“என் கைய பிடிச்சு காங்கிரசுக்கு ஓட்டுப்போட வச்சுட்டாங்க” – அமேதி தொகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

0
50
congress

மக்களவைத் தேர்தலுக்கான 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று ஏழு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஸ்ம்ரிதி இராணி ராகுலை எதிர்த்து களம் காண்கிறார்.

இதனிடையே வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் மூதாட்டி ஒருவர் பேசும் வீடியோ ஒன்றினை மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி ராணி தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த வீடியோவில் பேசும் மூதாட்டி ஒருவர் “தன்னை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும்படி செய்து விட்டனர். ஆனால் நான் பாஜக விற்கு வாக்களிக்க தீர்மானித்திருந்தேன்”, என்று கூறியிருக்கிறார். இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்மிருதி இராணி, ராகுல் காந்தி வாக்கு சாவடியை கைப்பற்ற தொண்டர்களை ஊக்குவிக்கிறார் என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகர் ஒன்றை அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அம்மூதாட்டியின் அவர் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.