகவலை அணுக இந்தச் செயலி உதவுகிறது. விவசாயிகளுக்கு வானிலை, சந்தை விலை, தாவரங்களின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் என விவசாயம் சார்ந்த பல தகவல்களை வழங்குகிறது.

 

9. இன்கிரிடிபில் இந்தியா செயலி(Incredible India app)

இந்தியச் சுற்றுலா தொடர்பான அனைத்துத் தகவல்களுக்கும் இந்தச் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கான தகவல்கள், அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டுச் சுற்றுலா இயக்குநர்கள், ட்ராவல் ஏஜென்ட்கள், சுற்றுலா கைடுகள், விடுதிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் பயனர் இந்தச் செயலி மூலம் பெற முடியும்.

 

10.போஸ்ட் இன்போ செயலி (Postinfo App)

இந்திய அஞ்சல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தச் செயலியை உருவாகியுள்ளது. இந்தச் செயலி உங்களுக்கு அஞ்சல் கண்காணிப்புத் தகவல், அஞ்சல் அலுவலகத் தேடல், அஞ்சல் கால்குலேட்டர், காப்பீட்டு பிரீமியம் கால்குலேட்டர் மற்றும் வட்டி கால்குலேட்டர் போன்ற வசதிகளை வழங்குகிறது.

இத்துடன் தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற தபால் ஆயுள் காப்பீடு போன்ற பல்வேறு வகையான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை வழங்குகிறது. இந்தச் செயலி மூலம் அஞ்சல் / கிராமப்புற தபால் ஆயுள் காப்பீட்டுத் தொகைகள் அனைத்தையும் பயனர்கள் செலுத்திக் கொள்ளலாம்.

இது மட்டுமின்றி இன்னும் ஏராளமான இந்திய அரசாங்க செயலிகள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தில், கூகுள் பிளே ஸ்டோர் இல் கிடைக்கிறது.


இது போன்ற பயனுள்ள பல கட்டுரைகளையும், தகவல்களையும் தெரிந்துகொள்ள எழுத்தாணியின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

172 shares
மித்ரா
தீதும் நன்றும் பிறர் தர வாரா. Spread Love Wherever You Go..!

Comments

comments

Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.