கைக்கடிகாரத்தை திருடினாரா அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்?

0
33

அமெரிக்காவின் அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் முகமூடியை அணிந்து இளைஞர் ஒருவர் கொள்ளையடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் இருக்கிறது குயின்ஸ்லாந்து மாகாணம். இங்கு கடை ஒன்றை 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உடைத்து உள்ளே இருந்த பொருட்களை திருடி இருக்கிறார். கருப்பு நிற உடையுடன் அந்த முகமூடி மனிதன் உபர் ஈட்ஸ் பைகளை வைத்திருந்திருக்கிறார். கடையின் கண்ணாடிப் பகுதியை சுத்தியலால் உடைத்து திறக்க முயன்ற மிஸ்டர் முகமூடியின் திட்டம் பலிக்கவில்லை. மிகவும் போராடி ஒரு வழியாக கதவை உடைத்து உள்ளே போய் விழுந்திருக்கிறார்.

trump fake mask

கடைக்குள் இருந்த விலை உயர்ந்த கை கடிகாரங்களை எடுத்து தனது கைகளுக்குள் போட்டுக்கொண்டது வீடியோ மூலம் தெரியவந்திருக்கிறது. அதுவும் போதாதென்று அருகிலிருந்த எலக்ட்ரானிக் கடையினுள் சென்று தனது கைவரிசையை காட்டி உள்ளார் முகமூடி. இது தொடர்பாக குயின்ஸ்லாந்து மாகாண காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். ஆனால் சமூக வலைதளங்களில் மக்கள் டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து கலாய்த்து வருகின்றனர்.

Credit: vosizneias

ட்ரம்ப் முகமூடியை அணிந்து திருட்டு குற்றங்களில் மனிதர்கள் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் இரண்டு சகோதரர்கள் ட்ரம்ப்பின் முகமூடியை அணிந்து வங்கி ஒன்றில் ஆட்டையை போட்டார்கள். போலீசார் ஒருவழியாக அவர்களைப் பிடித்து குலுக்கியதில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தி ஜாக்கல் என்னும் படத்தை பார்த்து திருட ஆசை வந்ததாக தெரிவித்தனர். ஆனால் ஏன் ட்ரம்ப் முகமூடியை பயன்படுத்தினார்கள் என்ற விபரத்தை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அப்படி என்ன சொல்லிருப்பாங்க? கடவுளுக்கே வெளிச்சம். ஒரு பெரிய மனுஷன்னு கூட மதிக்காம இப்படி பண்ணிட்டாங்க என அப்போதும் ட்ரம்ப் ஆதரவு இணையவாசிகள் குமிறிக்கொண்டிருந்தார்கள்.

மிஸ்டர் முகமூடியின் வேலைகளைப் பார்க்க கீழே கிளிக் செய்யவும்.