ஹவாய் நிறுவன அதிகாரியின் கைதுக்கு பின்னால் இருக்கும் உலக அரசியல்!

ஹவாய் நிறுவனத்தை வைத்து சீனாவைப் பணியவைக்கும் அமெரிக்காவின் திட்டம் பலிக்குமா?


180
28 shares, 180 points

கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி ஹவாய் நிறுவனத்தின் CFO (chief financial officer) Meng wangzou  கனடா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அன்று முதல் சீனாவிற்கும்  மேற்கு நாடுகளுக்கும் இருந்த காழ்ப்புணர்ச்சி வெளிப்படையாகவே புகையத் தொடங்கிவிட்டது. தற்போது கனாடவிலிருந்து அமெரிக்காவிற்க்கு மெங் ஐ  நாடு கடத்தும் வழக்கு விசாரணை கனடாவில் நடைபெற்று வருகிறது. மேம்போக்காகப் பார்த்தால் இது சீனாவை சீண்டிப் பார்க்கும் சாதாரண ஒரு செயலாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் இது எதிர்காலத்தில் Artificial intelligence ல் சுனாமியை ஏற்படுத்தப் போவது யார்? என்பதற்காக  நடக்கும் மறைமுக யுத்தத்தின் மாயத்தோற்றமாகும்.

MENG
Credit: straits times

மெங் வாங்ஸூ. சீனாவின் ராணி…

ஹவாய். சீனாவின் கையெழுத்தில் தொழில்நுட்பத்தின் தலையெழுத்தை ஆட்டிப் படைக்கும்  நிறுவனம். இதன் CFO   மெங் வாங்ஸூ. 46 வயதாகும் இவர் தன் உயர்நிலைக் கல்வியை பாதியில் விட்டவர். தன் தந்தையினுடைய ஹவாய் (Huawei) நிறுவனத்தில் ரிசப்னலிஸ்ட் ஆக வேலைக்குச் சேர்ந்தபின் Accountancy கல்வியில் master degree யை சீனாவில் உள்ள Huazhong University யில்  பூர்த்தி செய்தார். 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹவாய் நிறுவனத்தின் உயர்ந்த பதவியை அடைந்த மெங், அவர் கைது செய்யப்படாவிடில் அந்நிறுவனத்தின் vice president ஆகவும் பொறுப்பேற்றிருப்பார். இரண்டு முறை திருமணம் ஆன அவருக்கு முதல் மணத்தில் மூன்று மகன்களும் பின்னர் ஒரு மகளும் பிறந்தனர். தனது மகளுடன் கனடாவில் வசிக்கும் அவருக்கு அங்கேயே இரண்டு சொகுசு வீடுகளும் உள்ளன. உலகின் மூன்றாவது ஸ்மார்ட் போன் நிறுவனத்தைத் தாங்கும் அவர் தைராய்டு கேன்சரிலிருந்து மீண்டு வந்தவராவார். பல குற்றச்சாட்டோடு உயர் ரத்த அழுத்தத்தையும் தூக்கமின்மை நோயையும் சேர்த்தே சுமக்கிறார். கனடாவில் அதிக செல்வாக்கு பெற்ற மெங், அந்நாட்டு  குடியுரிமையைத் தானே புறக்கணித்த மெங், தற்போது கனடாவிலேயே கைதுசெய்யப்பட்டதற்கு மேற்கூறிய எதுவும் காரணமல்ல. சிக்கலின் பூர்வாங்கம் பற்றி அறிய அவரது தந்தையைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். Ren Zhengfei. ரென் ஆனவர் முன்னதாக சீனாவின் ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். அரசியலிலும், தொழில்நுட்பத்திலும் ஆழமான வேரூன்றிய குடும்பம்தான் இந்த ஹவாய் குடும்பம்.

வெறும் 1 சதுர கிலோமீட்டரிலேயே 10 லட்சம் ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தும் வல்லமை 5G க்கு உண்டு.

