இனி உணவில் கலப்படம் செய்தால் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை !!

0
5
food contamination

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்திலுமே கலப்படம் செய்யப்படுகிறது. பால், சமையல் பொருட்கள், மளிகைச் சாமான்கள் போன்றவைகளில் கலப்படம் நடைபெறுவதால் ஏராளமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றன. இதனைத் தடுக்கும் விதத்தில் மகாராஷ்டிர அரசு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இனி உணவில் கலப்படம் செய்வோருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

conntamination
Credit: Webdunia

பழைய சட்டம்

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பேரவையில் காங்கிரஸ் சார்பில் பால் கலப்படத்திற்கு அரசு என்னமாதிரியான நடவடிக்கைகயை எடுக்க இருக்கிறது ? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் கிரிஷ் பாபத் ஏற்கனவே ஆறு மாத கால சிறை தண்டனை உணவில் கலப்படம் செய்வோருக்கு அம்மாநில அரசால் கொடுக்கப்பட்டு வந்ததாகவும், அதில் திருத்தம் செய்யப்பட்டு தண்டனைக்காலத்தை 14 ஆண்டுகள் உயர்த்த இருப்பதாகவும் அறிவித்தார். மேலும் இந்தக் கூட்டத்தொடரிலேயே இப்புதிய சட்டத் திருத்தம் அமுலுக்கு வரும் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விஷமாகும் பால்

பால் கலப்படம் பல குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாகப் பாதித்திருக்கிறது. சோப்பு பவுடர், யூரியா, பால் பவுடர், சோடா, குளுக்கோஸ், சுத்திகரிப்பு எண்ணெய், உப்பு மற்றும் ஸ்டார்ச் ஆகியவை பாலுடன் கலந்து விற்கப்படுகிறது. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுவதோடு வயிறு சம்பந்தமான நோய்களை எளிதில் உண்டாக்கும்.

milk contamination threat
Credit: Xtalks

முன்னணி பால் நிறுவனங்கள் சிலவற்றிலேயே இம்மாதிரியான கலப்படக் குற்றச்சாட்டுகள் சமீப காலமாக வெளிவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை தேவை அதிகம் என்பதால் கலப்படத்திற்கு எளிதில் வாய்ப்பு உருவாகிவிடுகிறது. மேலும் நிறுவனங்களின் எண்ணிகையும் அதிகம். எனவே அரசிற்கு கடும் சவாலாக இந்தப்பிரச்சனை இருக்கக்கூடும். ஆனாலும் பொதுமக்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்தினைக் கொண்டு செயல்பட்டாக வேண்டிய கட்டாயமும் அரசுக்கு உண்டு.