BREXIT – என்னதான் பிரச்சனை? யாருக்கு ஆதாயம்? பகுதி – 2

Brexit என்பது என்ன? ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான காரணங்கள் என்ன? பகுதி - 2


125
23 shares, 125 points

பிரெக்ஸிட்(Brexit) count down!

[wpcdt-countdown id=”9743″]
இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பிரித்தானியப் பேரரசு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு மிச்சமிருக்கும் நேரம் தான் மேலே ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்து பிரிட்டனாக மாறிய வரலாறு, யுனைடெட் கிங்டம் என்னும் அந்தஸ்தை இங்கிலாந்து பெற்றது குறித்து முந்தய கட்டுரையில் பார்த்தோம். முதல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். எப்போது முளைத்தது இந்தப் பிரச்சனை?

BREXIT விதை

ஆப்கானிஸ்தான், ஈரான் , ஈராக், சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட போரின் காரணமாக அங்கிருந்து வெகுவாரியான அகதிகள் ஐரோப்பாவுக்குள் தஞ்சம் புகுந்தனர். ஆரம்பத்தில் ஐரோப்பா அவர்களை வரவேற்றாலும் அதிகப்படியான அகதிகளின் வருகை கண்டு ஒன்றியம் அதிர்ந்து போனது. ஏனெனில் உறுப்பு நாடுகள் வழங்கிய நிதியில் பெரும்பங்கானது அகதிகளுக்குத் தேவையான மருத்துவம், இருப்பிடம், கல்வி வேலைவாய்ப்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கே சென்று கொண்டிருப்பதாக பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

brexit
Credit: Mirror Herold

ஐரோப்பிய ஒன்றியத்தில் அனைத்து நாடுகளுமே செழிப்பான நாடுகளென்று கருதமுடியாது. அவற்றுள் யுகே, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளே நன்கு முன்னேறியிருந்தன. குரோஷியா, போலந்து, ரோமானியா, பல்கேரியா ஆகியன குறிப்பிடத்தக்க ஏழைநாடுகளாகும். அதிகப்படியான அகதிகள் வருகை உறுப்பு நாடுகளின் நிதிப் பங்களிப்பை அதிகப்படுத்தின. அதிலும் பிரிட்டனே அதிகப்படியான நிதியை ஒன்றியத்தில் இணைந்தது முதல் வழங்கிவந்தது.

வெடித்தது போராட்டம்

தொடர்ந்து வந்த அகதிகள் வருகையால் எரிச்சலைடந்த உள்நாட்டு மக்கள் அவர்களுக்கெதிராக போராட்டம் நடத்தினர். இதனால் ஐரோப்பாவுக்குள் நுழையும் அகதிகளின் பார்வை வளர்ந்த நாடுகளான UK , பிரான்ஸ், ஜெர்மனி பக்கம் திரும்பியது. ஏழை ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களும் தங்கள் நாட்டின் வறுமையைச் சுட்டிக் காட்டி ஒன்றியத்தின் சுதந்திர குடியேற்ற விதிப்படி பிரிட்டனுக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்..  இது மரபுரிமை கொண்ட பிரிட்டிஷ் மக்களிடம் கசப்புணர்வை ஏற்படுத்தியது. காலணி நாடுகளிலிருந்து கொள்ளையடித்த செல்வங்களை எவரவர்க்கோ அனாமத்தாகக் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று யுகே அரசாங்கமும் குமுறிக் கொண்டிருந்தது. ஆனால் ஜெர்மனி மட்டும் முழுமனதோடு அதிகப்படியான அகதிகளை ஏற்றுக்கொண்டது. ஏனெனில் Euro வால் அதிகம் லாபமடைந்தது ஜெர்மனியாகதான் இருக்கும். மேலும் அங்கு தொழிற்சாலைகளும் மிகுதி.

தொழிற்புரட்சிக்கு முந்தய காலகட்டத்தில் உலக மக்கள்தொகையில் 52% மக்களை தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த இங்கிலாந்து இந்த அகதிப் பிரச்சினையில் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறது.

அப்போதைய பிரித்தானிய அரசாங்கம் “ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த நிலைமை இப்போது இல்லை “ என வருத்தம் தெரிவித்தது.

உண்மையில் பிரித்தானியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது முதல் நல்ல வளர்ச்சி பெற்றபோதும் உலக உலக நாடுகளின் வளர்ச்சிக்கு ஏற்றார்போல் தனித்துவமான வளர்ச்சி பெறமுடியவில்லை. ஒன்றியத்தில் இணைந்து சில ஆண்டுகளிலேயே பிரிட்டன் பல பொருளாதார இழப்பைச் சந்திக்க ஆரம்பித்தது. டாலருக்கெதிரான ஸ்டெர்லிங் மற்றும் பவுண்ட் மதிப்பு சரிவு, ஆசிய நாடுகளின் பொறாமைகொள்ளத்தக்க வளர்ச்சி ஆகியன பிரிட்டன் அரசாங்கத்தின் உறக்கத்தை கெடுத்துக்கொண்டிருந்தது.

தொழிற்புரட்சிக்கு முந்தய காலகட்டத்தில் உலக மக்கள்தொகையில் 52% மக்களை தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த இங்கிலாந்து இந்த அகதிப் பிரச்சினையில் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறது. ஒருபுறம் பல நாடுகள் பொருளாதார முன்னேற்றத்தில் புதிய உயரங்களுக்குச் சென்றுகொண்டிருந்தன. பிரிட்டனின் நிலைமை இருக்க இருக்க மோசமடைந்துகொண்டே வருவதாக அரசாங்கம் நினைத்தது. அதற்கென வழியும் கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுஜன வாக்கெடுப்பு

                    எனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிவிட பிரிட்டன் முடிவு செய்தது. இதனை சட்ட வரையறையாக கொண்டுவர அப்போதைய பிரதமர் ஜேம்ஸ் கேமரூனால் முடியவில்லை. எனவே இப்பெரும் சவாலான முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பை மக்களிடமே விட்டுவிட்டது அரசு.

brexit-and-the-eu
Credit: Briefings For Brexit

அதன்படி, 2016 ஜூன் 26 அன்று ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா? அல்லது இணைந்து இருக்க வேண்டுமா? என்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஓட்டுரிமை கொண்ட அனைத்து யுகே மக்களும் இதில் வாக்களித்தனர். வாக்கெடுப்பானது நான்கு UK ராஜ்ஜியங்களுக்கும் தனித்தனியாக நடந்தது. அதன்படி  வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் பெரும்பங்கு மக்கள் ஒன்றியத்தில் இணைந்திருக்கக விரும்பினர். (இங்கே Republic of Ireland வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஏனெனில் அது தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்துடனே இருக்கிறது).. ஆயினும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகயவற்றில் அதிகப்படியான மக்கள் பிரிந்து போவதையே விரும்பினர். முடிவில் ஒட்டுமொத்த UK மக்களின் விருப்பமாகப் பார்த்தால் 51.9% மக்கள் ஒன்றியத்திலிருந்து வெளியேறுதற்கே வாக்களித்திருந்தனர்.

ஒருவகையில் அரசாங்கம் எதிர்பார்த்ததும் இதைத்தான். எனவே ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கான தங்களது திட்டத்தையும், நடந்த தேர்தல் முடிவுகளையும் சமர்பித்தது பிரிட்டன். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், கூட்டங்கள் இதற்காக நடத்தப்பட்டு அடுத்த ஆண்டு அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகியுள்ளது.

 

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

125
23 shares, 125 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.