5G

“சீனாவின் உளவுத்துறை  சாதரணமாணவையல்ல. உலகின் எந்தவொரு கணினியையும் ஹேக் செய்து தகவலை எளிதாகத் திருடிவிடும். எனவே  குள்ளநரி திருடக்கூடாது! “. இது FBI ஆல் பெய்ஜிங் மீது  அடிக்கடி சுமத்தப்படும் புகாராகும். “இல்லவேயில்லை” என்று  கட்சிக் கொடியைத் தாண்டும்  பெய்ஜிங், தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் $400 பில்லியன் டாலர்களை 5G தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய முடிவு செய்தது. 5G தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கியிருந்த மேற்கு நாடுகள், 5G யைக் கைப்பற்ற வேறுவிதமாக சிந்திக்க ஆரம்பித்தன. அதுதான் சீனாவைப் புறந்தள்ளுவது. அதற்கு சீனாவின் சட்டமும் உதவிசெய்கிறது. அதுசரி, எதற்காக 5G யைக் கைப்பற்ற இந்த போராட்டம்? நாம் நினைப்பது போல் 5G தொழில்நுட்பம் மூலம் தமிழ்ராக்கர்ஸில் இருந்து வேகமாக  டவுன்லோடு செய்யமுடியும் என்பது மட்டுமல்ல. அதையும் தாண்டி அதுவொரு எதிர்கால தொழிற்புரட்சி. அதாவது மென்பொருள் உலகில் Real time Response  என்பர்.  உதாரணமாக நீங்கள் அதிவேகமாக காரில் செல்லும்போது, திடிரென குறுக்கே வரும் ஒரு நபருக்கும் உங்கள்  மூளை உங்களுடைய காலுக்கு அனுப்பும் கட்டளைக்கும் இடைப்பட்ட நேரமானது (latency) 45 மில்லி செகண்டுகள். ஆனால் 5G யின் latency நேரம் ஒரேயொரு மில்லி செகண்டுகள். ஆக, ஆளில்லா கார் ஒன்று விபத்துக்களை தவிர்த்து அதிவேகத்தில் செல்லமுடியும்.  இதுதான் 5G. குறைந்த அலைகள், அதிக அதிர்வெண்கள். 500 சதுர கிலோமீட்டர் பரப்பில் 10 லட்சம் மொபைல்போன்களை 4G கட்டுக்குள் வைக்கும் எனில், வெறும் 1 சதுர கிலோமீட்டரிலேயே 10 லட்சம் ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தும் வல்லமை 5G க்கு உண்டு. உலகின் ஒரு மூலையிலுள்ள மருத்துவர், இன்னொரு மூலையில் உள்ள நோயாளியின் மூளையை ரோபாட் கரங்கள் மூலம் அறுவைச்சிகிச்சை செய்ய முடியும். உங்களால் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து மின்சாதனங்களுடனும் பேசவும் முடியும். அதிலிருந்து உடனடி பதிலும் பெறமுடியும். இரண்டு ரோபாட்டுகள் எதிரெதிரே சந்தித்து கட்டளைகளைப் பரிமாறிக் கொள்ளவும் 5G வழிசெய்யும். முக்கியமாக முகச்சுளிப்பின்றி எங்கிருந்து வேண்டுமானாலும் ரகசியத் தகவல்களை திருடவும் பகிரவும் முடியும்!. உண்மைதான்‌. சீனாவின் 5G ஏவுகணை பற்றிய உலகநாடுகளின் பயத்தை அறிய இந்தப் பத்தியின்  தலைப்பை  மீண்டும் படியுங்கள்.

reliance jio

கடந்த சில ஆண்டுகளாகவே ஹவாய் அதிகாரிகளின் Emailகளை அலசி ஆராய்ந்து கொண்டிருந்த CIA, சமயம் பார்த்து மெங் ஐ கைதுசெய்ய கனடாவைக் கேட்டுக்கொண்டது.

ராணியா ரகசிய உளவாளியா..?

