1.5 லட்சம் கோடியில் போர் விமானங்கள் வாங்கும் இந்தியா

0
36
F22_Combat_Hammer

இந்திய விமானப்படை 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 114 விமானங்கள் வாங்கத் திட்டமிட்டு அதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது. இது உலக அரசியலில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சமகாலத்தில் இத்தனை பெரிய தொகைக்கு ராணுவ டெண்டர் எந்த நாட்டின் சார்பிலும் விடப்படவில்லை. இந்தியாவின் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்ற லாக்கீட் மார்டின், யூரோ ஃபைட்டர், டசால்ட், போயிங் எ ஃஏ 18, ரஷ்ய நிறுவனம் ஒன்றும் முயற்சித்து வருகின்றன. இந்தப் பந்தயத்தில் அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் டெண்டரை கைப்பற்ற கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

Credit:
Wikipedia

அந்த  நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் விவேக் லால் டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் “இந்தியா எங்களிடமிருந்து 114 எஃப் 21 ரக விமானங்களை வாங்கினால், மற்ற நாடுகளுக்கு அதனை நாங்கள் விற்பனை செய்ய மாட்டோம். மேலும் அமெரிக்காவின் சர்வதேச போர் விமானங்கள் ஈகோ சேவையில் இந்தியாவும் இணைக்கப்படும். இந்த ஒப்பந்தம் எங்கள் நிறுவனத்திற்குக் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவிலேயே எஃப் 21 ரக விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க அனுமதி அளிக்கப்படும். எஃப் 16 ப்ளாக் 70 ரக விமானத்தை விட இதன் தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அளவு ஆகியவை அதிகமாகும். இந்திய விமானப்படையை நாங்கள் முடிவை எடுத்துள்ளோம்” என்றார்.

J 10 fighter Wallpapers

இதில் கவனிக்க வேண்டியது அவருடைய கருத்தின் கடைசி வரியை தான். இந்தியாவின் விமானப்படையின் தேவையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏனெனில் பால்கொட் தாக்குதலுக்குபிறகு இந்திய விமானப்படையின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அப்பட்டமாக வெளியே தெரிந்தது. இந்தியாவில் உள்ள மிக் 21, மிக் 23, மிக் 27, சுகோய், மிராஜ் 2000, தேஜாஸ் ரக விமானங்கள் உள்ளன. இவற்றில் சுகோய் மட்டுமே லாக்கீட் மார்ட்டின் விமானங்களுக்கு பதிலடி கொடுக்கக் கூடியது. மற்றவை எல்லாம் காட்சிப் பொருள் தான். இதனை கணக்கில் கொண்டே அமெரிக்கா தற்போது காய் நகர்த்தி வருகிறது