இயற்பியல் மற்றும் மருத்துவத்திற்காக நோபல் பரிசுகள் அறிவிப்பு

0
9

ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்தப் பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.

அந்த வகையில் ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுகளை பெறுவோரின் பெயர் அறிவிப்பு நேற்று முதல் துவங்கியது.

இயற்பியல் துறையில் நோபல் பரிசு

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின் (Arthur Ashkin), பிரான்சை சேர்ந்த ஜெரார்டு மௌரோ (Gérard Mourou), கனடாவைச் சேர்ந்த டோனோ ஸ்டிரிக்லேண்ட் (Donna Strickland) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டோனா, 55 வருடங்களுக்குப் பிறகு இயற்பியலில் நோபல் பரிசு பெரும் முதல் பெண் என்பது குறிப்பிடத் தக்கது.

nobel prize - physics“ஒளியியல் சாமணம் மற்றும் உயிரியல்” அமைப்புகளுக்குத் தொடர்பான ஆராய்ச்சியில் பெரும் பங்களிப்பு அளித்ததன் காரணமாக ஆர்தர் அஷ்கினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேப் போல் ஜெரார்டு மௌரோ மற்றும் டோன்னா ஸ்ரிக்லாண்ட் ஆகியோரின், “அதிக தீவிரம், தீவிர குறுகிய ஒளியியல் பருத்துகளை உருவாக்குவதற்கான இன்றியமையா முறைமைக்காக” நோபல் பரிசு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்திற்கான நோபல்

புற்றுநோய் சிகிச்சையில் ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற பாதைத் திறப்புக் கண்டுபிடிப்பைச் செய்ததற்காக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அல்லிசன் (James P. Allison), மற்றும் ஜப்பானின் டசூகு ஹோஞ்சோ (Tasuku Honjo) ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு கிடைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது.

 நம் உடலில் உள்ள இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றலை இன்னும் அதிகப்படுத்தி, தூண்டி, புற்றுநோய் செல்களை அதி தீவிரமாகத் தாக்கும் கேன்சர் சிகிச்சையில் புதிய பாதைத் திறப்பை இவர்கள் இருவரும் மேற்கொண்டனர்.

nobel prize - medicineஜேம்ஸ் பி.அல்லிசன், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில், புரோட்டீன் ஒன்று தடையாகச் செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்தார். இந்தத் தடையை உடைத்து விட்டால் நம் நோய் எதிர்ப்புச் சக்தி செல்கள் புற்றுநோய்க்கட்டிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்தும் என்பதைக் கண்டறிந்தார். இதனையடுத்து புற்றுநோய் சிகிச்சையில் இதுவரை இல்லாத புதிய அணுகுமுறைக்கான கருத்தாக்கத்தை அவர் வளர்த்தெடுத்தார்.

இதற்கு சமமாக ஜப்பானிய மருத்துவ விஞ்ஞானி டசூகு ஹோஞ்சோவும், இதே உடல் எதிர்ப்புச் சக்தியில் புரோட்டீனின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இதுவும் தடை ஏற்படுத்துவதாக அவர் முடிவுக்கு வந்தார். ஆனால், இது வேறு ஒருமுறையில் நோய் எதிர்ப்பு சக்தியை செயலாற்ற விடாமல் செய்கிறது என்பதைக் கண்டறிந்தார்.

இதனையடுத்து இருவருமே நோய் எதிர்ப்பு ஆற்றல் அமைப்பில் உள்ள இந்தத் தடைக்கு தடை சிகிச்சை செய்தால் புற்றுநோயை விரட்ட முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். இவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல் என்று கருதப்படுகிறது.