இத்தகைய  சக்தி வாய்ந்த  5G யினை ஹவாய் தான் உலகில் ஹெட்ஸ்டார்டாக (head start) பல நாடுகளில் களமிறக்க உள்ளது. இதுமட்டுமில்லாது 2017 ல் சீனா கொண்டு வந்த சட்டப்படி, “சீனாவின் தேசிய புலனாய்விற்கும், பாதுகாப்பிற்கும் தனியார் நிறுவனங்கள் துணைபுரிய வேண்டும்” . ஆக 5G பற்றிய பயத்திலிருந்த “FIVE EYES”  நாடுகள் தத்தம் அரசு அலுவலகங்களில்  சீனாவைச் சேர்ந்த ஹவாய் மற்றும்  ZTE நிறுவனத்தின் உபகரணங்களை  தடைசெய்ய முடிவு எடுத்துள்ளன. அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, யு.கே, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த FIVE EYES நாடுகளாம்.

சொல்லாமலே…..

கடந்த சில ஆண்டுகளாகவே ஹவாய் அதிகாரிகளின் Emailகளை அலசி ஆராய்ந்து கொண்டிருந்த CIA, சமயம் பார்த்து மெங் ஐ கைதுசெய்ய கனடாவைக் கேட்டுக்கொண்டது. அவர் கைது செய்யப்பட்ட நான்கு மணிநேரம் வரை அவர் கைது செய்யப்பட்ட தகவல் அவருக்குத் தெரியாது. இரண்டு நாட்கள் வரை அதற்கான காரணமும் தெரியாது.

டி- மொபைல்ஸூம்,  ஸ்கைகாமும் (skycom)

தனது மென்பொருட்கள் மூலம் அமெரிக்கப் போட்டி  நிறுவனங்களின் தொழில் ரகசியங்களை ஹவாய்  திருடுவதாக அமெரிக்கா முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது இரண்டு புதிய குற்றச்சாட்டுகளை ஹவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது. அதில் ஒன்று சற்றே பழையது. சியாட்டிலில் (USA)  உள்ள Tele communication நிறுவனமே T-Mobile’s ஆகும். தனது தொழிற்சாலையின் மூலம் ஹவாய் நிறுவனத்திற்கு ஸ்மார்ட் ஃபோன்களைத் தயாரித்து கொடுத்துக் கொண்டிருந்தது. டி-மொபைல்ஸ் தயாரித்த போன்களின் தரத்தை பரிசோதிக்கும் தொழில்நுட்பத்தை ஹவாய் கேட்கவும், அதற்கு டி மொபைல்ஸ் மறுப்பு தெரிவித்தது. ஆனாலும் தரத்தை சோதிக்கும் ரோபாட் (Tappy) ஒன்றின் கரத்தை (Robotic arm) அங்கு பணியில் இருந்த ஹவாய் ஊழியர் திருடிவிட்டு, மறுநாள் வந்து அதனை அப்பாவியாக ஒப்படைக்கும் போது மாட்டிக்கொண்டார். மேலும் சக போட்டி நிறுவனங்களின் ரகசியங்களை திருடும் ஊழியர்களுக்கு ஹவாய் அவ்வப்போது ஊக்கத்தொகை வழங்கிக்கொண்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஹவாய், அந்த ஊழியரை பணிநீக்கம் செய்தது. ஆனாலும் கோபம் கொண்ட டி மொபைல்ஸ் ஹவாயுடனான தனது ஒப்பந்தத்தை ரத்துசெய்தது.

