‘வாட்ஸ் அப்’ அறிமுகப்படுத்த இருக்கும் 5 புதிய வசதிகள்

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் விரும்பப் படும் தகவல் தொடர்புச் செயலியான வாட்ஸ் அப் பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்க உள்ளது.


142
42 shares, 142 points

செய்திப் பரிமாற்றத்தில் சிறந்து விளங்கும் செயலியாகத் தற்போது வாட்ஸ் அப் உள்ளது. உலக அளவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களும், இந்தியாவில் 250 மில்லியன் மக்களும் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டு புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பின் அடுத்த 5 அப்டேட்டுகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை,

1. ஸ்வைப் டூ ரிப்ளை: (Swipe to Reply)

ஸ்வைப் டூ ரிப்ளை ஏற்கெனவே வாட்ஸ் அப் iOS – இல் பயன்பாட்டில் உள்ளது. தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சனில் சோதனையில் உள்ளது. ஸ்வைப் டூ ரிப்ளை என்பது நாம் பதில் அனுப்ப வேண்டிய செய்தியின் மீது விரல் வைத்து வலது புறமாக நகர்த்தினால் ரிப்ளைக்கான வசதி வரும். தற்போது குறிப்பிட்ட செய்தியின் மீது நீண்ட நேரம் அழுத்துவதன் மூலமே ரிப்ளை வசதி பெற முடியும்.

2. பிக்சர் இன் பிக்சர் மோட்: (Picture-in-Picture mode)

PiP என்று அழைக்கப்படும். பிக்சர் இன் பிக்சர் மோட் iOS – இல் பயன்பாட்டில் உள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டுக்கும் வர உள்ளது. PiP யின் படி பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூபின் வீடியோ லிங் வாட்ஸ் அப் மூலமாக அனுப்பப்பட்டால், அந்த வீடியோ வாட்ஸ் அப்பிலேயே சிறிய திரையில் ஒளிபரப்பாகும். தேவை என்றால் அந்த வீடியோவை முழு திரையிலும் மாற்றிப் பார்க்கும் வசதியும் உள்ளது.

3. ஆட்ஸ் ஃபார் ஸ்டேட்டஸ் (ads for Status)

ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யும் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட உரையாடல்கள் எந்த விதத்திலும் பாதிக்காது எனக் கூறப்பட்டுள்ளது.

4. பிஸ்கட் ஸ்டிக்கர் பேக்: (‘Biscuit’ sticker pack)

வாட்ஸ் அப் தனது இமோஜிகளையும், ஸ்டிக்கர்களையும் அடிக்கடி புதுப்பித்து வருகிறது. அதன் படி பிஸ்கட் ஸ்டிக்கர் பேக் என்ற புதிய வசதியின் கீழ் புதிய ஸ்டிக்கர்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்யவுள்ளது.

5. இன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன்: (inline image notifications)

இன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன் ஆண்ட்ராய்டின் பீட்டா வெர்சன் 2.18.291 ல் சோதனையில் உள்ளது. இன்லைன் இமேஜ் நோட்டிஃபிகேஷன் என்பது வாட்ஸ் அப்பில் நமக்கு அனுப்பப்படும் புகைப்படங்களை சிறிய அளவில், நோட்டிஃபிகேசனிலேயே பார்க்கும் வசதியாகும். இந்த வசதி புகைப்படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஜிஃப் மற்றும் வீடியோக்களுக்கு பொருந்தாது என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.


Like it? Share with your friends!

142
42 shares, 142 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.