குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை – பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலையின் பலனை மக்களுக்குக் கொடுக்குமா அரசு ?


175
29 shares, 175 points

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போது தேவைக்கும் அதிகமான அளவில் கச்சா எண்ணெய் உள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாக அதன் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதன் எதிரொலியாக இன்று கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது, இது  கச்சா எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ஆனால், இத்துறை முதலீட்டாளர்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

fuel price in indiaகடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை அக்டோபர் மாதத்தில் அதன் உச்ச விலையை அடைந்தது. இந்நிலையில் தற்போது உற்பத்தி அதிகரித்துள்ளதால், விலை குறைந்து ஒரு பேரல் 70 டாலருக்கும் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

உலகளாவிய அளவில், எண்ணெய் சந்தைகள் வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து சரிந்து வருகின்றன. பொருளாதார மந்தநிலை மற்றும் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்க சந்தையின் 8 மாத கால சரிவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 60 டாலராகக் குறைந்துள்ளது. இது அக்டோபர் மாத உயர்வை ஒப்பிடுகையில் 20 சதவீதம் சரிவாகும். இதன் மூலம் அமெரிக்கா கச்சா எண்ணெய் சந்தை தற்போது மோசமான நிலையை அடைந்துள்ளது.

மோசமாகச் சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு உங்களை எப்படி பாதிக்கும்?

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு – காரணங்கள் என்ன?

இந்த விலை சரிவிற்கான பலனை அப்படியே இந்திய எண்ணெய் நிறுவனங்கள், மக்களுக்குக் கொடுத்தால் கணிசமான தொகை குறைந்து பெட்ரோல் டீசல் விலை சரியும். ஆனால், பெட்ரோல், டீசல் விலைகளில் அவ்வளவு பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. கச்சா எண்ணெய் விலை ஏறிய போது இங்கும் மக்களைக் கலங்கடிக்கும் வகையில் பெட்ரோல், டீசலின் விலைகள் எகிறின. குறைந்த போது எந்த மாற்றமும் இல்லை.

fuel price in indiaசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு, புது டெல்லியில் ரூ.78.06, கொல்கத்தாவில் ரூ. 79.98, மும்பையில் ரூ83.57 லிட்டர் மற்றும் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 81.08 ஆக இருக்கிறது.

டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு புது டில்லியில் 72.74 ரூபாய். கொல்கத்தாவில் ரூ. 74.60, மும்பையில் 76.22 ரூபாயும், சென்னையில் ரூ. 76.89 ஆகவும் இருக்கிறது.

இது சென்ற நாட்களில் எகிறி நின்ற விலையை விடக் குறைவு தான் என்றாலும், 22% வரையிலும் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதை வைத்துப் பார்க்கையில் இன்னும் கூட பெட்ரோல் டீசல் விலைகள் குறைக்கப் படலாம் என்பதே பொருளாதார வல்லுனர்களின் கருத்து.


Like it? Share with your friends!

175
29 shares, 175 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.