ரயில் மற்றும் பேருந்துகளில் இனி பெண்களுக்கு இலவச பயணம் – அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

0
70
Arvind-kejriwal-
Credit: Moneycontrol

டெல்லியில் இனி பெண்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார். இதனால் ஆண்டுக்கு ரூபாய் 700 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்ற போதிலும் அம்மாநில அரசு இந்த முடிவை அறிவித்திருக்கிறது.

Arvind-kejriwal-
Credit: Moneycontrol

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. இது அம்மாநில மக்களிடயே அக்கட்சியின் செல்வாக்கு சந்தித்த பின்னடைவை தெளிவாக குறிப்பிட்டு உள்ளதால் இந்த முடிவை கெஜ்ரிவால் எடுத்துள்ளார். மேலும் அம்மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதால் மக்களிடையே நற்பெயர் வாங்கியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் கெஜ்ரிவால். அதன் விளைவே இந்த புதிய திட்டங்கள்.

டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் பெண்கள் இதன்மூலம் இலவச பயணத்தை மேற்கொள்ளலாம். பேருந்துகளில் பயணிக்க போதிய வசதிபடைத்தவர்கள் தாமாக இந்த சலுகையை ஏழை மக்களுக்கு வழங்கிடவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

delhi-metro
Credit: NDTV.com

டெல்லி முழுவதிலும் உள்ள 40 லட்சம் பயணிகளில் சுமார் 30 சதவிகிதம் பெண்கள் தான். இது பெண்கள் பாதுகாப்பிற்கான முக்கிய திட்டமாக இருக்கும் என அம்மாநில துணை முதலமைச்சர் மனிஷ் சிசொடியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்க டெல்லியில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது முதல் காயை கெஜ்ரிவால் நகர்த்தியிருக்கிறார். ஆனால் இது அந்த கட்சிக்கு எம்மாதிரியான பயனைக் கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.