இந்தியா – பாகிஸ்தான் இடையே ரூ. 2.7 லட்சம் கோடி வர்த்தக வாய்ப்பு – உலக வங்கி அறிக்கை

0
11
indo-pak trade
Credits : Defense News

யாராவுது இரண்டு பேர் எதிரிகளாக இருந்தால் இங்கு அவர்கள் இருவரும் இந்தியா – பாகிஸ்தான் போல என்று தான் சொல்வார்கள். என்ன காரணம் என்றே தெரியாத குழந்தை கூட சொல்லி விடும் பாகிஸ்தானிற்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம் என்று. இவ்வளவு ஏன் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நடக்கும் கிரிக்கெட் விளையாட்டைக் கூட நாம் இரு நாடுகளுக்கு இடையேயான போராகத் தான் பார்க்கிறேன். அவ்வளவு தூரம் புரையோடிப் போய் இருக்கிறது நம் பங்காளிச் சண்டை.

இந்நிலையில்,  இந்தியா – பாகிஸ்தான் இடையே ரூ. 2.7 லட்சம் கோடி வர்த்தக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் பல்வேறு காரணங்களால் வர்த்தகம் வெகுவாகப்  பாதிக்கப்பட்டுள்ளது என்றும் உலக வங்கி தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Credit : Catch

வர்த்தக அறிக்கை

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள உலக வங்கி, இந்தியா பாகிஸ்தான் இடையே 3700 கோடி டாலர் வர்த்தக வாய்ப்பு உள்ளன. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையில் நீடித்து வரும் அரசியல் பகைமை காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்காசிய அளவிலான வர்த்தக ஒப்பந்தங்களிலும் இதன் தாக்கம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் இயல்பான வர்த்தக உறவிலும் சிக்கல் இருப்பதால், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த சங்கிலித் தொடர் உத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. உயர் மதிப்பிலான வர்த்தகத் துறை தேக்கமடைந்துள்ளது என்று அவ்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தியாவிலிருந்து 1209 பொருட்கள் இறக்குமதி செய்வதை பாகிஸ்தான் நீண்ட காலமாகவே தடை செய்து வைத்துள்ளது.

தற்போதைய வர்த்தக முறை

இந்தியாவிலிருந்து வாகா வழியாக 138 பொருட்களை மட் டுமே இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அனுமதிக்கிறது. இந்த வழியில் பொருட்களைக் கொண்டு செல்லும் டிரக்குகள் எல்லைக் கோடு வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதன் பின்னர் வேறு டிரக்குகளுக்குப் பொருட்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக நேரமும், செலவும் அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Credit : Sareen

தெற்காசிய அளவிலான வர்த்தகத்தில் பாகிஸ்தான் 82.1 % பொருட்களை வர்த்தக கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி செய்கிறது. ஆனால், இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து 1209 பொருட்கள் இறக்குமதி செய்வதை பாகிஸ்தான் நீண்ட காலமாகவே தடை செய்து வைத்துள்ளது.

ஆனால், பாகிஸ்தான் இறக்குமதி செய்ய தடை செய்துள்ள பல பொருட்கள் அந்த நாட்டு வழியாக சவுதி அரேபிய நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என்ன இருந்தாலும் நமக்கென இருக்கும் ஒரே ஒரு நேரடி எதிரி பாகிஸ்தான் தான். அவர்களை நம்மால் விட்டுக் கொடுக்க முடியுமா என்ன?