கம்பருக்கு முன்னால் தமிழகத்தில் இருந்த இராமாயணம்?

சிலப்பதிகாரம் தரும் இராமாயணச் செய்திகள்!!


138
32 shares, 138 points

தமிழகத்தைப் பொறுத்த வரை இராமாயணம் என்றாலே கம்பர் இயற்றிய நூல் என்பது தான் நினைவிற்கு வரும். ஆனால், கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு முன்பே தமிழகத்தில் இராமாயணம் இருந்திருக்கிறது. உண்மை தான். 12 – ஆம் நூற்றாண்டில் கம்பர் இராம காதையை எழுதினார். “செஞ்சொற் கவி இன்பம்” எனப் புகழும் படி அக்காப்பியத்தில் தமிழிலக்கியத்தின் உச்சத்தினை தொட்டிருப்பார் கம்பர். அவரைப் பாராட்டும் விதமாகவே இராம காதைக்கு, கம்ப இராமாயணம் எனப் பெயரிடப்பட்டது.

kambar
Credit: Wikipedia

வால்மீகி ராமாயணம்

கிமு. 4 – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வால்மீகி முனிவரால் முதன்முதலில் இராமாயணம் இயற்றப்பட்டது. சரித்திர ஆசிரியர்கள் இந்நூலை ஒரு வரலாற்றுப் புனைவு நூலாகக் குறிப்பிடுகிறார்கள். வால்மீகியைத் தொடர்ந்து பல மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டது. அப்படித் தமிழ் மொழியில் வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்த்தவர் தான் கம்பர். ஆனாலும், தன் மொழிப்புலமை, கற்பனைத் திறன் ஆகியவற்றால் மூல காப்பியத்தை விட எந்த விதத்திலும் குறைவில்லாதபடியாய் இராம காதையை இயற்றினார். இவரும் ஒட்டக்கூத்தரும் சமகாலத்தவர்கள்.

கவிச்சக்கரவர்த்தி ..

வால்மீகி இராமாயணத்துடன் ஒப்பிடுகையில் பல இடங்களில் கம்பராமாயணம் முரண்படுகிறது. தமிழறிஞர் பலர் தமிழ் நாகரீகத்திற்குத் தக்கவாறு இராமாயணத்தைக் கம்பர் மாற்றியிருக்கிறார் என்கிறார்கள். வால்மீகி பல பாடல்களில் விவரித்த காட்சிகளை ஒன்றிரண்டு வரிகளுடன் கம்பர் கடக்கிறார். இப்படிப் பன்னிரெண்டாயிரம் கவிதைகளிலும் தனித்துவம் காட்டுகிறார் கம்பர். ஆனால் கம்பர், இராமாயணத்தை இயற்றுவதற்கு முன்பே தமிழகத்தில் அந்நூலின் கருத்துக்கள் பரவியிருக்கின்றன.

rama
Credit: Pinterest

தமிழகத்தில் இராமாயணம்

தமிழகச் சிற்றூர்கள் பலவற்றிலும் ராமர் மண்டபம், ராமாயணக் கூடம் என்னும் பகுதி இருக்கிறது. இவை இராமாயணத்தை வாய்வழிக் கதைகளாக மக்களுக்கு எடுத்துரைக்கும் இடங்களாக இருந்தவை. வட நாட்டிற்குப் பயணம் செய்தோர் அங்குள்ள மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த இராமாயணத்தைக் கற்றனர். தாய்நாடு திரும்பியதும் அக்கருத்துக்களை மக்களிடம் போதிக்க ஆரம்பித்தனர். இப்படித் தொடங்கி, வளர்ந்த கதையைத் தான் கம்பர் பின்னாளில் இயற்றினார். கம்பரின் காலமான 12 – ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் இராமாயணக் குறிப்புகள் உள்ளன.

அறிந்து தெளிக !!
இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் கி.பி. 2 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கம்பருக்குச் சுமார் 10 நூற்றாண்டுகளுக்கு முன்பே இளங்கோ இராமாயணச் செய்திகளைப் பதிவிட்டிருக்கிறார்.

சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் ராமன் மற்றும் இலக்குமன் ராவணனைத் தோற்கடித்ததைப் பற்றிய பாடல் இருக்கிறது.

மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியேச வடிசேப்பத் தம்பிெயாடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவிெயன்ன செவியே
திருமால் சீர் கேளாத செவிெயன்ன செவியே

மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் சேர்கிறான் கோவலன். பிழைப்புக் கருதி மதுரை மாநகர் செல்லும் வழியில் கவுந்தியடிகளைச் சந்திக்கின்றனர் தம்பதியர். அப்போது கவுந்தியடிகள் கோவலனிடத்தில், இராமன் சீதையோடு கானகம் புகுந்ததை விவரிக்கிறார்.

தாதை யேவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீயறிந் திலயோ நெடுமொழி யன்றோ

                                                                                                                                            – ஊர்காண் காதை

இப்படிக் கம்பருக்கு முன்பே தமிழகத்தில் இராமாயணம் பரவியிருந்தது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஆனாலும் இவையெல்லாம் கம்பராமாயணத்தின் பெருமையைச் சற்றேனும் குறையச் செய்யவில்லை. ஏனெனில், கம்பர் சொல்லின் வித்தகன். அதனால் தான் யாமறிந்த புலவர்களிலே கம்பனைப்போல் இளங்கோவைப்போல் வள்ளுவனைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை எனப் பாரதி வியந்தோதுகிறார்.


Like it? Share with your friends!

138
32 shares, 138 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.