சட்டம் தெளிவோம் ! – அத்தியாயம் 9 – தெரிந்து கொள்ள வேண்டிய தண்டனைச் சட்டங்கள்

இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியச் சட்டப் பிரிவுகள்.


199
30 shares, 199 points

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் சட்டங்கள்.

1. ஜனாதிபதி தவறு செய்தால் கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து (Article 361(4)) சிவில் வழக்குத்  தொடரலாம்.

2. நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217

3. நீதிபதியை எதிர்மனுதாரராகச் சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404

4. அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறினால் 1 வருடம் சிறை. IPC-166

5. எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரிந்த இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6. சட்டம் படித்த எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303, 302(2)

7. வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8. இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும், ஆவணம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றைத்  தாய்மொழியில் கேட்டுப் பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும்.

9. இந்தியக் குடிமகன் எவரையும், எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) மூன்றாம்  நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையைக் கழற்றி விடலாம். CRPC-43

10. ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும், கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11. காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிருந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம். செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12. கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில் தான் வழக்குச் செலவு கூடும். பொய் வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன் படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு. சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும். மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்குத் தர வேண்டும்.

13. தாலுகா அலுவலகத்தில் வாரிசுச் சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RI அலுவலகத்திலும், கிராம  நிர்வாக அலுவலகர் அலுவலகத்திலும்  தவம் கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14. காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத் தொகையும் கேட்டுப் பெறலாம். CRPC 160(2)

15. அதீதமான சூழ்நிலையில் மட்டும் கை விலங்கிட முடியும் மற்ற படி செய்யக் கூடாது. Article 21(14)

16. புகார் மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால், நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.  Article 32(8)

17. பொய் வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.

18. பொய் என்றும், புனையப்பட்டது என்றும் தெரிந்திருந்தும் உண்மையைப் போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19. முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20. அடுத்தவருடைய அசையும் சொத்தை, பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC-403

21. குழந்தை உயிருடன் பிறப்பதைத் தடுத்தல் மற்றும் பிறந்த பின் இறக்கச் செய்தல் ஆகிய குற்றங்களுக்கு பத்து வருட சிறை தண்டனை உண்டு. IPC-315.

22. தற்காப்புக்காகச் செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23, பிற மதம் நிந்தித்தல் 2 ஆண்டு சிறை. IPC-295

24. மத உணர்வுகளைப் புண்படுத்தினால்  ஒரு வருடம் சிறை. IPC-295

25. ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றினால் 3 ஆண்டு சிறை. IPC-419

26. ஏமாற்றும் பொருட்டு போலியாகப் பத்திரம் தயார் செய்தால் 7 வருடம் சிறை. IPC-468

27. சொத்து அடையாளக் குறியை மாற்றினால் 3 ஆண்டு சிறை. IPC-484

28. கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தால் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29. முந்தைய திருமணத்தை மறைத்தால் 10 வருடம் சிறை. IPC-495

30. IPC-499  – இல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின் படி, யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட.

இதில்,

IPC என்பது இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) ஆகும்.
CRPC என்பது குற்ற விசாரணை முறைச் சட்டம் (Code of Criminal Procedure) ஆகும்.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

199
30 shares, 199 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.