தேர்வு எழுதிய 3562 வக்கீல்களில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை!!

0
41
Supreme-court-HC
Credit: The Quint

இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில், பல கட்சிகளுக்கு நல்ல அடி விழக் காத்திருக்கிறது.  ஆருடம் எல்லாம் எப்படி பலிக்கும் என்று கேட்கிறீர்களா?. வெளிவரும் தேர்வு முடிவுகளைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. யாரோ இந்திய தேர்வுகளை  கடுமையாக சபித்துள்ளார்கள். ஒருவேளை சாபங்கொடுத்தது போபால் சாமியாரிணி பிரக்யா சிங் தாகூராக இருக்குமோ? சரி என்னதான் ஆச்சு?

தடம்புரண்ட ரயில்வே

இந்த வருடம் வெளியிடப்பட்ட ரயில்வே group D தேர்வு முடிவுகளில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. தேர்வு முடிவுகளை சந்தேகித்த நீதிபதிகள் விளக்கம் கேட்டு ரயில்வே தேர்வாணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

மின்சார வாரியத்துக்கே ஷாக்…

Tangedco வில் காலியாக உள்ள எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் என்ஜினியரிங் பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தும் பொறுப்பு  பொறியாளர்களை பொறித்து தள்ளும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகம் பொறுப்பை “சிறப்பாக காட்டியதன்” விளைவாக வினாத்தாள் வெளியானதால் பணியிடங்களை நிரப்பும் பணிக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியது.

தெலுங்கானாவில் தேர்வுசிக்கல்

தேர்வு முடிவுகளை கையாளும் தனியார் IT நிறுவனம் ஒன்றின் (Globarena) மென்பொருள் பழுது காரணமாக, தெலுங்கானா மாநிலத்தின் 12 ஆம் வகுப்பு (Junior college system) தேர்வு முடிவுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகிப்போனது. அதில் 21 மாணவர்கள்  வெளிவந்த புதிரான  தேர்வு முடிவுகளால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டது நாடு முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது

இதென்ன பிரமாதம்! இன்னொரு ஐட்டம் இருக்கு கீழே!…

நட்டாற்றில்  “நாட்டாமைகள்”….

நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்புகளைப் பார்த்து கொந்தளித்து போனது உச்சநீதிமன்றம். இத்தனை ஆயிரம் வழக்குகளை முடிக்க எப்படியும் பத்தாண்டுகளுக்கு மேலாகும் என்று சினத்தை கக்குகிறார்கள் தலைமை நீதிபதிகள். எனவே காலியாக உள்ள அனைத்து நீதிபதிகள்  பணியிடத்தையும் விரைந்து நிரப்ப அந்தந்த மாநில அரசாங்கங்களுக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை தேர்வு செய்யும் தேர்வு நடைபெற்றது. அதில் பங்கெடுத்த 3562 வக்கீல்களில் ஒருவர் கூட பாஸாகவே இல்லை. இதில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து கலந்துகொண்ட 558 வக்கீல்களும் காலி.. அத்தனையும் வண்டு முருகன்களாக இருந்தால் என்ன செய்வது?.

SSC-HSC-exams
Credit: Newsd

இதோடு தீரவில்லை கூத்து… 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்ணே தேர்ட்டீன் பாயிண்ட் பைவ் தான் யுவர் ஆனர் (13.5). இரண்டாவது மார்க் எடுத்து ஆறுதல் பரிசை பெற்றுச்சென்றவர் இன்னொரு வண்டு (11.5).

“லைஃப்ல யாரு ஃபஸ்ட்டு வர்றான்றது முக்கியமில்லடா.. பர்ஸ்ட்லயே யாரு லாஸ்ட் வர்றான்றதுதான்டா முக்கியம்” … இந்த பஞ்சை பேசுபவர் கடைசி மார்க் எடுத்த உங்கள் இதயம் கவர்ந்த வெடிமுத்து. மார்க் மைனஸ் 43.5

(-43.5). அடிக்கிற 40 டிகிரி வெயிலுக்கு நல்ல குளுரான மார்க்கு.. அனேகமாக இவரு RCB ரசிகரா இருப்பாரோ..

எப்படி நடக்கும் தேர்வுகள்..

35 முதல் 48 வயது வரையிலான ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர்களை (பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள) மாவட்ட நீதிபதிகளாக தேர்வுசெய்யும் தேர்வு முறை மூன்று வகையான தேர்வுகளை உள்ளடக்கியது. அவை Preliminary , main exam மற்றும் viva Voce . இதில்  பட்டியல் இனத்தவருக்கு 45 (150), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 52.5 (150) ஒதுக்கீடு அற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு (unreserved)  60(150) என கட் ஆஃப் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு மதிப்பெண்கள் வழங்கப்படும்.  ஒவ்வொரு தவறான பதிலுக்கும் அரை மதிப்பெண்கள் பிடுங்கப்படும்.  Prelims மட்டுமே இரண்டு கட்டங்களாக நடைபெறும். ஒன்று சிவில் பேப்பர் மற்றொன்று கிரிமினல் பேப்பர்.

