பச்சைக்கிளியை கைது செய்த காவல்துறை!!

0
11
parrot-arrested-drug-dealers-police-raid-brazil-
Credit: Bored Panda

தென்னமெரிக்க கண்டத்தில் இருக்கிறது பிரேசில் நாடு. இங்குள்ள பியாபுயி என்னும் இடத்தில் பச்சைக் கிளி ஒன்றினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஒரு வாயில்லாத ஜீவனை இப்படியா செய்வது என ரட்சகன் நாக அர்ஜுனா போல் கோப நரம்புகள் முருக்கேறினால் சற்று அமைதி காக்கவும். உண்மையில் என்ன நடந்ததென்றால்….

-parrot-
Credit: NBC News

பிரேசில்

ஹெராயின் முதல் கஞ்சா துகள் வரை சிகார் முதல் பீடி வரை சாதாரணமாக புழங்கும் நாடுகளில் பிரேசிலும் ஒன்று. போதை எதிலெல்லாம் இருக்கிறது என மிகப்பெரும் ஆராய்ச்சி ஒன்றே அங்கு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இளைஞர்கள் இந்த சட்டவிரோதமான செயல்களைச் செய்துவருகின்றனர். இதனைத் தடுக்க அந்நாட்டுக் காவல்துறை பல முயற்சிகளை எடுத்துவருகிறது. ஆனால் உள்ளூர் பெருந்தலைகள் நேரிடியாக இந்த தொழில் இறங்கி இருப்பது காவல்துறைக்கு மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் கிளி கைது செய்யப்பட்ட கதை வேறு.

வழக்கம்போல் சென்ற வாரத்தின் மதியப் பொழுதில் பியாபுயி நகர காவல்துறை அலுவலகத்திற்கு போன் கால் வந்துள்ளது. குறிப்பிட்ட இடத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக தகவலளித்த அந்த கால் கட் செய்யப்பட்டவுடன் போலீசார் அந்த இடம்நோக்கி விரைந்துள்ளனர்.

ஆனால் அதே இடத்திற்கு பலமுறை ரெய்டுகள் நடத்தி பொலிசாரால் உருப்படியாக எதையுமே கைப்பற்ற முடியவில்லை. ஒரு சிறிய தடயம் கூட இல்லாமல் கடத்தல்காரர்கள் அனைவரும் மாயமாவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இது எப்படி என்று புரியாமல் காவல்துறையும் தவித்துவந்தது. அதற்கான விடை தான் இந்த கிளி.

பிராடு கிளி

கடைசியாக போன் கால் வந்ததுமே போலீசார் அந்த இடத்தை சுற்றிவளைத்திருக்கின்றனர். காவலர்களைப் பார்த்ததுமே இந்த பிராடு கிளி “போலிஸ் போலிஸ்” என கத்தியிருக்கிறது. இதனால் சுதாரித்த கடத்தல்காரர்கள் அந்த இடத்தை விட்டு தப்பியோடி மறைந்துவிட்டனர். ஆனாலும் கடமை தவறாத காக்கிச்சட்டைக்காரர்கள் கிளியைப் பிடித்து வந்திருக்கின்றனர்.

parrot-arrested-drug-dealers-police-raid-brazil-
Credit: Bored Panda

பறவை நிபுணர்களை வரவைத்து கிளிமூலம் கடத்தல்காரர்களின் இருப்பிடத்தை அறிய முற்பட்டிருக்கிறார்கள். ஆனால் கிளி ஒருவார்த்தை கூட பேசவில்லையாம். சாப்பிடவும் இல்லையாம். அப்படி ஒரு ட்ரைனிங்!!! இதனைக் கண்காணித்த நிபுணர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போயிருக்கின்றனர்.

இதனால் அந்தக் கிளியை அருகில் உள்ள மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்க இருக்கிறது காவல்துறை. பிரேசிலில் இதுவொன்றும் புதிதல்ல. கடைசியாக 2008 ஆம் ஆண்டு கடத்தல்காரர்களின் இடத்தைக் கைப்பற்றிய போலிஸ் அங்கு இரண்டு முதலைகளை மட்டுமே கண்டுபிடித்திருக்கின்றனர். கடத்தல்காரர்கள் தங்களது எதிரிகளை முதலைகளுக்கு உணவாக போடும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாக போலீசார் பின்னர் கண்டுபிடித்தனர்.