பெண்களுக்கு மன அழுத்த பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள்

வீட்டு வேலைகள், அலுவலகம், குழந்தை வளர்ப்பு என்று சமூகக் கட்டமைப்பில் பெரும் பங்கினை பெண்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். ஆனால், குடும்பத்தின் மீது காட்டும் அக்கறையை பெண்கள் தங்கள் உடல்நலன் மற்றும் மனநலன் மீது காட்டுகிறீர்களா ?


153
62 shares, 153 points

நாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநலப் பிரச்சனைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் பெண்களுக்கு அந்த வாய்ப்புகள் அதிகம். பெண்களின் வித்தியாசமான உயிரியல் கட்டமைப்பும், ஹார்மோன்களும், அவர்களின் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன. பெண்களுக்கு வரக் கூடிய பொதுவான சில மனநலப் பிரச்சனைகள் பின்வருமாறு:

மன இறுக்கம் (Depression)

உலக சுகாதார அமைப்பின் கூற்றின் படி, பெண்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சனைகளில் மிகவும் பொதுவான ஒன்றாக இருப்பது மன இறுக்கமாகும். அதே சமயம், ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் ஏராளமாக இருக்கலாம். இதற்குக் காரணம், பெரும்பாலான சமயங்களில் அவை வெறும் திடீர் மனநிலை மாற்றங்களாக வந்து சென்று விடுகின்றன, ஏதோ சில நாட்கள் நீடிக்கும் மன இறுக்கமாகக் கருதப்படுகின்றன, அவை தானாக சரியாகிவிடும் என்று கண்டுகொள்ளப்படுவதில்லை.

Credit : Everyday Health

உண்மையில், மனதை வருத்தும் சோகமும், நம்பிக்கையின்மையும் இருக்கும் நிலையே மன இறுக்கமாகும். தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாகத் தூங்குவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, நம்பிக்கை இழந்த உணர்வோடு காணப்படுவது, தன்னைப் பற்றிய மதிப்பின்றி இருப்பது, சோர்வாக இருப்பது போன்றவை மன இறுக்கத்தின் பிற அறிகுறிகளாகும். மேலே குறிப்பிட்ட அறிகுறிகளும், திடீர் மனநிலை மாற்றங்களும், எரிச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகியவையும் மன இறுக்கம் உள்ளது என எச்சரிக்கும் அடையாளங்களாகும்.

இந்த அறிகுறிகளில் ஒன்றோ, சிலவோ இரண்டு வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடித்தால், உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்றுத் தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

பயம் மற்றும் மனக்கலக்கக் கோளாறுகள் (Panic and anxiety disorders)

பெரிய செயல்களைச் செய்யும் முன்பு, ஒருவருக்கு ஓரளவு பயமாகவும், மனக்கலக்கமாக இருப்பதும் சகஜம் தான். ஆனால், அந்த பயம் நீங்காமல் தொடர்ந்து இருப்பதும், சமூக மற்றும் மனம் சார்ந்த செயல்பாடுகளைப் பாதிக்கும் அளவுக்கு இருப்பதும் உங்களை எச்சரிக்கும் அடையாளங்களாகும். இளம் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் பெண்களில் பலரும் பயக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அதற்கு அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பதற்றம், பரபரப்பு, களைப்பு, தூக்கம் வராமை, தொடர்ந்து ஏதேனும் நினைவுகளை அசைபோட்ட படி இருப்பது, கவலைப்படுவது போன்றவை மனக்கலக்கக் கோளாறுகளின் அறிகுறிகளில் சிலவாகும். பயக்கோளாறு உள்ளவர்களுக்கு, திடீரென்று காரணமின்றி பயம் கொள்வார்கள், அந்த சமயங்களில் இதயத்துடிப்பு அதிகரிக்கும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும், மயக்கம் ஏற்படும், உளறுவார்கள், தொண்டை அடைத்துக்கொள்ளும்.

Credit : Paras

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒருவருக்கு அடிக்கடி தென்பட்டால், குறித்த நேரத்தில் ஓர் உளவியல் நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

சாப்பிடுவது தொடர்பான கோளாறுகள் (Eating disorders)

ஒரு பெண்ணின் உடல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த சமூகத்தின் எதிர்பார்ப்பும், சாப்பிடுவது குறித்த கோளாறுகள் பெண்களுக்கு ஏற்பட ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. ஆண்களை விட, பெண்களுக்கே சாப்பிடுவது தொடர்பான கோளாறுகள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு ஏற்படும் சாப்பிடுவது தொடர்பான பொதுவான கோளாறு பசியின்மையாகும்.

மெலிந்து  இருப்பவர்கள் எல்லோருக்கும் பசியின்மைப் பிரச்சனை உள்ளது என்று கருத முடியாது

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள், எடை குறைவாக இருக்கும், உடல் எடை கூடிவிடும் என்று அதிகம் பயப்படுவார்கள். புலிமியா (Bulimia) என்பது பெண்களுக்கு வரும் மற்றொரு பிரச்சனையாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள், பிறகு, உடல் எடை கூடுவதைத் தடுப்பதற்காக வாந்தி எடுத்து உணவை வெளியேற்றுவார்கள்.

இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சனைகளில், ஆஸ்துமா மற்றும் வகை -1 நீரிழிவு நோய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் நாள்பட்ட பிரச்சனை பசியின்மை ஆகும். எனினும், மெலிந்து  இருப்பவர்கள் எல்லோருக்கும் பசியின்மைப் பிரச்சனை உள்ளது என்று கருத முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கோ, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ எப்போதும் உடல் எடை கூடிவிடும் என்ற பயம், உடல் எடை பற்றிய கவலை இருந்தால், ஓரிரு வாய் சாப்பிட்டுவிட்டு அத்தோடு போதும் என்று சொல்லும் பழக்கம் இருந்தால், அவர்கள் உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

153
62 shares, 153 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.