இனி அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் கீறல்களை 20 நொடிகளில் ஒட்ட வைக்க முடியும்!

0
117

மருத்துவ துறையில் அறுவை சிகிச்சைகளின் போது ஏற்படும் மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று கட்டுப்பாடற்ற இரத்தப்போக்கு. உடனடியாக இரத்தப்போக்கை நிறுத்த முடியாமல் போகும் போது தான் பல உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. சீனாவில் உள்ள ஜீஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தை (Zhejiang University of Medicine) சேர்ந்த விஞ்ஞானிகள் கீறல்களில் இருந்து வெளிப்படும் ரத்தப்போக்கை உடனடியாக நிறுத்த ஒருவித உயிரி பசையை (Bio Glue) அண்மையில் உருவாக்கியுள்ளனர். உடைந்த பொருட்களை உடனடியாக ஒட்ட நாம் பயன்படுத்துவோமே feviquick, கிட்டத்தட்ட அது மாதிரி தான் இதுவும். வெறும் 20 நொடிகளில் எந்த கீறலை மூடிவிடுமாம் இந்த உயிரி பசை!!

surgeryCredit: Business insider

இது இது ஒரு நச்சு இல்லாத ஜெல் போன்ற பசை.  இதை நீர், ஜெலட்டின் மற்றும் சில வேதி பொருட்களை கொண்டு தயாரித்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த பசை கீறல் அல்லது காயத்தின் மீது வைக்கப்பட்டவுடன் UV ஒளி மூலம் செயல்படுத்தப்படுகிறது. 

இந்த ஜெல் 290 mmHg இரத்த அழுத்தம் வரை தாங்க கூடியது!!

இந்த பசை UV ஒளி பட்டவுடன் திடமாகி நீர் கூட புக முடியாத படி 6mm அளவுக்கு பரவி, கீறலை மூடி விடும். இதனால் ரத்தக்கசிவு உடனடியாக நிறுத்தப்படும். இதன் பிறகு எந்த ஒரு தையலும் தேவை இல்லை. காரணம் இந்த பசையே அந்த அளவு பாதுகாப்பானது.

சிறப்பம்சங்கள் 

ஏற்கனவே பயன்பாட்டில் சில வகை பசைகள் இருந்தாலும் அவற்றில் சில குறைபாடுகள் இருக்க தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக சில வகை பசைகள் ஈரமான திசுக்களில் சரியாக ஒட்டாது. சில வகைகளோ உடலின் உறுப்புகளில் ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தை தாங்கும் படி இருப்பதில்லை. ஆனால் இந்த பசை ஒரு இணைப்பு திசு போலவே செயல்படும் என்பதால் இது ஈரமான வழவழப்பான திசுக்களில் உள்ள கீறலை கூட மூடி ரத்த கசிவை நிறுத்தி விடும்.

மனித இணைப்பு திசு கட்டமைப்பின் அடிப்படையில் இந்த ஜெல் இருப்பதால், இது உடலின் அனைத்து உள்ளுறுப்புகள் மற்றும் தமனிகளுக்கு ஏற்றதாக உள்ளது.

உறுப்பில் உள்ள திசு மற்றும் ஜெல்லுக்கு இடையில் இருக்கும் கரிம சேர்மங்கள், UV கதிர் படும் போது, திசுக்களின் புரோட்டினில் உள்ள அமினோ குழுக்களுடன் வினைபுரிந்து வலுவான பிணைப்புகளை உருவாக்குகின்றன. இதனால் இவற்றால் அதிக அழுத்தத்தையும் தாங்க முடியும். இந்த ஜெல் 290 mmHg இரத்த அழுத்தம் வரை தாங்க கூடியது. அதாவது வழக்கமாக தற்போது மருத்துவர்கள் பயன்படுத்தும் பசைகளை விட மிக அதிக அழுத்தத்தை தாங்க கூடியது. இதனால் இந்த ஜெல் மூலம் இதயத்தில் ஏற்படும் துளை, காயங்கள் மற்றும் ரத்த கசிவை கூட  சரி செய்ய முடியும்.

இந்த பசை இன்னும் மனிதர்களில் சோதனை செய்யப்படவில்லை. ஆனால் பன்றிகள் மற்றும் முயல்களிடம் சோதனை செய்ததில், பொதுவாக அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல்கள் அல்லது மருத்துவர்கள் பயன்படுத்தும் சில வகை பசைகளை விட திறன் வாய்ந்ததாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.

சோதனைகளின் போது முயலின் கல்லீரலில் ஏற்பட்டிருந்த இரத்தக் கசிவை சில நொடிகளில் இந்த பசை நிறுத்தியுள்ளது. அதே போல பன்றிக்கு நடந்த இதய அறுவை சிகிச்சையின் போது கரோட்டி தமனியின் துளையை ஒரு நிமிடத்திற்குள் மூடி சரி செய்துள்ளது. மேலும் இதய சுவரில் இருந்த துளைகளையும் மூடியுள்ளது. அதே சமயம் இதை கொண்டு மூடி ரத்த கசிவை நிறுத்திய இடத்தில் மிக சிறிய அளவு வீக்கமே காணப்பட்டுள்ளது.

சிகிச்சை மேற்கொண்ட பன்றிகளை தொடந்து கண்காணித்த போது அவற்றிற்கு எந்த கோளாறுகளும் ஏற்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

இந்த பசையை பயன்படுத்துவதில் எந்த ஒரு குறையோ சிக்கலோ கிடையாது!

சோதனை முடிவுகள் 

சோதனைகளின் போது முயலின் கல்லீரலில் ஏற்பட்டிருந்த இரத்தக் கசிவை சில நொடிகளில் இந்த பசை நிறுத்தியுள்ளது. அதே போல பன்றிக்கு நடந்த இதய அறுவை சிகிச்சையின் போது கரோட்டி தமனியின் துளையை ஒரு நிமிடத்திற்குள் மூடி சரி செய்துள்ளது. மேலும் இதய சுவரில் இருந்த துளைகளையும் மூடியுள்ளது. அதே சமயம் இதை கொண்டு மூடி ரத்த கசிவை நிறுத்திய இடத்தில் மிக சிறிய அளவு வீக்கமே காணப்பட்டுள்ளது.

Bio GlueCredit: Good News Network

சிகிச்சை மேற்கொண்ட பன்றிகளை தொடந்து கண்காணித்த போது அவற்றிற்கு எந்த கோளாறுகளும் ஏற்படவில்லை. இந்த பசையை பயன்படுத்துவதில் எந்த ஒரு குறையோ சிக்கலோ இல்லை என்பதால் முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்றும் இது குறித்த அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகின்றன என்றும் கூறியுள்ளனர் இந்த குழுவினர்.

பன்றிகளின் உடல் உறுப்புகள் பெரும்பாலும் மனித உறுப்புகள் அளவிலேயே இருப்பதால் இது மனிதர்களுக்கும் நிச்சயம் பயன்படும் என்றும், இன்னும் 3-5 வருடங்களில் இதை கொண்டு மனிதர்களுக்கு எளிமையாகவும் பாதுகாப்பாகவும் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் இந்த குழுவை சேர்ந்த விஞ்ஞானிகள். ஒருவேளை இது மனித பயன்பாட்டிற்கு வந்தால் இதன் மூலம் பல உயிர் இழப்புகளை நிச்சயம் தவிர்க்க முடியும். என்பது தெளிவாகியுள்ளது.

 

உயிரி பசை எப்படி வேலை செய்கிறது?