வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு – அணு ஆயுதம் ஒழிக்கப்படுமா ??

0
9

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் தென் கொரியா மற்றும் அமெரிக்காவோடு இதற்கு முன்னர் மேற்கொள்ளாத வகையிலான சந்திப்புகளை  வட கொரியா நடத்தி வருகிறது.

இருதரப்பும் பொதுவான நோக்கங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில், தென் கொரிய அதிபர் வட கொரியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறை.

நாட்டாமையாகச் செயல்படுவதில் தென் கொரியா முக்கியப் பங்காற்றி வருகிறது. வட கொரியாவில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ளவதற்காகத் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-in) மற்றும் அவரது மனைவி கிம் ஜாங்-சூக் இன்று காலை வடகொரியத் தலைநகர் பியோங்யாங் (Pyongyang) சென்றடைந்தனர்.

கடந்த பத்து ஆண்டுகளில், தென் கொரிய அதிபர் வட கொரியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறை.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புத் தொடங்கி, வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னோடு (Kim Jong-un) தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் நடத்தும் 3-வது சந்திப்பு இதுவாகும்.

Credit : La Trobe University

1953 – ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தோடு கொரிய போர் முடிவுக்கு வந்தாலும், எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.

இரு நாட்டுத் தலைவர்களும், அணு ஒழிப்புக்கான நடைமுறை செயல்பாடுகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பான விவரங்கள் தெரியவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு தென் கொரியத்  தரப்பில் இரு நோக்கங்கள் உள்ளன.

  • இரு கொரியாக்களுக்கு இடையில் மேலதிக ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்.
  • அணு ஒழிப்புப்  பிரச்சனையில் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்படுவது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு கொரியாக்களின் தலைவர்கள் சந்தித்ததே முக்கியமானதொரு நிகழ்வாக அமைந்தது.

இந்தச் சந்திப்பின்போது, அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக நடைமுறைபடுத்தக் கூடிய நடவடிக்கைகளை எடுப்பதில் மூன் முன்னேற்றம் காண வேண்டும்