meng_wanzhou
Credit: en.trend.az

இரண்டாவதாக, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதன்படி எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் ஈரானுடன்  தொழில்நுட்பம், மற்றும் இதர வியாபாரங்களில் ஈடுபடக்கூடாது. ஆனால், ஹவாய் நிறுவனம் தனது கிளை நிறுவனமான Skycom என்ற நிறுவனத்தின் பெயரில்  ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இதனை தான் கணக்கு வைத்துள்ள  நான்கு அமெரிக்க வங்கிகளிடம் இருந்து மறைத்ததன் மூலம் ஹவாய், ஈரான் மீதான பொருளாதார தடையை மீறி பலகோடி ரூபாய் வருமானமும் ஈட்டியுள்ளது. இதற்காக அமெரிக்கா எந்தவொரு ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அந்த ஆதராங்களையும் ஹவாய் திருடி அழித்ததாக அதன்மீதே  பழியைச்சுமத்தியது. ஆனால் ஹவாய் நிறுவனத்தின் ஊழியர்களின்  மின்னஞ்சல்கள் மட்டும் வைத்துள்ள CIA, இதுவே போதிய ஆதாரம் என்று கூறுகிறது.

என்ன செய்யும் ஓட்டோவா?

மெங் வாங்ஸூ கைதான இரண்டொரு நாட்களில் மூன்று கனடா குடிமகன்கள் சீனாவில் கைதுசெய்யப்பட்டனர். அதில் இருவர் உளவுபார்த்துள்ளனர். மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் போதைப்பொருள் கடத்தியுள்ளார் என்பது சீனாவின் குற்றச்சாட்டு. ஆனாலும் சீனா கனடாவிடையே எந்தவித வர்த்தகமும் தடைபெறவில்லை. இருபெரும் நாடுகளுக்கிடையே கனடா சிக்கியுள்ளதாக  கூறிய ட்ரூடோ, சீனாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சீனாவிற்கான தூதுவரை  பணிநீக்கம் செய்துவிட்டார். பெரும்பாலும் தனது நட்பு நாடுகளின்  வேண்டுகோளில் 90 சதவிகிதத்தினை கனடா நீதித்துறை  நிறைவேற்றியுள்ளது. $10 மில்லியன் கனடியன் டாலர் பிணையத்தொகையில் பெயிலில் வந்துள்ள மெங், தனது வீட்டிலேயே காவல் வைக்கப்பட்டுள்ளார். இந்த நாட்களில் PhD ஒன்றை முடித்துவிட தீர்மானித்துள்ள அவர், எங்கு சென்றாலும் தனது கால்களில் பொருத்தப்பட்டுள்ள GPS tracker ஐக் எக்காரணம் கொண்டு கழட்டக்கூடாது.

Justin_Trudeau_Canadian-PM-Political-Timeline-Tamil
Credit: Pinterest

ஹவாயின் பதிலும், ட்ரம்ப் நடத்தும் அரசியலும்

2018 முதல் உலகநாடுகளுடன்  வரிவிளையாட்டை நடத்தும் ட்ரம்ப், மெங் விசயத்தில் தேவைப்பட்டால் தான் நேரடியாக  நுழையவும் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைச்சுட்டிக்காட்டிய ஹவாய் இது ஒரு முழு அரசியல் நாடகமென்று உரைக்கிறது.  மேலும் தங்கள் மென்பொருள்கள், பின்வாசலற்ற முழு தனிநபர் பாதுகாப்பைக் கொண்டுள்ளது எனவும், இதுவரை எந்தவொரு நாட்டிலும் பாதுகாப்பு தொடர்பான கேள்வி எழுந்ததேயில்லை என்றும் பதிலளித்துள்ளது.  ஹவாயின் சாதனங்கள் 170 நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றாலும் அது எப்போதும் கம்யூனிஸ்ட் நிறம் படியாத ஒரு சீன நிறுவனமே என்பது ஹவாயின் கூற்று.

சீனாவின் சட்டம், ரென் அவர்களின் ராணுவத்தொடர்பு, ஹவாயின் அதிநவீன தொழில்நுட்பம், என தேசப்பாதுகாப்பை காரணம் காட்டி சீனாவின் வளர்ச்சியை தடுக்கநினைக்கும் அமெரிக்காவின் முயற்சி கைகூடுமா? தனது குடிமகளை எதிரியிடம்  சீனா எளிதில் விட்டுவிடுமா? என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

180
28 shares, 180 points
nagarajan

Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.