Highway Tender palanichaami CBI இரண்டாம் கட்ட தேர்வுகள் (main) வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதி நடக்க இருந்தன(!). இருப்பதிலேயே இரண்டாம் கட்ட தேர்வுகள்தான் கடினமாக இருக்கும். தீர்ப்பு எழுதுதல், ஆங்கில பத்திகளை மொழிபெயர்த்தல் மற்றும் தற்போதைய சட்ட மேம்பாடு பற்றிய கட்டுரைகள் எழுதுதல் என பல கடினமான பகுதிகள் உள்ளன. சரி என்ன சொல்லி என்ன ஆகப்போகுது. ஆனால் எல்லாருடைய மதிப்பெண்களையும் ஒன்றாக சேர்த்தால் கூட 150 வருமா? என்று நீதிமன்ற அலுவலர்கள் கிண்டல் பேசுகின்றனர். நோகடிக்கும் கேள்வி. ஆனால் நியாயமான கேள்வி.

என்ன சொல்கிறார்கள் தோல்வியடைந்த வக்கீல்கள்?

தேர்வுகளில் கலந்துகொண்ட பலர் சென்ற முறையும் தேர்வுகளில் கலந்துகொண்ட அனுபவம் உள்ளவர்கள். “அப்ப கூட இப்படியெல்லாம் கேள்வி கஷ்டமா இல்லைங்க. இப்ப சம்பந்தமில்லாத, சுத்தி வளச்சி தெளிவில்லாத கேள்வியெல்லாம் கேட்டு வச்சிருக்காங்க” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் புலம்புகிறார் கருப்புப் சட்டை அணிந்த (இது வேற கருப்பு)  வக்கீல் ஒருவர்.

இன்னொரு கருப்பு என்ன சொல்கிறார் என்றால், “ ஒட்டு மொத்த வழக்குக்கும் ஒரு வரி தீர்ப்பு எழுத சொல்றாங்க. சுருக்கமான வழக்குக்கு தீர்ப்பும் அப்படித்தான இருக்க முடியும். அவுங்க குடுத்துருக்க வாய்ப்புகளும் சம்பந்தமில்லாமல்தான்  இருக்கு”

“ அறிவியல் மற்றும் இயற்பியல் இந்த ரெண்டுமே யுனிவர்சல்ங்க. எப்பவும் மாறாது. இதுல உள்ள கேள்விக்கு இரண்டு பதில் இருக்க முடியாது. ஆனால் ஒரு வழக்குக்கு மற்றும் இன்னொரு வழக்குக்கும் ஒரே மாதிரி தீர்ப்பு வருமா? வராது. சபரிமலை தீர்ப்பு கூட 4:1 னு தான் வந்துச்சு‌. இப்படி ஒரு பெஞ்சுல உள்ள நீதிபதிகளுக்கே வித்தியாசமான தீர்ப்பு தோனும்போது நாங்க எப்படி வினாத்தாள் தயாரிச்ச நபர் எதிர்பாக்குற தீர்ப்ப எழுத முடியும்” என்று பாயிண்டு பேசுகிறார் இன்னொரு வழக்கறிஞர். நல்ல பாயிண்ட் தான் ஆனா இந்த பாயிண்டெல்லாம் பரீட்சைல ஏன் மிஸ்ஸிங்? அட நமக்கெதுக்கு சட்ட விவகாரமெல்லாம்.

“என்னங்க கேள்வி இதெல்லாம். தூக்கு தண்டனை செயல்படுத்தும்போது கழுத்துல சுருக்கு போட்றது எப்படி.. விபத்துல அடிபட்டவருக்கு முதலுதவி பன்றது எப்படி னுலாம் கேட்டு வச்சிருக்காங்க இதுக்கும் தேர்வுக்கும் என்னங்க சம்பந்தம்” என்பது இன்னொருவரின் கருத்து.

Supreme-court-HC
Credit: The Quint

“ அட யாராவது ஒருத்தர் ரெண்டு பேரு பெயிலான பரவால்லீங்க… ஒருத்தருமே பாஸாகாட்டி என்னங்க அர்த்தம்?. இப்ப என்ன எங்க யாருக்குமே வக்கீலா இருக்கறதுக்கே தகுதி இல்லனு சொல்றாங்களா? “ என்று அனைவரும் மொத்தமாக பெயிலானதை நியாயப்படுத்தி பேசுகிறார் இன்னொரு வாதாடி.

இந்தியாவில் தற்போது வழங்கப்படும் தீர்ப்புகளே மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வரும் வேளையில் இந்த நீதிபதி தேர்வு முடிவுகள் கொஞ்சம் காமெடியாக இருந்தாலும் கூடவே தமிழக எதிர்காலம் பற்றிய கவலையையும் அளிக்கின்றன.

அதெல்லாம் இருக்கட்டும் CBSE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாயின. இதில் இந்த ஆண்டும் பெண்களே அதிக விழுக்காட்டில் தேர்ச்சி அடைந்துள்ளனர் 88.7%. ஆண்கள் 79.4%. இருபாலினத்தவர் 83.4% . ஆக! ஒட்டுமொத்தமாக 83.4 விழுக்காட்டினர் தேர்ச்சியடைந்துள்ளனர். வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு எழுத்தாணி யின் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.