பெங்களூரின் ப்ளே ஆப் கனவை கலைத்த மழை!!

0
20
koli

ஐ.பி.எல் வரலாற்றில் இப்படியான இக்கட்டான சூழ்நிலைகள் வருவது சகஜம் தான். ஆனால் அவையனைத்தும் பெங்களுரு அணிக்கு எதிராகவே வருவது தான் சோகம். நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெங்களுரு அணிக்கு இருந்த சொற்ப வாய்ப்பையும் நேற்று வருணபகவான் தடுத்துவிட்டார். பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் மற்றும் பெங்களுரு அணிகள் நேற்று பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

m_chinnaswamy_stadium_bangaloreப்ளே ஆப் சுற்றுக்கு நான்காவதாக நுழையப்போகும் அணி எது என்பதுதான் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது. இதற்காக ஹைதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் பெங்களுரு அணிகள் காத்திருந்தன. பெங்களுருக்கு வாய்ப்பா? ஆமாம். நேற்றைய போட்டியில் ஒருவேளை பெங்களுரு அணி வெற்றிபெற்றிருந்தால் அந்த அணிக்கு குறைந்தபட்ச வாய்ப்பு இருந்திருக்கும்.

எப்படி?

முதல் மூன்று இடங்களில் உள்ள சென்னை, டெல்லி, மும்பை அணிகள் அடுத்துவரும் போட்டிகளில் வென்று, பெங்களுரு மீதமுள்ள போட்டிகளில் நல்ல ரன் ரேட்டில் வெற்றிபெற்றால் பெங்களுரு அணி ப்ளே ஆப் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு அதிகம் இருந்தது.

ஆனால் நேற்றைய மழையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் பெங்களுரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் பெங்களுரு அணி போட்டியைவிட்டு வெளியேறியிருக்கிறது.

rcbvsrr-5 ஓவர் மேட்ச்

டாஸில் வென்ற ஸ்மித் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்பிறகு பிறகு மழை வெளுத்துவாங்கியது. சுமார் 3 மணிநேரம் மழை மைதானத்தைவிட்டு அகலவே இல்லை. கடைசியாக வருணபகவான் வாய்ப்பு கொடுக்கவே போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

கோலியும் – டிவிலியர்சும் ஓப்பனிங் இறங்கி அதிரடி காட்டினர். வருண் ஆரோனின் முதல் ஓவரில் கோலி இரண்டு சிக்சர்களை தெறிக்கவிட்டார். அதே ஓவரில் டிவிலியர்சும் இரண்டு பவுண்டரிகளை விரட்டினார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் கோபால் ஓவரில் கோலி சிக்ஸர் அடித்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது பெங்களுரு அணி. கோலி, டிவிலியர்ஸ், ஸ்டோய்னஸ் ஆகியோர் அடுத்தடுத்த பந்தில் அவுட் ஆக கோபால் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார்.

koli5 ஓவர் முடிவில் பெங்களுரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை எடுத்தது. அடுத்துவந்த ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை தனது ஆட்டத்தை ஆரம்பிக்கவே நடுவர்கள் போட்டியை ரத்துசெய்வதாக அறிவித்தனர். பெங்களுரு அணி தோடரை விட்டு வெளியேறுவது இது 3 வது முறையாகும்.