ரஷ்யாவோடு வர்த்தக ஒப்பந்தம் – பொருளாதாரத் தடையைச் சந்திக்குமா இந்தியா ?

பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அச்சுறுத்திய அமெரிக்காவை மீறி, ரஷ்யாவுடன் S400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது இந்தியா.


194
31 shares, 194 points

பொருளாதாரத் தடைகள் விதிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தி வந்தாலும், மண்ணில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் S-400 ரக ஏவுகணைகளை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது ஒரு வான் பரப்பு பாதுகாப்பு அமைப்பாகும்.

ரஷ்ய அதிபரின் இந்திய வருகை

இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Vladimirovich Putin) மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் ஐந்து பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ரஷ்யா, இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக இருந்தாலும், ரஷ்யாவுடன் பாதுகாப்புத் துறை வர்த்தகம் செய்யும் நாடுகளும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவுக்குச் சிறப்பு விலக்கு கிடைக்கும் என்று நம்புவதாகவும், சீனாவின் ஆயுத பலம் அதிகரித்து வருவதால், நமது ஆயுதங்களை நவீனப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் இந்தியா கூறுகிறது.

புதினின் இந்தப் பயணத்தின் போது புதிதாக ஆறு அணு சக்தித் திட்டங்கள் தொடங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது இந்தியா.

S 400 ரக ஏவுகணை

உலகிலேயே மிக நவீனமான, நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளில் S400 அமைப்பும் ஒன்று. 400 கிமீ தூரம் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கவல்ல இந்த அமைப்பு ஒரே நேரத்தில் 80 இலக்குகளைத் தாக்கி வீழ்த்த வல்லது. இந்தியாவின் அண்டை நாடான சீனாவிடம் இந்த ஏவுகணை அமைப்பு உள்ளது.

S 400 ரக ஏவுகணைகள் எவ்வாறு செயல்படும்?

Credit : BBC
  1. தொலை தூரக் கண்காணிப்பு ரேடார்கள், பொருட்களைக் கண்காணிப்பதோடு, தகவல்களைக் கட்டளை வாகனத்திற்கு அனுப்பும். அதனை வைத்துக் கட்டளை வாகனம் இலக்குகளை மதிப்பீடு செய்யும்.
  2. இலக்கை அடையாளம் கண்டவுடன், கட்டளை வாகனங்கள் ஏவுகணைகளைச் செலுத்தும்.
  3. ஏவுதல் தொடர்பான தரவுகள் ஏவு வாகனத்துக்கு அனுப்பப்பட்டு, வானில் ஏவுகணைகள் செலுத்தப்படும்.
  4. மற்றொரு ரேடார், ஏவுகணைகள் இலக்கை நோக்கிப் பயணிக்க உதவி செய்யும்.

இந்தியா பொருளாதாரத் தடையைச் சந்திக்குமா ?

இந்தியாவுக்கு இத்தகைய ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மிகவும் அவசியத் தேவை. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியது. ஆனாலும், இந்தியா இந்த அழுத்தத்துக்கு அடிபணியவில்லை என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இத்தகைய தடைகளில் இருந்து சில நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விலக்கு அளிக்க முடியும். ஆனால், அமெரிக்க அதிகாரிகள் கூறிவரும் கருத்துகள் மாறுபட்ட சமிக்ஞைகளை வெளிப்படுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது.

ஆயுதங்கள் தவிர பிற பொருட்கள் வர்த்தகம்

தற்போது இரு நாடுகளும் பாதுகாப்புத் துறையைத் தவிர பல பொருட்களை வர்த்தகம் செய்யவிருக்கின்றன என்பதோடு, இருதரப்பு முதலீடுகளும் அதிகரிக்கவிருக்கின்றன.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்கள்:

  • வைர நகைகள்
  • பெட்ரோலியப் பொருட்கள்
  • உரம்
  • இரும்பு, எஃகு
  • காகிதம் தொடர்பான பொருட்கள்
  • அணு உலை உபகரணங்கள்
  • கனிம எண்ணெய்

ரஷ்யாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள்:

  • மருந்துப் பொருட்கள்
  • இயந்திரங்கள், அவற்றின் உதிரி பாகங்கள்
  • உணவுப் பொருட்கள்
  • மசாலா பொருட்கள்
  • தேயிலை
  • விமான பாகங்கள்
  • கரிம வேதியியல் பொருட்கள்

அமெரிக்கா தனது பொருளாதாரத் தடை எனும் ஆயுதத்தை இந்தியா மீது செலுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

194
31 shares, 194 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.