இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் கிடைக்க உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா

ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்தியாவைப் பாதிக்காத வண்ணம் உதவ அமெரிக்கா முன் வந்துள்ளது.


184
29 shares, 184 points

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை நவம்பர் 4 – ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், டிரம்ப் தலைமையிலான அதிகாரிகள் குழு, பொருளாதாரத் தடையால் கச்சா எண்ணெய் தேவையில் இந்தியாவிற்குப் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு டிரம்ப் தலைமையிலான அரசு ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தினை ரத்து செய்தது. அது மட்டும் இல்லாமல் ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளது.

பொருளாதாரத் தடைகள்

ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையின் முதற்பகுதி ஏற்கனவே அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்தியா உட்படப் பிற உலக நாடுகள் அனைத்தும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியினை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

எந்த நாடுகள் எல்லாம் ஈரான் உடன் வர்த்தகத்தினைத் தொடர்கிறதோ அவர்களுக்கு அமெரிக்க வங்கி மற்றும் நிதி அமைப்பில் இருந்து தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

iran crude oilஒத்துழைக்காத 5 நாடுகள்

இருப்பினும் இதற்கு இங்கிலாந்து, ரஷ்யா உட்பட 5 நாடுகள் ஒத்துழைக்காமல் ஈரான் உடன் வர்த்தகத்தினைத் தொடர்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காகவே ஐரோப்பிய யூனியன் புதிய பரிவர்த்தனை முறையினை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவிற்கு பாதிப்பு

ஈரானில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையானதாக உள்ள நிலையில், அமெரிக்கா விதித்துள்ள தடையால் தற்போது இறக்குமதியினைக் குறைத்துள்ளது மட்டுமில்லாமல் விரைவில் முழுமையாக நிறுத்த உள்ளது.

Credit : TOI

ஒருவேளை இந்தியா முழுமையாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை  நிறுத்தும் நிலையில் மிகப் பெரிய தட்டுப்பாடு நிலவும். இது குறித்து அமெரிக்காவிடம் தெரிவித்துள்ள இந்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மட்டும் விலக்கு கேட்டது.

இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த அமெரிக்கா தற்போது தங்களது நண்பனான இந்தியாவிற்குத் தங்கு தடையின்றிப் பிற நட்பு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயினைப் பெற்றுத் தர முடிவு செய்துள்ளது.


Like it? Share with your friends!

184
29 shares, 184 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.