பின்னணி இசையுடன் பதிவுகள் இடும் வசதியை வழங்க இருக்கிறது முகநூல்

முகநூல் பயனாளிகள் தங்களது பதிவுகளில் இசையையும் சேர்க்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


176
62 shares, 176 points

சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான வலைதளமாக இருப்பது பேஸ்புக் தான். வாட்ஸ் ஆப்பை எல்லோரும் பயன்படுத்தினாலும், பேஸ்புக்கில் படங்கள் மற்றும் கருத்துகளைத் தெரிவித்து, லைக் மற்றும் கமெண்டுகளை அள்ளுவதே இளைஞர்களின் நோக்கமாக உள்ளது.

இதனால், கருத்து மழையும், செல்ஃபி மழையும் முகநூலில் பஞ்சமில்லாமல் பெய்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இசை மழையையும் பொழிய வைக்க முடிவு செய்துள்ளது பேஸ்புக். ஆம், பேஸ்புக்கில் நாம் பதிவு செய்யும் கருத்துகள், போட்டோ மற்றும் வீடியோ பதிவுகளுடன் இசையையும் இணைக்கலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான வசதியை பேஸ்புக் நிறுவனம் தற்போது சேர்த்துள்ளது.

இந்த வசதியைப் பெற வேண்டும் என்றால், முதலில் புகைப்படம் அல்லது காணொளியைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு ஸ்டிக்கர் ஐகானைத் (Sticker Icon) தெரிவு செய்து, அங்கு இருக்கும் பட்டியலில் உங்களுக்கு விருப்பமான இசையைத் தேர்வு செய்ய வேண்டும். அல்லது, உங்களுக்குத் தேவையான பாடலைக் கூட, அதில் பதிவேற்றிப் பயன்படுத்த முடியும். முகநூலில் இடம் பெற்று இருக்கும் பாடலில் உங்களுக்குத் தேவையான பகுதியைத் தேர்வு செய்து கொள்ளவும். இந்தப்  பதிவில், பாடல் தலைப்பு மற்றும் பாடியவர் விவரம் ஆகியவை  ஸ்டிக்கர் வடிவில் முன்பே இடம் பெற்று இருக்கும்.

இது மட்டுமின்றி அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக மியூசிக்கலி (Musical,ly) போன்றே லிப் சின்க் லைவ் இசையைச் சேர்க்கும் வசதி வழங்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனமானது இசைத் துறையில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இத்தனை அம்சங்கள் தற்போதைக்குக் குறைந்த நபர்களுக்கு மட்டுமே வழக்கப்பட்டு வருகின்றன. சோதனை முடிந்த பின் அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பேஸ்புக்கில் படம், வீடியோ உடன் இசையை கேட்டு ரசிக்கலாம்.


Like it? Share with your friends!

176
62 shares, 176 points

Comments

comments

Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.