காலையில் சீக்கிரம் கண் விழிக்க 5 வழிகள்

வாழ்வில் இருக்கும் அனைத்துப் பிரச்சனைகளிலும் தலையாயப் பிரச்சனை இது தான். அலாரம் வைத்துக் குறித்த நேரத்தில் கண் விழிப்பது.


106
78 shares, 106 points

நம் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவாலே அதிகாலையில் கண் விழிப்பது தான். கண் விழித்து விட்டால் எந்த சவால்களையும் சந்திக்கலாம். ஆனால், அதற்கு முதலில் நாம் எழுந்திரிக்க வேண்டுமே. மாணவர்கள் தொடங்கி பணிக்கு செல்பவர்கள் வரைக்கும் அனைவருக்குமே இந்தப் பிரச்சனை இருக்கிறது.

அதிகாலை சீக்கிரம் எழுந்திரிப்பதற்கு சில எளிய வழிமுறைகளை இக்கட்டுரையில் காணலாம்.

குறைந்த அளவு இரவு உணவு

இரவு உறங்கச் செல்வதற்கு முன் அதிகமான அளவு உணவு உண்பதைத் தவிர்ப்பது நல்லது. வயிறு முட்ட உணவு உண்பதால் மறுநாள் விழிக்கும் போது மிகவும் சோம்பலாக உணரத் தோன்றும். அதிகமான அளவு உணவு உண்பதால் அஜீரணக் கோளாறு உண்டாகலாம். ஆகவே, இரவு உறங்கச் செல்வதற்கு முன் குறைந்த அளவு உணவு உண்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மிகவும் குறைந்த அளவு உணவை உட்கொள்வதால் நடு இரவில் பசி எடுக்கும் நிலை உண்டாவதால் உறக்கம் கெடுகிறது. மிதமான அளவு உணவை உட்கொள்வதால் தூக்கம் தடைபடாமல் தூங்க முடிகிறது. இதனால் மறுநாள் காலை விரைவாக எழ முடிகிறது.

மின்னணு கேட்ஜெட்களை நிறுத்தி வைப்பது

உறங்கச் செல்வதற்கு முன் ஏதாவது படிப்பது, இசையைக் கேட்டு ரசிப்பது, கணினி அல்லது தொலைக்காட்சியைப் பார்ப்பது போன்றவற்றைப் பழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால், இந்தப்  பழக்கங்கள் பல நேரங்களில் நமது உறக்கத்தைக் கெடுக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. ஆகவே, நம்மை நீண்ட நேரம் விழிக்க வைக்கும் இத்தகைய மின்னணுச் சாதனங்களை உறங்கச் செல்லும் முன் நிறுத்தி வைப்பது நல்லது. மின்னணுச்  சாதனங்களை உறங்கும் நேரத்தில் கையாளுவதால் தூக்கம் பாதிக்கப்பட்டு , மறுநாள் காலை சீக்கிரம் எழ முடியாமல் அந்த நாளின் வேலை பாதிக்கப்படுகிறது.

படுக்கைக்கு அருகில் அலாரம் கடிகாரம்  வைக்காமல் இருப்பது

படுக்கையில் அல்லது படுக்கைக்கு அருகில் அலாரத்தை வைத்துக் கொள்வதால், அலாரம் அடிக்கும் போது, உடனடியாக அதனை நிறுத்தி விட்டு மறுபடி தூக்கத்தைத் தொடருவது நமது வாடிக்கையாக உள்ளது. ஆகவே, அலாரத்தைப் படுக்கையை விட்டுத் தொலைவாக வைத்துக் கொள்வதால், அலாரம் அடித்துக் கொண்டே இருக்கும். அதனை நிறுத்த எழுந்து வர வேண்டியிருக்கும். இதனால் தூக்கம் தடைபடும். விரைவாக விழித்து விடுவதால் நாம் திட்டமிடும் வேலையும் பாதிக்காது.

தூங்கச் செல்வதற்கு முன் தண்ணீர் பருகுவது

இரவில் உறங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும். இதனால் சிறுநீர்ப்பை செயல்பாடு சிறந்த முறையில் ஏற்பட்டு, மறுநாள் காலையில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். இதனால் தூக்கம் தொலைந்து விழிப்பு உண்டாகும். அதே நேரம், மிக அதிக அளவு தண்ணீர் பருகுவதால், சிறுநீர்ப்பை நிரம்பி, நடு இரவில் சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றி தூக்கம் தடை படலாம். சிறுநீரகம் தொடர்பான தொந்தரவுகள் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.

குளிர்ந்த நீரில் குளிப்பது

தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தவுடன் படுக்கையில் இருந்து எழுந்து கொள்வது நல்லது. படுக்கையிலேயே மீண்டும் புரண்டுக் கொண்டிருந்தால் மறுபடி தூக்கம் தழுவக் கூடும். ஆகவே, தூக்கம் தெளிந்தவுடன் படுக்கையில் இருந்து எழுந்து, உங்கள் தினசரிக் கடமைகளை ஆற்றத் தொடங்குங்கள் . பல் துலக்குவது, காலைக் கடன்களைச் செய்வது போன்றவற்றைத் தொடங்குங்கள். இதனைச் செய்வதால் தூக்கம் தொலைந்து சுறுசுறுப்பாக மாறுவீர்கள். தூக்கம் முழுவதும் தொலைய, குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.


Like it? Share with your friends!

106
78 shares, 106 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.