எனக்கு ஏன் எம்.பி சீட் தரவில்லை? கதறியழுத பாஜக முன்னாள் மந்திரி

0
26

உத்திரப்பிரதேச மாநிலம் தேசிய அரசியலில் முக முக்கிய அங்கம் வகிக்கும் மாநிலம். மொத்தம் 80 தொகுதிகள். இந்தியாவிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம். காங்கிரசும், பாஜகவும் உ.பியைப் பிடிக்க பல முயற்சிகள் எடுத்தாலும் அகிலேஷ் – மாயாவதி கூட்டணி தேசியக் கட்சிகளுக்கு நெருக்கடி அளித்து வந்தது.

modi
Credit: India Today

காங்கிரஸ் இதனை சமாளிக்க பிரியங்கா காந்தியை அம்மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமித்திருக்கிறது. அதே நேரத்தில் மாநிலத்தின் ஆளுங்கட்சியான பாஜக ஏற்கனவே மந்திரிகளாக இருந்தவர்களில் 16 பேருக்கு இம்முறை வாய்ப்பளிக்கவில்லை.

அதிருப்தி மந்திரிகள்

முன்னாள் மந்திரிகளுக்கு இம்முறை வாய்ப்புக் கிடைக்காமல் போனதால் பலரும் பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்களில் ஆஷீல் வர்மா மற்றும் ஷியாமா சரண் குப்தா ஆகியோர் அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர். மற்றொரு எம்.பியான அசோக் டோரே காங்கிரஸில் இணைந்துள்ளார்.

priyanga rawat
Credit: breaking tube

உ.பியின் பாராபங்கி தொகுதியின் மந்திரியாக இருப்பவர் பிரியங்கா ராவத். இவருக்கு இம்முறை பாஜக வாய்ப்பளிக்கவில்லை. பொதுக்கூட்டம் ஒன்றில் இதைப்பற்றிப் பேசும்போது எனக்கு ஏன் சீட் தரவில்லை என அழுதிருக்கிறார். மேடையிலேயே கதறியழுத பிரியங்காவை சுயேட்சையாக அந்தத் தொகுதியில் நிற்குமாறு அவரது நலம் விரும்பிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலித் எதிரி

வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் அன்சுல் வர்மா, கிருஷ்ணா ராய், அஞ்சு பாலா மற்றும் அசோக் டோரா ஆகியோர் தலித் சமூகத்தினர். இதனால், பாஜக தலித்துகளுக்கு எதிரானவர்கள்அதனால் தான் எங்களுக்கு சீட் தரவில்லை என காட்டமாக பேசிவருகின்றனர். மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவிற்கும் மறுவாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இடமாற்றம்

பாஜகவின் மற்றொரு வியூகம் வேட்பாளர்களின் தொகுதிகளை மாற்றியது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தியின் பிலிப்பித் அவரது மகன் வருண்காந்திக்கு மாற்றப்பட்டுள்ளது. வருணின் சுல்தான்பூர் தொகுதி மேனகாவுக்கு மாற்றி அளிக்கப்பட்டுள்ளது. ராம்சங்கர் கட்டாரியா, ஆக்ராவில் இருந்து எட்டாவாவிற்கும், வீரேந்தர்சிங் மஸ்த் பஹதோயில் இருந்து பலியாவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

_Modi_Shah
Credit: The Hans Of India

இப்படி அந்த மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது பாஜக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இடைத்தேர்தலில் பெற்ற தோல்வி, இப்போது அகிலேஷ் – மாயாவதி கூட்டணி, காங்கிரசில் பிரியங்கா காந்தியின் வருகை என பாஜகவிற்கு பல தலைவலிகள் இருக்கும் போது அந்தக் கட்சிக்குள்ளே ஏற்பட்டுள்ள இந்தப்பிளவு மிகப்பெரிய பின்னடைவை அந்தக் கட்சிக்கு பெற்றுத்தரும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.