வெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 4

0
14
Vellungal_Parkkalaam_Logo

போட்டியில் 10 கேள்விகள் கேட்கப்படும். சென்ற வார போட்டியில் கேள்விகள் சற்று கடினம் என்று பலரும் கூறியதால் இம்முறை கேள்விகள் சற்றே எளிதாக கேட்கப்பட்டிருக்கின்றன. கேள்விகள் அரசியல், சமூகம், கலை-இலக்கியம், பொது அறிவு, விளையாட்டு முதலிய எந்த பகுதியில் இருந்தும் கேட்கப்படலாம்.

இப்போட்டி பற்றி உங்களது கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை கூறி புத்தகங்களைப் பரிசாக பெறும் வாய்ப்பை பெறலாம். குலுக்கல் முறையில் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சென்ற வார போட்டியில் பங்கேற்று புத்தகங்களை பரிசாக பெற்றோர் (மூவர் மட்டும்) விவரம் நேரடியாக முகநூலில் தெரிவிக்கப்படும்.

 1. 1 குச்சிப்புடி நடனம் எந்த மாநிலத்தில் புகழ்பெற்றது?

  1. ஆந்திரா
  2. கேரளா
  3. கர்நாடகா
  4. தமிழ்நாடு
  Correct!
  Wrong!

  சரியான பதில்: ஆந்திரா

 2. 2 திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

  1. 130
  2. 140
  3. 123
  4. 133
  Correct!
  Wrong!

  சரியான பதில்: 133

 3. 3 உலகப்புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர் யார்?

  1. ரவீந்திரநாத் தாகூர்
  2. ரவிவர்மா
  3. லியொனார்டோ டா வின்சி
  4. வின்சென்ட் வான்கோ
  Correct!
  Wrong!

  சரியான பதில்: லியொனார்டோ டா வின்சி

 4. 4 "இந்தியாவின் நுழைவாயில்" என்று அழைக்கப்படும் நகரம் எது?

  1. மும்பை
  2. டெல்லி
  3. புனே
  4. சென்னை
  Correct!
  Wrong!

  சரியான பதில்: மும்பை

 5. 5 உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?

  1. சுரதா
  2. கண்ணதாசன்
  3. பாரதிதாசன்
  4. திரு.வி.க
  Correct!
  Wrong!

  சரியான பதில்: சுரதா

 6. 6 மகாபலிபுரத்தில் எத்தனை ரதங்கள் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ளன ?

  1. 7
  2. 5
  3. 3
  4. 2
  Correct!
  Wrong!

  சரியான பதில்: 5

 7. 7 கோவில் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

  1. காஞ்சிபுரம்
  2. தஞ்சாவூர்
  3. மதுரை
  4. திருச்சி
  Correct!
  Wrong!

  சரியான பதில்: மதுரை

 8. 8 இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?

  1. டிராம்பே
  2. தாராப்பூர்
  3. கல்பாக்கம்
  4. தூத்துக்குடி
  Correct!
  Wrong!

  சரியான பதில்: டிராம்பே

 9. 9 வயலும் வயல் சார்ந்த இடமும் எது?

  1. குறிஞ்சி
  2. முல்லை
  3. மருதம்
  4. பாலை
  Correct!
  Wrong!

  சரியான பதில்: மருதம்

 10. 10 அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்! இது யாருடைய கவிதை?

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. வைரமுத்து
  4. கண்ணதாசன்
  Correct!
  Wrong!

  சரியான பதில்: பாரதியார்

  'வெல்லுங்கள் பார்க்கலாம்' போட்டியில் பங்கெடுத்தமைக்கு நன்றி. முகநூல் மற்றும் ட்விட்டரில் இப்போட்டி பற்றி பகிர்ந்து, TNPSC, UPSC, வங்கிப் பணி தேர்வுகள் போன்ற போட்டி தேர்வுகளுக்காக பயின்று வரும் பிறரையும் இப்போட்டியில் பங்கெடுக்க செய்யலாம். மதிப்பெண்கள் பொருட்டல்ல என்பதை நினைவில் கொண்டு முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். இங்கே, இப்பதிவின் கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில், உங்கள் கருத்துக்களை பதிவிட்டு புத்தகங்களை பரிசாகப் பெறுங்கள். (மூவருக்கு மட்டும்) இந்த போட்டி பற்றி கருத்துகளையும், விமர்சனங்களையும் வரவேற்கிறோம். ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமையன்று 'வெல்லுங்கள் பார்க்கலாம்' போட்டி தொடர்ந்து நடைபெறும்.

வெல்லுங்கள் பார்க்கலாம் – போட்டி எண்: 4

Created on
 1. Quiz result
  You scored
  Correct!
  Share Your Result
 2. Quiz result

  You scored
  Correct!
  Share Your Result