கால்பந்து உலகின் அடுத்த சூப்பர்ஸ்டார் – பீலேவை நினைவுபடுத்தும் எம்பாப்பே !

ஆரம்ப காலங்களில் ஒரு ஜோடி ஷூ வாங்க இயலாமல் கஷ்டப்பட்ட இளைஞன் இன்று 2000 கோடி சொத்துக்களுக்கு அதிபதி என்றால் நம்ப முடிகிறதா? தன் இலட்சியத்தை நிறைவேற்ற முழுவீச்சில் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக மாறியிருக்கிறார் கிலியன் எம்பாப்பே. உலக கால்பந்து ரசிகர்களின் புதிய நாயகன். மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் கலவை இவரென ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.


203
298 shares, 203 points

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கால்பந்து உலகக் கோப்பையை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெற்றுள்ளது பிரான்ஸ். இறுதிப்போட்டியில் குரேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று 1998க்குப் பிறகு, இரண்டாவது முறையாக பிரான்ஸ் கோப்பையை வென்றுள்ளது.

இந்த உலககோப்பைத் தொடரில் பிரான்ஸ் ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறார் 19 வயதேயான இளம் வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé). மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் வரிசையில் கால்பந்து உலகின் நட்சத்திரமாக ஜொலிக்கிறார் எம்பாப்பே.


நேற்றைய இறுதிப் போட்டியில் கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து பிரான்சின் வெற்றியை உறுதி செய்தார். இவர் அடித்த அந்த கடைசி நான்காவது கோல், அத்தனை பிரமாதமான கோல் இல்லை என்றாலும், அவரின் அந்த கோலுக்கு பின், அந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு பின் பெரிய கதை இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டின் மிகவும் பின்தங்கிய கருப்பின கிராமத்தில் பிறந்த எம்பாப்பே பலமுறை நிறவெறியின் காரணமாக சக வெள்ளை வீரர்களால் ஒதுக்கப்பட்டிருக்கிறாராம். வறுமையின் பிடியிலும் பள்ளி அணியில் விளையாடியது, தேர்வில் ஷு இல்லாமல், ஷு வாங்க வழியில்லாமல் விளையாடியது, பின் கல்லூரி அணியில் சில நாட்கள் விளையாடியது, சிறு சிறு குட்டி கிளப்புகளில் விளையாடியது என்று இவரது வாழ்க்கையும், சாதனையாளர் பீலேவின் (Pelé) வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

ஆக்ரோஷமாக விளையாடும் பாணி, விட்டுக்கொடுக்காத மனோதிடம், உழைப்பு என்று சோர்ந்து விடாமல் போராடி கிளப்புக்களில் கொஞ்சம் கொஞ்சமாக புகழை அடைந்த பாப்பே, இன்று பெரும் நட்சத்திரமாக மாறியிருக்கிறார். களத்தில் பந்தை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாது, உன்னுடைய காலில் இருந்து பந்து வெளியேறினால் அது சக அணி வீரருக்கு செல்ல வேண்டும், இல்லை கோல் கம்பத்திற்குள் செல்ல வேண்டும் என்று நினைப்பாராம் எம்பாப்பே. ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சிறிதும் சோர்வுறாமல் ஆக்ரோஷமாக ஆடும் திறன் பெற்றவர் எம்பாப்பே. இப்போது இவர் தான் உலகிலேயே இரண்டாவது காஸ்ட்லியான வீரர்.

இந்த உலகக்கோப்பையில் பழைய நாயகர்களையெல்லாம் ஓரம் கட்டி புது நாயகனாக உலக ரசிகர்கள் உருவெடுத்திருக்கிறார் எம்பாப்பே.இந்தமுறை உலகக்கோப்பையில் இருந்து அர்ஜென்டினா வெளியேற முக்கிய காரணமாக இருந்த எம்பாப்பே ரொனால்டோவின் தீவிர ரசிகர்.இவர் தன் அறையில் ரொனால்டோவின் படங்களை மாட்டி வைத்திருப்பாராம்.

கிட்டத்தட்ட பீலே போலவே வாழ்க்கை வரலாற்றை கொண்டுள்ள இவர், பீலே போலவே ஒரு சாதனை செய்துள்ளார். 60 வருடத்திற்கு முன்பு 1958ஆம் ஆண்டு சுவீடனுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி போட்டியில் 17 வயதான பீலே கோல் அடித்தார். அப்போது அவர் தான் இளம் வீரர். தற்போது அந்த சாதனையை 19 வயதே நிரம்பிய எம்பாப்பே செய்துள்ளார். அதேபோல் இந்த தொடரில் சிறந்த வீரர் என்று விருதையும் பெற்று இருக்கிறார்.

இது தான் தொடக்கம் , இன்னும் பல மைல்கள் கடக்கவிருக்கும் கிலியன் எம்பாப்பே சந்தேகத்திற்கு இடமின்றி வருங்கால கால்பந்து உலகின் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்வார்.


Like it? Share with your friends!

203
298 shares, 203 points

Comments

comments

Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.