பேஸ்புக் தலைவரின் பதவி பறிபோகிறதா?

0
98
Facebook CEO Mark Zuckerberg testifies before the House Energy and Commerce Committee hearing in Washington
Credit: Engadget

உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க்கிற்கு சிக்கல்கள் வலுத்துவருகின்றன. அமெரிக்க அரசாங்கம் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குதாரர்களிடையே ஏற்பட்டுள்ள சலசலப்புகள் மார்க்கின் தலைவர் பதவிக்கு நெருக்கடி அளிக்க காத்திருக்கின்றன.

Facebook CEO Mark Zuckerberg testifies before the House Energy and Commerce Committee hearing in Washington
Credit: Engadget

பேஸ்புக் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் மார்க்கிடம் தான் உள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் நிர்வாகக்குழு தலைவராகவும் மார்க்கே உள்ளது மற்ற முதலீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசாங்கம்

பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும் என பேசப்பட்டாலும் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வழக்கம்போல் ஏறுமுகத்திலேயே இருந்தது. அதேசமயத்தில் அந்நாட்டு நீதித்துறை பேஸ்புக்கின் மீதான தகவல் திருட்டு குற்றத்திற்காக பெருமளவு பணத்தை அபராதமாக வசூலிக்க திட்டமிட்டு வருகிறது.

அமெரிக்க மக்கள் பெரும்பாலானோர் பேஸ்புக் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். அரசாங்கம் பற்றி எளிதில் விவாதிக்கும் மேடையாக பேஸ்புக் இருப்பதும் அங்குள்ள அரசியல்வாதிகளின் கண்களை உறுத்துகிறது. இத்தனை சவாலான விஷயங்களை மார்க் தனியொருவராக சந்தித்து வெற்றிபெறுவாரா என்பது தான் அந்த நிறுவனத்தின் கவலையாக இருக்கிறது.

முதலீட்டாளர்கள் மோதல்

கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக தனது தலையீட்டை பேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலக்கிக்கொள்வதாக மார்க் அறிவித்திருந்தார். ஆனால் அதன்பின்னர் அதுகுறித்த நடவடிக்கைகளில் அவர் ஈடுபடவில்லை என்பதுதான் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மார்க்கின் மீது வைக்கும் குற்றச்சாட்டு.

fb
Credit: Yahoo7 News

பேஸ்புக் நிறுவனத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்டவராக மார்க் இருப்பதுதான் அவர்களுடைய கவலையாக இருக்கிறது. இதனால் நிறுவனத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்றும், எதிர்கால சிக்கல்களுக்கு தீர்வுகாணுவதில் காலதாமதம் ஏற்படும் என முதலீட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தனது பொறுப்புகளை குறைத்துக்கொள்வதாக அறிவித்திருந்த மார்க் அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டது என்பதை உணர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.