மோடி vs கறுப்புக்கொடி – தமிழில் LiveBlogging

Black_flag_waving-against-Modis-TN-Visit
Credit: anweshanam.com

போராட்டம் துவங்கியுள்ள 8 மணி முதல் போராட்டம் முடியும் வரை உங்களுக்கு நேரடி வலைப்பதிவாக வழங்கி வருகிறது எழுத்தாணி. இங்கே காணுங்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி  தமிழகம் முழுவதும் பெருமளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில்,  சென்னைக்கு அருகேயுள்ள திருவிடந்தையில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று வருகிறார். மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட தி.மு.க வின் செயல் தலைவர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் வேண்டுகோள் வைத்திருந்தார். அ.தி.மு.க, பா.ஜ.க தவிர பிற கட்சிகள் அனைத்தும், கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டுள்ளதால் போராட்டக்களம் பரபரப்பாகியுள்ளது.